மதுவின் - மாற்றங்கள் ...!


தாய் வேசி தான் பெற்ற
பிள்ளைகள் தாசி என்று பட்டை
தீட்டும் வார்த்தையால்

தன்னலமற்ற தலைவனாய்
தன்நிலை மறந்து
தள்ளாடும் ரோட்டில்
தன்னுடை சேற்றிலே புரண்டு

பல்லாடும் கிழவனாய் பாதைமாறி
சொல்லால் கொள்ளும் பேச்சில்
மதுசெயலால் தின்னும்
உடலை விட்டு உறவை விட்டு

தனி ஒரு மனிதனாய்
தான் பெற்ற பிறப்பை
அழி ஒரு மனிதனாய்
அன்பையிழந்து பண்பை மறந்து

பாவத்தின் சீற்றத்தில் உன்
பாதி உயிர் போகுதடா
அதில் தான் கொண்ட
குடும்பங்கள் தலைதெறிக்க ஓடுதடா

அங்கே தன் மானம்
காற்றினிலே பறக்குதட
அதை தாங்கதா இதயங்கள்
கண்ணீரில் வேகுதடா

இதை புரிந்தும் தினம்
திருந்தலடா நீ போகும்
இடம் மறக்கலடா
உன் தவறுகளை சற்று
திரும்பி பாரடா மனிதா ......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...