கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2


வேலூர் மாவட்டத்தின்
விடிவெள்ளியாய் விதையிட்ட
சிற்றூரில் வரவுசெலவு வங்கியின்
கணக்கு பிள்ளையாய்............

காலத்தை வென்று ஞானத்தின்
தமிழனாய் வாழும் கலைஞனே
கவிதையில் மனித நேயனாய்
மாலை சூடிய மன்னனே ............

ஹைக்கூ பல தந்த காவியனே
உன் கவிதைக்கு காவிய நூல்
என பெயர் சூட்டும் கவியை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த தமிழனே .........

அடைமொழியாய் வாழும் உலகில்
பல மொழி மன்னர்களும்
படித்து மகிழ வடித்த வரிகளை.....

ஜெர்மன் பிரான்சு,முதல்
இத்தாலி ஜப்பானிய மொழியிலும்
அச்சு பதித்த அந்தாலஜியின் கலைஞனே.....!


செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!

உன் கவியால் சட்டம் கண்ட
மாணவர்கள் இங்கே டாக்டர்
பட்டம் பெற்று வென்றதால்
முத்தங்கள் தந்த தமிழ் கவியே ....!


உன் நூல் தந்த மனசெல்லாம்
மக்கள் மனதில் கை பிடித்த
நாள் முதலே காலத்தால்
அழியாத கலங்கரை புத்தகமே .....!

உன் புகழ் கண்ட வாழ்வின்
வரைமுறையை இரு செல்வங்களை
பெற்றெடுத்த தலைமுறை தமிழனே

வாரிசின் வரிசையில் வாழும்
நீங்கள் முப்பெரும் பேத்தியுடன்
கூடி வாழ வாழ்த்தி வணங்குகிறேன் .....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145