காதல் ஒரு பண்டமாற்று முறை ...!


முதலில் இரு இதயங்கள்
இடம்மாறுகிறது

இன்பங்கள் கனவாகிறது
துன்பங்கள் தொலைவாகிறது

வார்த்தைகள் வயர்லெஸ்ஸாகிறது
வாழ்க்கை வரவா ...? செலவா.....?

என்று புரியாமல்
ஒற்றை ரோஜாவில்

பிரிந்தவர் சேர்வதும்
பிடிக்காதவர் பிரிவதும்

சேர்ந்தவர் மகிழ்வதும்
சேராதவர் சேர்வதும்

புதியன தேடலும்
பழையன புகுதலுமாய்

கலரின் அடிப்படையில்
காதலர் தினம்

களைகட்டுகிறது நாடெங்கும்
பண்டமாற்றும் முறையில் .......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...