பொய் சொல்லல் நல்லதடி காதலியே ..!


பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

காணததைச் சொல்லென்று சொன்னாலும் - நீ
உயிரென சொல்லென்று சொன்னாலும்
மனதை உடைத்திட வந்தாலும் - சாதல்
மீண்டும் வந்துன்னிடம் தந்தாலும்

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

பின்னவளை கொஞ்சியும் நின்றாலும் - கண்
முன்னவள் அஞ்சிட நின்றாலும்
மனதார குறையாக நின்றாலும் - இதயம்
தின்னவளே என்று சொன்னாலும் - நீ

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

3 comments:

 1. கொஞ்சும் வரிகள்... ரசிக்க வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 2. இன்றும் 44 கவிதைகள்... Reader-ல் படித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...