அ முதல் ஃ வரை ....!


அரும்பு மீசையில் முடங்கிய காதல்

ஆசை நாயகியாய் ஆடை மொழி கொண்டு

இதயத்தில் இம்சை அரசியாய் துடிப்பில்

ஈருயிர் ஓர் உடலாய் உள் நின்று

உலாவரும் சாலையில் மெய்கண்ட விழிகள்

ஊமை மொழியால் காதல் மொழியில்

எண்ணில் அடங்கா கனவுகளை தீட்டும்

ஏவுகணையாய் வின்சென்று மண்சென்று வித்திடும்

ஐம்புலன்களையும் அடக்கி அதிரும் எண்ணத்தில்

ஒன்றின் ஒன்றாய் உரசும் இரவில்

ஓங்கார கனவிசையில் உயிரை அறுத்து

ஒளவ்வியமாய் பவ்வியம் கொள்ளும் காதலியே

ஃ அறியாத நிலையிலும் உன் இரு விழி நடுவில் நானே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்