அரசின் அரியணை மந்திரம்...!


நாட்டை வேட்டையாடும்
தலைவர்கள் கையில்
அம்பாய் வீசும்
அரசியல் தலைகள் இதோ

உணவு துறையின் கலப்படம்
கழிவு பிணமாய் மருத்துவ
துறைக்கு அடிமையாகிறது

மருத்துவ துறையின் முதல்
இடம் வருவாய் துறையில்
வளம் பெறுகிறது

வருவாய் துறையின் இருப்பிடம்
கல்வி துறைக்கு காசு சேர்க்க
கட்டளையிடுகிறது

கல்வி துறை போக்குவரத்துதுறைக்கு
பொழுது போக்காய் மாறி
பணி துறைக்கு பதவிப்பிரமாணமாய்
உளவு துறை பெயருடன்

விண் வழி துறை முதல்
தரை வழி துறை வரை
ஊழல் தாலாட்டில் உறங்கா இரவில்

கடத்தல் கட்டிலில் கணக்கு போடும்
கைபேசி தொடரில் பாடர் தாண்டியும்
பத்து பைசாவில் ஊரே சாகிறது

ஓடும் ரயிலில் வெடிக்கும்
விபத்தில் உதவும் கரங்களாய்
உதட்டில் பேசி பகட்டில்
வெளியாகும் செய்தித் தாளை

நாளை துடைக்கும் குப்பை
தொட்டியில் கசக்கி எறியும்
காகித கப்பலாய் காலம் கடத்துகிறது
அரசின் அரியணை மந்திரம்.....!No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...