சிறகுகள்...!


தனியொருப் பறவையாய்
இருந்தப் பெண்மை 
சிறகுள்ளப் பறவையாய் 
சீறிப்பாயும் நிலவிலும் 

ஊறியக் குருதியில் 
சீரிய நோயை போக்கும்
காவல் தெய்வமாய்  
கால் பதிக்கிறாள் - பின்

துள்ளி ஓடும் புள்ளி மானைப்போல் 
அள்ளி அள்ளி கொடுக்கும்
அன்பு மனைவியாய் 
வீட்டைக் காத்து பின் 
நாட்டைக் காக்கும் நாயகியாய் 
மாறுகிறாள் 

அன்று சிறகில்லாப் பறவையாய் 
அடுப்படியில் வெந்தவள் 
இன்று சிறகடிக்கும் பறவையாய் 
நாடெங்கும் சுற்றி 
நல்லப் பெயர் சூட்டி
புதுமைப் பெண்ணாய் மாறிவிட்டாள் 
இந்தப் பூவுலகில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...