நீ நானாகி விட்டதால்...!



உறங்கினேன்
என் உயிரில்
நீ 
கலந்து விட்டதால் ...!

விழித்தேன் 
மீண்டும் என் விழிகளில் 
நீ
பிறந்ததால்!

முடித்தேன் 
நீயின்றி நானில்லை 

இவ்வுலகில்
நீ
நானாகிவிட்டதால்...!

6 comments:

  1. வணக்கம்

    புதிய கவியில் காதலினைப்
    புனைந்த அழகைச் சுவைக்கின்றேன்!
    பதியம் போட்டே இதயத்துள்
    படா்ந்த காதல் கொடிமலா்ந்தால்
    பதிய செய்யும் இயந்திரமாய்ப்
    பதிக்கும் வண்ணக் கவிதைகளை!
    மதிய கோடை என்செய்யும்
    மனமே குளிர்செய் பெட்டியடா!

    வலைப்பதிவைக் கலைப்பதிவாய்
    வடிக்கின்ற அன்பீா் வாழ்க! வளா்க!

    என் வலையில் பதித்த கருத்தை உணா்ந்தேன்
    நல்ல கருத்தாழமும் வல்ல கற்பனை வளமும்
    இனிய தமிழ்ச் சொல் ஆளுமையும் இருந்தால் போதும் மரபுக் கவிதை பாடலாம்

    என் வலையைத் தொடா்ந்து படித்துவரவும்
    மரபின் இலக்கணத்தை எழுத உள்ளேன்
    படித்து அதன் வண்ணம் கவி பாடி எனக்கு அனுப்புங்கள், செம்மை செய்து அனுப்பி வைப்பேன்
    நல்ல தமிழ்க் கடடுரை பகுதி 10 நிறைவுற்றதும்
    அதைத் தொடா்ந்து வல்லின வம்புகள் என்ற கட்டுரை தொடரும்! கவிஞா்களுக்கு அக்கட்டுரை மிக மிகப் பயன்தரும்

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்கு கவி வடித்த ஐயாவிற்கு மிக்க நன்றிகள் ஐயா

      மேலும் என் எழுத்துக்கு செவி சாயித்து பதில் தந்தமையைக் கண்டு மிக்க மகிழ்ந்தேன் ஐயா தாங்கள் கூறியபடியே தங்கல் பதிவை தொடருகிறேன் மரபு,வெண்பா எழுத முயற்சிக்கிறேன்
      நன்றிகள் பல

      Delete
  2. காதல் கொஞ்சுகிறது! சிறப்பான படைப்பு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145