தாய் தந்தையே தெய்வம்...!


முன்னூறு நாட்கள் தவமிருந்து உன்னை
முழுகாமல் பெற்றெடுத்த தங்கமே - நீ
தொண்ணூறு நாட்கள் கட்டிலிட்டவளுக்காக
தொட்டிலிட்டவளை துரத்தியடிப்பது முறையா ....!

திரும்பிப்பார் உன் திருமுகம் இத்தரணியில்
திசை காட்டும் போது என் மருமுகமாய்
உன் திருமுகம் அறிமுகமாகும் அன்று நீ
பிறைமுகமாய் தேயும் விழிநீரில் விதையாகாதே ....!

ஒருமுக கூட்டில் உயிர் வாழும் பறவைபோல்
ஒற்றுமை வீட்டில் உயரமான விழுதுகளாய்
பின்னி பிணைந்து பிறர் துயர் போக்கி
எண்ணிலடங்கா விழுதுகளை தாங்கும் நிலம் போல

நம் தலை முறை வட்டத்தில் தவமிருப்போம்
முதியவர் இல்லா காப்பகத்தை துறந்து
அன்பென்னும் மருந்தாய் பண்பென்னும்
பாதையில் பவனிவருவோம் அன்னையும்
பிதாவும் முன்னறி தெய்வமாய் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...