கண்டேன் காதலியே ....!


கல்லில் கலையாகும்
கைவினை போல்
என் சொல்லில்
விளையாடும் காதலியே
உன்னை ....

நம் பள்ளி மேசையில்
துள்ளி விளையாடும்
பேர் அலையாய் கண்டேன்

பின் அள்ளிய கூந்தளில்
சொல்லிய காற்றால் மோதும்
மரப்பட்டையில் கண்டேன்

மீண்டும் நான்
திரும்பும் பக்கமெல்லாம்
உன் வெக்க முகத்தின்
பிம்பமாய் பேசும்
கையொப்பமாய் கண்டேன்

பெண்ணே
நான் கண்ட மாற்றங்கள்
எல்லாம் நீயும் காண்பாய்
என்று காத்திருந்தேன்

ஆனால் என் கல்லறையில்
நீ கண்ணீர் சிந்தும்
காதல் உப்பை காணாமல்
போய் விட்டேனே ...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...