கார்காலப் பொழுதாய் காலை விடிகிறது ...!


குயில் பாட கோலம் போட
குளிர் காற்றில் மயில் ஆட
கொக்கரக்கோ என்று சேவல் கூவ
கொஞ்சும் மழலையின்
அமுத கானம் தேட
கண்ணாடி போல் மண்ணடி
தொட்டு மயக்கும் வெள்ளி
சலங்கையாய் நீரோட
கனிமரங்கள் கசிந்து சிறக்க
பூக்கள் சிரிக்க புதுமுக
வாசமாய் மலர் முகம் சிவக்க
வெக்கத்தில் கக்கிய சூரியனை
பக்கத்தில் சேர்த்த வானத்தின்
வண்ணத்தில் தக்கதிமிதா தாளமாய்
தேனீக்கள் கூடி இன்னிசை பாடலில்
கார்காலப் பொழுதாய் காலை விடிகிறது ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145