சினிமா - கதை



சினிமா...?

கதை டைபிங் பார்வை உங்கள் ஹிஷாலீ 

ஒரு ஊருல ஒரு ராஜாவாம் 

என்னங்க இது பழையப் பாணியிலே சொல்லுறேங்க கொஞ்சம் புதுசா சொல்லுங்களேன் 

ஓகே ஓகே 

கதா நாயகன் : குகன் 
கதா நாயகி : வர்ஷா 
மற்றும் பலர் சேர்ந்து நடிக்கும் படம் 
பெயர் : பைத்தியம் தெளிந்தது

குகன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் படிப்பறிவில்லா அறிவாளி 
இவனின் பொழுது போக்கு சினிமா பார்ப்பது தான் எந்தப் படம் வந்தாலும் முதலில் பார்த்துவிடுவான் பார்த்ததோடு மட்டுமில்லாமல் அப்படியே நடித்து பார்ப்பான் ஏன் அந்தக் கதாப்பாத்திரம் போலவே மாறிவிடுவான் இப்படியே இருக்கையில் அவன் பெற்றோர்கள் இவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி வைத்தார்கள் அப்போதும் குகன் திருந்தவில்லை தொடர்ந்து படத்திற்கு செல்வான் ஒரு தனி அறையில் போய் நடித்துப் பார்ப்பான் 
ஆடுவான் பாடுவான் 

இதைக்கண்ட குகன் மனைவி ஒரு பைத்தியத்தை கட்டி வைத்து என் வாழ்க்கையே வீணடித்து விட்டேர்களே என்று தன் தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள் 

குகன் வருத்தப்படவில்லை காலம் கடந்தது திடிரென்று ஒரு திருப்பம் குகன் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டது 

குகன் இருக்கும் ஊருக்கு ஒரு பெரிய டைரக்டர் வருகிறார் அங்கு வந்து ஒரு கிராமப்புறக் கதையை எடுக்கப் போறதாகவும் அதற்கு நல்ல பையன் வேண்டும் என்று தேடுகிறார் 

உடனே குகனை பற்றி ஊரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் 

குகனை காண அந்த டைரக்டர் செல்கிறார் 

குகனை பார்த்ததும் அவருக்கு பிடித்துவிட்டது குகனும் நடிக்க ஒகே சொல்லிவிட்டான் 

இதைக் கேட்ட வர்ஷா தன் கணவன் ஒரு பைத்தியம் இல்லை என்று திரும்பவும் தன் கணவனை தேடி வருகிறாள் 

மறுநாள் சூட்டிங் ஆரம்பம் குகனுக்கு என்ன வேடம் என்றால் பைத்தியக்கார வேடம் நடிக்க ஒப்புக்கொண்டான் தனக்கு கொடுத்த கதாப்பத்திரத்தில் கொஞ்சம் கூட மாறாமல் அழகாக நடித்துக் காட்டினான் படம் முடிந்தது டைரக்டர் ஆல்தி பெஸ்ட் சொல்லி அனுப்பி வைத்தார் 

குகன் வீட்ற்கு வந்தான் அம்மா அப்பா காலில் விழுந்து அழுதான். அப்போது கூறினான் குகன் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் தான் ஆனால் அதற்கு முன் எத்தனை கஷ்டங்களை தாண்டி அவர்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என்று உணர்ந்தேன் என் நடிப்பால் மேலும் சினிமாவில் எந்த கதாப்பாத்திரம் என்றாலும் நடித்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கு இருந்தும் சிலர் பணம் சம்பாதிக்க நடிப்பார்கள் சிலர் பதவிக்காக நடிப்பார்கள் சிலர் தான் கலைக்காக நடிப்பார்கள் 

என்ன ஒன்று நடிகர், நடிகைகள் மட்டும் உலகில் உள்ள அனைத்து வகையான உடைகள் அணிகலன்கள் அனுபவிக்க வேண்டிய அத்தனை உடமைகளையும் அனுபவிக்கலாம் மற்றபடி பேரும் புகழும் சம்பாதிக்கலாம் நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத இடைத்தைக்கூட எளிதில் பார்த்துவிடலாம் வாழ்க்கையில் இது மட்டும் போதும் என்று நினைக்காமல் பொது சேவையை மனதில் நிறுத்தி நடிக்கும் கதைகளுக்கே விருதுகள் வழங்கப்படுகிறது என்று புரிந்தேன் அம்மா 

கதைக்காக வாழும் போது நாட்டை விட்டு வீட்டை விட்டு செல்ல நேரிடும் என்றும் இதனால் பெண்கள் தான் எத்தனையோ கஷ்டங்களை உணருகிறார்கள் என்றும் அறிந்தேன் 

தனியொரு சுதந்திரம் இல்லாமல் தனக்கென ஒரு சுதந்திரத்தில் வாழ்வது ஒரு வாழ்க்கையா என்று மாறிவிட்டேன் அம்மா இனிமேல் என் மனைவியுடன் சந்தோசமாக வாழ்வேன் நான் உங்களை எவ்வளவு நாளாய் கஷ்டப்படுத்தி விட்டேன் எண்ணை மன்னியுங்கள் என்றான் 

உடனே இருவரும் மன்னிபெல்லாம் வேண்டாம் இனியாவது நீ வாழ்க்கை என்ற வட்டத்தில் குடும்பத் தலைவனாய் வாழ்ந்து பார் என்றார்கள் 

படத்தை பார்த்து பைத்தியமான குகன் அந்த படத்திலே பைத்தியமாக நடித்ததால் தெளிந்தான் குகனும் வர்ஷாவும் வாழ்க்கையை இன்பமாக கழித்தார்கள் 

வாருடங்கள் கடந்தது ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு அகன் என்ற பெயர் வைத்தார்கள் அவனும் அப்பா போலவே மாறினான் படிப்பறிவோடு எல்லா திறமைகளையும் கற்று தேறினான் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி வருங்கலத்தில் சிறந்த கதாநாயகனாய் வலம் வந்தான். நடிகைகள் நடிகர்கள் இவர்களுக்குள்ளும் நல் இதயம் இருக்கு என்று உலகிற்கு எடுத்துரைத்தான். 



நன்றி 
வணக்கம்!

2 comments:

  1. சுபமாக முடித்து விட்டீர்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145