நாட்டுப் புற பாடல் - 1


காளைமாடு இரண்டு ஒட்டி
களப்பையில ஏரு பூட்டி
சோறுபோட்ட பூமிக்குள்ள நானும்
சூறபோட்டேன் நெற்பயிர் விதைய
போடு தனனன்னே தானானே

கம்மஞ்சோறு தலையில் தூக்கி
காரமீனு கொளம்பு வச்சி
ஆசையோடு அயித்தானுக்கு
அள்ளி ஊட்ட வந்தேனே
போடு தனனன்னே தானானே

மஞ்ச வெயிலு மணமணக்க
மஞ்சமெல்லாம் நீர் வரைக்க
கொஞ்சும் குயிலு ராகத்தில
கொக்கு வெரட்டி வாறன் புள்ள
போடு தனனன்னே தானானே

அடிச்ச வெயிலும் மேற்கேமறைய
ஆறுமணிக்கு விளக்கும் ஏற்ற
காணி நிலம் கண்ணுறங்க நாம
காதல்கொள்ள போவோம் மாமா
போடு தனனன்னே தானானே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்