காதல் இலக்கணம் ...!


ஆயுத எழுத்தாய் இருந்த
என்னுயிரில் காதல் எழுத்தாய்
எழுதுகிறேன் உன்னை

நீயும் நானும் சேருகையில்
பன்னிரு அறிவில் நம்விரு
உயிர்கள் கலந்து உயிர்மெய்யாய்
பிறந்த காதலை

கையிருசொந்தங்கள் கட்டிலிடுகையில்
மெய்யொரு உயிராய் பிறக்கும்
குழந்தையை சேர்த்து பதினெட்டாம்
உயிரில் வெற்றி நடை போடுகிறது
உயிர் மெய்யாய் காதலாய்
தமிழ் மொழி பிறப்பில் ...!

காதல் ஒரு மரண படுக்கை ...!


அவனோடு வாழ்கிறேன்
அணுஅணுவாய் துளைத்த
காதல் நினைவுகளை
கண்ணுக்குள் நுழைத்து பின்
மண்ணுக்குள் புதைத்த
சிலையாய் மரணப் படுக்கையில் ...!

மலர்களின் சிணுங்கல்கள்...!


இரவின் மடியில் பிறந்து
கருவின் உயிரல் வளர்ந்து
பகலுக்கு பரிசாய் பூத்த மலரே

உன்னை நிலவுக்கு சொந்தமாய்
நீருற்றிய என்னை மண்ணுக்கு
சொந்தமாய் விண்ணில் மறையைச்
செய்தாயே ஏன்?

கருகும் வெயிலில் உருகும்
மெழுகாய் பறந்து திரிந்த
வானில்

வாசமுள்ள திரவமாய்
நேசமுள்ள மனிதர்களுக்கு
சுவாசமாய் வாழ்கிறேன்
ஏன் தேசத்தில் பிறந்த மலராய்...!

துறவிகளே திருந்துங்கள்....!


துறவிகளாய் இருந்த கருவில்
பிறவிகளாய் பெற்ற பயனை
மறுமையுளும் ஏற்க நீ
துறவியானால் அப்பிறவியும்
பேர் சொல்லும் எப்பிறவியிலும்
உன்னை அதை மறந்து

அப்பிறவி பயனை துறவியின் பெயரால்
இருளுக்கு செல்லும் காம கோயிலில்
இதயமில்ல சலனங்களை வசியம் செய்யும்
வாலிபனே உனக்கு ஏன் இந்த மகுடம்

துன்பத்தை போக்கும் மனிதர்களுக்கு
இரவின் இன்பமாய் துன்பம் காணும்
பக்தர்களை நீ கசக்கி துடைக்கும்
குப்பை பாத்திரமாய் வீசுவதா சொல்

மங்கள பெண்களின் மாங்கல்யத்தை
பொங்கலை போல் சப்பி துப்பும்
சாக்கடைக்கு சந்தனமும் குங்குமமும்
அங்கமாய் கொண்ட அரக்கனே உனக்கும்
எனக்கும் உள்ள உறவுகளை துறவிகள்
என்று பிறவிகளை ஏமாற்றும் இறைவனின்
இருபிடாம உனக்கு சொல்

வேண்டாம் உனதாக்க பட்ட உயிரை
விடை தேடும் வருடத்திற்கு
விதையாய் வாழ்வதை விட்டு
கொடை தேடும் கோவிலாய் உன்னை
கொலு பொம்மையை மாற்றி மக்கள்
மனப் பொம்மையை நாசம் செய்யாமல்
வேசமில்ல மனிதனாய் வழந்துபார்
இந்த தேசமே போற்றும் உன்னை....!

ஈகரை சாரலில் என்னுயிர் கவிதை ...!


அன்று என் எண்ணத்தில்
பூத்தக் கவிதையை
கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை
பெட்டியில் போட்டேன்
படிப்பறிவில்லா கவிதையாய் போனது
குப்பைதொட்டியில் ...!

இன்று கருவியின் கையால்
எழுதுகிறேன் சிதறிய துருவங்களில்
விழுந்த விதையாய் ஈகரை
சாரலில் என் இதயம் நனைகிறது
கவிதையின் பெயரில் ...!

கண்ணீர் துளிகள் ...!


பெண்ணே உன் கண்ணீர்
துளிகளை மண்ணில்
விதைக்கும்போது உன்னில்
உள்ள உறவுகளை விண்ணில்
விளக்கேற்றி பார்

உன் கண்ணில் மீண்டும்
காவியமாய் ஓவியம்
படைக்கும் இந்த மண்ணில்

அப்போது
விதையாகும் வைரங்களை
தோல்வி என்னும் உளிகளால்
சிதைத்து சிதைத்து பார்

மீண்டும்
அழகிய சிலையாய் ஒளிரும்
வெற்றியில் உனது விழிகளும்
மொழிகள் பேசும்

உயிர் கொண்ட பதுமையின்
உறவுகள் நாளைய
உலகு கண்ட மணிகளாய் மாலை
சூடும் இந்த மண்ணில் ...!

மரம் பேசுகிறது ...!


நீ அழுதால் நான்
இசைக்கிறேன் கற்றாய்

தென்றலாய் என்
நாணத்தில் சிவந்த மேகங்கள்
உன் தாகத்தை தணிக்க
மழையாய் பொழிந்ததால்
மனிதா நீ உயிர் வாழ்கிறாய்

ஆனால் உன் நிழல் கண்டு
வாழும் வாழ்வில் என் நிழல்
வந்து போவதால் பூமி
நிலைகண்டு வாழ்கிறது

இந்த நிலை கண்டும் என்னை
விலைகொண்டு வெட்டுவதால்
பூமி நிலை தடுமாறும் நேரம்
நீ நிலையில்லாமல் போய்விடுவாய்

குறை கொண்டு கூறவில்லை
உன் நிறை கண்டு வாழட இந்த
நிலையுள்ள பூமியில் ...!

நீ நிஜமோடு வருவாயா ...?


உள்ளமோடு பள்ளி கொள்கிறேன்
உன்னை நினைத்து கள்ளி
கள்ளமோடு கண் மறைகிறாயே ஏன்...?

என் எண்ணமோடு கலந்தவளே
கலை வண்ணமோடு காட்சி
தந்து கனவோடு மறைகிறாயே ஏன் ...?

நினைவோடும் மனதோடும்
நீங்கா இடத்தை பெற்று
என் நிழல் கண்டு ஓடுகிறாயே ஏன் ?

உனதோடு நானாகி நமதோடு
விளையாட கருவோடு பிறந்த
காதலை கற்று தருகிறேன்
நீ நிஜமோடு வந்தால் மட்டுமே ...!

அங்கம் பதித்த தங்கமே ...!


காற்றாக திரிந்து
கடலாக விரிந்து
மலையாக உயர்ந்து
ஒளியாய் வளர்ந்து
சிலையாய் நிக்கிறேன்
கண்ணே உன் முன்னால்

அதில் கொடியாய் கட்டிய
ஆடையில் என்னை
விலையாய் விற்று விடாதே
அன்பே

உன் விழியால்
பொழியும் ஒளியில்
காதல் திரியால் என்னில்
விளக்கேற்ற வருவாயா
சொல்

மனதால் மாலை சூடுகிறேன்
என் மஞ்சத்தில்
கொஞ்சி விளையாடும் மங்கையாய்
அங்கம் பதித்த தங்கமே உன்னை ...!


நானும் ஒரு கவின்ஞன் ...!


பெண் மேகமே
உன் நிழல் தேகம் கண்ட
என் கண்கள் குளிர் தாகமாய்
உன் விழி வழியே பருகியதால்
காதல் மழை பொழிகிறது

அதில் கவிதை துளிகளாய்
வளம் வருவோமா ...?
சொல் இடம் பிடிக்கிறேன்
உன் இதயத்தில் என்னை
எழுதும் கவிஞ்கனாய் ...!

திருமண விழா...!


ஒரு முகமாய் இருந்த
என்னை
மறு முகமாய் மாற்றிய
என் திரு முகமே ...!

மதிமுகமாய் பாயிந்த
காதல் வெள்ளத்தில்
பிறை முகமாய்
கரைகிறேன் ...!

உயிரே
அறிமுகமாய் வந்து
என்னை
புது முகமாய் காட்டும்
உயிர் முகமே

உடைமுகமாய் மாற
விடை ஒன்று தருவாயா சொல்
உன்னை

என் திருமதியாய்
வடம் பிடிக்கிறேன் நம்
திருமண விழாவில் ...!



மண்ணில் பூத்த காதல் மலராய் ...!


இமையோடு விளையாடும்
உமையவளே உன்னை என்
இளமையோடு விளையாட
அழைக்கிறேன் ....!

உரிமையோடு ஓர் வார்த்தை
சொன்னால் உன் உயிரோடு
உறவாட வருகிறேன் ...!

இதுவரை
கனவோடும் நினைவோடும்
வாழ்ந்த மனதை

நம் காதல் பந்தத்தால்
மலரோடு விளையாடலாம்
இந்த மண்ணில் பூத்த
காதல் மலராய் ...!

வெற்றியின் ரகசியம்...!


துடிக்கும் இதயம்
படிக்க மறந்தால்
கடிக்கும் கண்ணில்
வடிக்கும் கவிதையாய்
எடுத்துக் கட்டுகிறேன்...!

அடிமைப் பட்ட இதயங்களே
கொடுமையைக் கண்டு தாளாமல்
மடமையை மாற்றி

பொறுமை கொண்டு
பெருமையாய் வாழ
உரிமையுடன் போராடுங்கள்
அப்போது
திறமையுடன் கிடைக்கும் வெற்றி ...!

காதல் புராணம்...!


காதல் என்பது நோட்டில்
எழுதும் காகிதம் அல்ல

இதயத்தை அறுத்து
இமையில் தெறித்த
குரலாம் காதல் ...!

அந்த உமையவளும்
சிவனின் பதியாய்
இடையளவில் இந்த உலகில்
இடம் பிடித்ததால்

கலைகளில் முதல்வனாய்
கங்கையும் பெற்று
காதலை கொன்று சாதலை
வென்ற புராணமாம் காதல் ...!

காதல் தூது...!


காதலின் தூதுவன் யார் ?

பட்ட இதயத்தில் தொட்டு பார்க்கும் 

சிட்டு குருவியாய் உன்னை தட்டி 

எழுப்பும் இதயமா ...?


இல்லை சுட்டும் விழியில் 

கட்டி தழுவும் கனவுகளை 

எட்டி பார்க்கும் எண்ணத்தின் 

கவிதையா ...?


மொழியே இல்ல மௌன 

வரிகளைச் சொல்லத் துடிக்கும் 

இதழ்களின் மழலை மொழிகளா ...!


எதுவாக வேண்டுமானாலும் 

இருக்கலாம் உன் காதல் உன்னை 

வென்றால் அதற்கு ஈடு வேறு ஏது  தூது...!



வெற்றியின் சிந்தனை...!


வாழ்ந்த சில நாட்களைவிட
வாழும் நாட்களை நேசி
அப்போது

நீ நேசிப்பதும் யாசிப்பதும்
மோட்சமாய் மாறும் போது
உன் வாழ்க்கை
வேட்க்கையில்லா வெற்றியை தரும்...!!

விடை தெரியா விதவை பெண்...!


அனைக்கும் கைதியான உன்னை
என் துணைக்கேற்ற தலைவனாய்
மாற்றி மணக்க எண்ணினேன்
ஆனால் நீயோ ...?

வதைக்கும் வாலிப பசிக்கு
துடிக்கும் மீனாய் என்னை
சிறை பிடித்ததால்,
கலையிழந்த மீனாய் கரை ஒதுங்கினேன்.

கண்ணீர் துளியால் மண்ணில்
முளைத்த காதல் சோகத்தில்
விடை எதுவும் தெரியாமல்
விதவைப் பெண்ணாய் ....!

கல்லூரி காதல் ...!


துள்ளி ஓடும் மானாய்
பள்ளி சென்றேன்
கல்வி கற்கும் முன்
காதலை கற்றதால்

அள்ளி கொண்ட
பருவத்தில் ஆசையை
கற்றுக் கொண்டேன் ...!

சொல்லி கொண்ட
வார்த்தைகள் எல்லாம்
தள்ளிச் சென்றதால்
பாசத்தைக் கற்றுக் கொண்டேன் ...!

ஏனோ புரியா மோகம்
தாகத்தை தந்ததால்
மோகத்தை கற்றுக் கொண்டேன் ...!

எல்லாம் அறிந்தும் மறந்தும்
சேர்ந்ததால் இனிமையான
தனிமையை கற்றுக் கொண்டேன் ...!

கடைசியில் முடிவே படியேறியதால்
சறுக்கிய அடியில் காதலின்
வலியை கற்றுக் கொண்டேன்...!

விழியோடு மொழி சேரும் போது
வழியாய் வந்த காலம்
விடை பெற்றதால்
பிரிவைக் கற்றுக் கொண்டேன் ...!

அந்த பிரிவே அனலாய்
சுட்டதால் காதல்
தோல்வியைக் கற்றுக் கொண்டேன் ...!



வருடமகளாக வாழ்கிறாள்...!


திருடாத நிலவை வருடியதால்
மேகம் விடியலாய்
பூமியின் மடியில் காவியம் படைக்கும்

ஓவியமாய் ஒளி வீசுவதால்
கவிபாடும் தென்றல்
கடலலையாய் மாறி
செவி பாடியதால்

காலமகள் கை கோர்த்ததால்
நேரமகள் நீந்துகையில் நாளமகள்
கூடியதால்

மாதமகள் பிறந்ததால்
வருடமகளாக வாழ்கிறாள்
ஒவ்வொரு நாட்டிலும் ...!


நம் கையிரண்டு சேருகையில்...!


அன்று என்னை மறந்த - நீ
இன்று என்னை மணக்க
வருகிறாய்

என்ன வென்று சொல்லாமல்
இரு கண்ணு ரெண்டும்
துடிக்கையில்

பன்னிரண்டு கிரகங்களும்
பார்த்து வாழ்த்துகிறது
நம் கையிரண்டு சேருகையில் ...!

நம் காதல் வெல்லவே ...!


பெண்ணே
உனக்கு இதயம் இல்லை
ஏன் என்றால்
அதில் நான் இல்லை
நம் காதல் இருப்பதால்
மோதலால் வாழ்கிறோம்
நம் காதல் வெல்லவே...!

குட்டி கவிதைகள்


காதல் என்பது ஓர் எழுத்து
அது அமைவது என்பது
தலையெழுத்து ...!

செடியில் பூப்பது பூ
என் மனதில் பூப்பது நீ...!

கடலுக்கு கரை உண்டு
மரத்துக்கு வேர் உண்டு
கிளைக்கு இலை உண்டு
இலைக்கு பூ உண்டு
உனக்கு நான் உண்டு
எனக்கு நீ உண்டு ...!


இதயம்
நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ இறந்தால் நான் இறப்பேன்

***********************************************


Kaa Na Kalyanasundaram :

@ தலைஎழுத்தில்
தேடிப்பார்த்தேன்....
காதல் எனும் சொல்லில்லை!

@ பூக்களைத்தான் தரும்
செடிகள் ....ஆனால்
என்மனதில் தோட்டமாய் நீ!

@ நான் இருக்கும்போது
மற்றவர்களிடம் இறந்துவிட்டது...
அவளின் இதயம்!


அம்மாவாசையாய் ...!


நீ சூரியன் நான் சந்திரன்
நாம் பெற்றோர்கள் பூமியில்
அமாவாசை இருளில் !

கண் தானம் ...!



சுவர்கள் நடுவே 
சிலையாய் நிற்ப்பதை விட 
உன் விழியின் நடுவே 
ஒளியாய் வாழ்கிறேன் ...!

பெண்ணே இரும்பு உடை எதற்கு?


பெண்ணே
உனக்கு இரும்பு உடை எதற்கு
அரும்பாக பிறந்து பின்
கரும்பாக உயர்ந்து
பெருமையான மண்ணில்
வறுமைக்காக
நீ
இரும்பாக மாறியதால்
குறும்பான இதயத்தை
விரும்பாமலும்
விலையாக்குவது நயமா ...!

அடுத்த ஜென்மத்தை தேடி ...!


தனிமை கூட இனிமை தான்
உன்னை சுமக்கும் விழிகளுக்கு
வலிகள் கூட சுமைகள் தான்

என்னை சுமக்கும் இதயத்தில்
உன்னை சுமந்ததால்
கண்ணை இழந்து

வெறும் மண்ணாய்
கரைகிறேன் நானு ஒரு
பெண்ணாய் பிறக்கவே அடுத்த
ஜென்மத்தை தேடி ...!


காதலும் கற்று மற...!


நடப்பதை மறக்கிறேன்
நினைப்பதை அடைய

கிடைப்பதை வெறுக்கிறேன்
என்னை நினைப்பதை
மீண்டும் அடைய

காதலில்
கிடைப்பதும் எடுப்பதும்
இல்லையென்றால்
உலகில் படைப்புகள் இல்லாமல்
போய்விடும் ....!

ஏழை தங்கங்களிலும் ஒரு அங்கம் வகிக்கும் ...!


பெண்ணே உன்னை
கண்ணால் வடித்துப் பார்

உன் முன்னாள் தோன்றும்
கண்ணிற்கு ஒரு பெண்ணாய்
தோன்ற ஆடை கொஞ்சம்
ஆபரணம் கொஞ்சம் போதாதா ?

ஏன் சிலைக்கு பூட்டும்
தங்கத்தை போல் உன்
சிதைக்கு பூட்டி போவதால்
வதைக்கு பெண்கள் நகைக்கு
மயங்க விதைக்கும் விலையாய்
உன்னை கலைக்கு விற்க
சிலையாகிறாயே

ஏன்
உனதாகிய உயிரை மண்ணின்
விதையாக முழைக்க
ஏன் தங்கத்திற்கு இரையானாய்

பெண்ணே விலையை கண்டு
மனதை விலக்கி பார்
அந்த விலையே உன்னை
சிலையாக மாற்றும்

விலையில்லா மண்ணில்
நல்லத் தரமான நிலையில்
அங்கம் ஜொலிக்கும் மங்கையாய்
ஏழை தங்கங்களிலும் ஒரு அங்கம் வகிக்கும் ...!

நரகம் கூட சொர்க்கமாகும்...!


சிதறும் துளிகள் நேரமாகலாம்
ஆனால்
உன் சிணுங்கள்
மட்டும் ஏன் தூரமாகிறது இன்னும்

பெண்ணே
ஈரமான நெஞ்சில்
ஒரு ஓரமாக இருந்து பார்
நரகம் கூட சொர்க்கமாகும்
நம் காதல் கோட்டையில் ...!

ஆறாவது காலம் ...!


காலங்கள் மூன்று
கண்டேன் மண்ணில்
இன்று

நான்காவது
காலமாய் காதலை
கொண்டேன் நெஞ்சில்

அன்றே
நேரமும் மறந்தேன்
வாரமும் மறந்தேன்

ஆனால்
காரணமே இல்லாமல்
தோரணமாய் பூத்த

உன் காதலை மட்டும்
மறக்காததால்
ஐந்தாவது கலாமாய் நீ
என் ஆறறிவில் நுழைந்ததால்

ஆறாவது காலமாய் வாழ்கிறது
என்னுயிர் மண்ணில் விதைக்கும்
வரை ...!

பெண் பார்ப்பு ...!


பிறந்தேன் பெண்ணாய்
வளர்ந்தேன் கண்ணாய்
நடந்தேன் தேராய்

எவனொருவனோ பிடித்த
புகைபடத்தில்
என் அழகு பிம்பம்
நிழலாய் பதிந்ததால்

சிலையாய் நின்று
விலையாய் போகிறேன் ...!

காதல் கட்டுரை


ஒரு துளியாய் வளர்கிறது
மறு துளியாய் விழுகிறது
இது தான் காதல் முடிவுரையா ...!

அன்பே
மீண்டும் தொடருவோமா ...?
காதல் கட்டுரையில் பிறக்கும்
இதய முன்னுரையாய்

அதற்கு
கவிதை பொருள் தந்து காதலின்
அடக்கமாய் கலை நயத்துடன்
தம்பதியாய் முடிப்போமா
நன்றி சொல்லி ...!


மீண்டும் காதலாய் தொடருது...!


காதலே சாதலால்  தொடர்ந்ததால்
மோதலே காதலால் முடிந்தது

காலமே கனவாய் போனதால்
சாபமே பாவமாய் மாறியது

சோகமே கதாலாய் ஆனதால்
ஞானமே பிரிவால் வாடுது

மோகமே காதலால் மலர்ந்ததால்
தேகமே பாவத்தை மன்னித்தது

மீண்டும் காதலாய் தொடரவே...!

மலரில் பிறந்த காதல் மண்ணில் உரமக்கிறது


மலையாய் இருந்த உன்னை
காலம் கடந்ததால்
சிலையாய் வடித்தேன்
என் சிறு இதயத்தில் ....!

முல்லாய் மாறிய உன்னை
ஒரு பெண்ணாய்
கண்டதால் கலை வடித்தேன்
என் இரு கண்ணில் ...!

அன்றே மலராய் மலர்ந்த காதல்
உயிராய் வளர்ந்ததால்
கயிராய் மாறினே
என் உயிரில் உன்னை கட்டவே ...!

நீ உதிர்வாய் என்று சொன்னால்
உரமாக்குவேன்
மண்ணில் என்னுயிரை
நீ மீண்டும் வளரவே ...!

இன்னொரு நிழலாய் மண்ணில் நிலைக்க ...!


ஆயிரம் ரோஜாக்கள் மலர்ந்தாலும்
அதன் அருகில் இருக்கும் செடியின்
நிழலாய் துணையிருப்பேன் உன்
நிழல் இந்த மண்ணில் நிஜமாகும் வரை

அழகே உன் விழி ஒளியால் என்னை
விதையாக்கு நம் காதல்
செடியில் பூக்கும் இன்னொரு நிழலாய்
மண்ணில் நிலைக்க ...!

கங்கை...!















மேகத்தில் உதிர்ந்த மலர்கள்
மனித தாகத்தில் கலந்ததால்
காலத்தின் சீற்றத்தில்

அழகு கோலமாய் மிளிரும்
அருமையான சாகசங்கள்
கண்ணிற்கு இனிமையாய்
மனதிற்கு குளுமையாய்
காட்சியளிகிறது
இந்த கங்கை

அதை கண்டு
இந்த மங்கை வடித்தாள்
கவிதை
உங்கள் நெஞ்சை கொள்ளைகொள்ள ...!

காதல் விடியலை தேடி ....!


எனதாகி பின் உனதாகி
நமதாகி வாழும் இதயத்தில்
காதலாகி கசிந்து உருகுகிறேன்

மெழுகாய் கரையும் தேகத்தில்
ஒளியாய் வீசும் யாபகங்கள்
வலியாய் மாறியதால்

விழியால் தேடுகிறேன் உன்
மொழியால் சேருகையில்
அன்பே

வழிதுணையாக வருவாயா சொல்
மனத் துணையாய் மறுக்கிறேன்
உன் மடியில் காதல் விடியலை தேடி ....!

எது அழகு ...?


வானத்தை வருடி கானத்தை
தந்து ஞானமாய் வாழும்
மனிதனுக்கு சுவாசமாய்
மாறும் காற்றில் எது அழகு ...?

மேகமாய் பாயிந்து பின்
சோகமாய் நீந்தி யாகமாய்
பொழிந்து தாகமாய் மாறும்
மழையில் எது அழகு ...?


இயற்கையாய் பிறந்து பின்
செயற்கையாய் உயர்ந்து
மயக்கும் பசிக்கு உணவாய்
மாறும் சுவைக்கு எது அழகு ...?

உயிராய் பிறந்து உள்ளுள்
மறைந்து நீராய் சுரக்கும்
கண்ணில் மாறா அன்பை
காட்டும் கண்ணீரில் எது அழகு ...?

இப்படி மறையும் மண்ணில்
விதையாய் வாழும் உருவில்லா
அழகை மறந்து முக அழகே
உன் முன்னால் அக அழகாய்
தோன்றுவதை கண்டு வளியும்
மனிதனே

உன் அழிவைத் தேடாதே
மனதை நேசி மார்க்கம் உண்டு
உறவை நேசி
உலகமே உன்னை நேசிக்கும் ...!

நிலாவிடு தூது...!


குரலோடு சேரும் நாதம்
நதியோடு சேரும் கடல்
கடலோடு சேரும் அலை
அலையோடு சேரும் கரை
கரையோடு சேரும் காதலர்களாய்
உலாவருவோமா காதல் நிலாவில் ...!

திருமணம்...!


இரு வரி திருக்குறளாய்
இணையும் இதயம்
ஒரு வரி பொருள் தந்து

மறுவரி பதிவில்
தெளிவுரையாய்
மாலை சூடும் காலம்
உள்ளவரை

விளக்குறையாய் வித்திட்டு
தனக்கொரு தலைமுறையை
தந்து தலைமறைவாகிறது...!

கோலங்கள் ...!


இதய வாசலில்
உதயமாகும் சூரியனை
கண்டதால்

மாவிலைக் கோலமாய்
பூவிழி முத்தத்தில்
சத்தமிலாத
சலங்கை ஓலியால்
சாகிரம் வரைந்தேன்

நாவீரம் கொண்ட
ஈ எறும்பிற்கும்
இனிய உணவாக

கலை முதல் மாலைவரை
கண் திருஷ்டி காவியமாய்
உன் காலடி தாங்கும்
கைவிரல் கோலத்தில்

வினை தீர்க்கும்
மனைக்கு வெற்றி
புள்ளியாய் சேருகிறேன்
முற்றுப்புள்ளி கோலத்தில் ...!

மாற்றத்தால் மறுக்கிறேன்...!


உன் கொடியிடையை 

என் விழியிடை 

கண்டதால் விடைபெறுகிறேன் 

காதல் மாற்றத்தால் ....!


உன் குரலோலியை 

என் காதொலி

கேட்டதால் நடை பழகுகிறேன் 

தூரத்தின் மாற்றத்தால் ....!


உன் நடையழகு மேனியில் 

என் உயிரழகு 

நுழைந்ததால் மடையனனேன்

உடையவன் கூறிய மாற்றத்தால் ...!


பெண்ணே உன்னை 

தலை முதல் பாதம் வரை 

அலை அலையாய் கலைவடித்தேன் 

என் இதயக் கடலில் மூல்கி

முத்தெடுக்க வந்தால்போதும் 

நமது சேய்க்கும் தந்தையாய் மாறுகிறேன் ...!


திசையே என் வழியில் மிதக்கும் 

காதல் படகிற்கு கலங்கரை 

விளக்காய் திசை மாறாத 

விசைப்படகாய் மாறுகிறேன் ...!


மாமன் உன் கைபிடிக்க...!


சுட்டும் விழியால் என்னை
கட்டி போட்ட காதலியே
பட்டும் படாமலும் என்னை
தொட்டு செல்வது நாயமா

அன்பே
விட்டுக் கொடுக்காமல் உன்னை
தட்டி எழுப்புகிறேன் தினமும்
முட்டித் தவிக்கும் இதயத்தை
எட்டிப் பார்க்காமல் போவது நாயமா ...!

சொல்லடி ....
கொட்டி பார்த்தும் கோவப்படுகிறேன்
வட்டி கட்டிய அன்பை
போட்டிபோட்டு மறைத்துவிடதே

பூட்டிப் போட்ட இதயத்தால்
மாட்டிகிட்டு தவிக்கிறேன்
மாமன் உன் கைபிடிக்க ...!

கோபுரவாசலிலே...!


காதல் கோபுரமே
உன்னை
சிலைவடித்தேன்
என்
இரு விழி உளியால்

கலை கொடுத்தேன்
காதல் மொழியால்
கற்பனை வண்ணத்தில்

கரையும் மழையில்
சிலையாகும் மேனிக்கு
சரிதம் படைத்தேன்

உதிரம் கொட்டும்
குருதியின் எண்ணத்தில்
சிற்பமே
உன்னை சிதைக்கப் போகிறேன்

சிற்றிடை விழிகளால்
பற்றி அனைக்கும் பாதரசத்தால்
சற்றும் மறைக்காமல்
சாயும் மலர்கணைகள்

விற்றும் முற்றுப் பெறுகிறது
மும் மூர்த்தியின் முதுகெலும்பாய்
கோபுரவாசலிலே ...!

தேவதை ...!


விண்ணில் தெரியும்
மின்னளைப் போல்
உங்கள் கண்ணில்
வருகிறேன் அழிகிய
பெண்ணாய் ....
என்னில் நுழைந்துபார்
உன் கண்ணில்
மிளிரும் கவிதையாய்
இந்த மண்ணில்
பிறப்பேன் ....!
என்னை தேவதையாய்
மாற்றிய தாயவளை
இந்த பூவிழியாள்
போற்றுகிறேன் ...!

காற்றில் கரைக்கவே ...!


பேசாதக் காற்றில்
லேசாகத் தூதுவிட்டேன்
ரசவே உன்மனதில்
ரோசாப்பூ இடம்பிடிக்க ...!

சுவாசமே ...
மூச்சாக நுழைகிறேன்
பேச்சாக மொழியும்
காதலை என்னுயிர்
மூச்சாக சுவாசிக்கிறேன் ...!

வாசமே
நேசமாய் கலந்து
யோசிப்போம் நாம்
காதல் பந்தத்தை
காற்றில் கரைக்கவே ...!

நமது முகமாய் ....!


உனதாக்கிய உயிரை
எனதாக்கிப் பார்
நமதாகிப் பின்
நாணத்தில் பிறக்கும்
காதலை
விலையாக்கிவிடாதே
உயிராக்கி பார்
அதுவே
கருவாக்கி பின்
காதலாய் உருவாகும்
நமது முகமாய்
நாளைய தலைமுறையில் ...!

வாசமுள்ள மலருக்காக...!


ஏனோ தெரியவில்லை
என் உயிர் எங்கேவென்று
நானே தேடுகிறேன்
வான் கொண்ட
வண்ண மலரைத்
தேன் கொண்டு போவதைக்
கண்டு
வானின்று மறைக்கிறேன்
வாசமுள்ள மலருக்காக
நேசத்துடன் நிலவைக்கண
மலரே விழித்திரு
விடியும் பொழு வருகிறேன்
உன்னை என் வெப்ப கதிர்களால்
முத்தமிட ...!

காற்றாய் நுழைகிறேன்...!


காற்றாய் நுழைகிறேன்
கண்ணே உன் கைபிடிக்க
நேற்றாய் எண்ணிவிடாதே
என்னை ....!

ஊற்றாய் ஊறுகிறேன் உன்
இதயத்தில்
சேற்றாய் மாறி என்னை
சிதைத்துவிடதே ...!

அன்பே
கூற்றாய் மாறுவோம்
காற்றாய் திரியும்
காதலர்களைபோல்
நாளைய தினத்தில் ...!

நம் சுற்றமெல்லாம் வாழ்த்தவே ....!


விழிதிறந்தும் மொழிமறந்தும்
வழிதெரியாமல் விழிமூடுகிறேன்
ஒளிவிடும் கனவில் உன்
முகம்படைக்க ....!

அகமும் புறமுமாய்
அலையும் உயிரை
நகமும் சதையுமாய்
பார்க்கிறேன் நீ யுகயுகமாய்
வாழும் என் இதயத்தில் ....!

சுகமே சுற்றிசுற்றி வந்துவிடு
சொர்க்கமெல்ல தந்துவிடு
நீ கற்றுதந்த காதலை
நம் சுற்றமெல்லாம்
வாழ்த்தவே ....!



இல்லற உலாவில் நல்லறம் படைக்க ...!


கற்பகமே நீ
கண்ணசைத்தால் போதும்
உன் பொற்பாதம் தழுவுவேன்
இந்த பூமியில் வாழும்வரை
சொற்பதம் என்று அற்பமாக்கிவிடதே
எற்பதமாய் சொல்லுகிறேன் கேள்.....!

ஏழுகடல் தாண்டிடும் வானவில்லாய்
ஏழேழு ஜென்மமாய் இணைந்தே
வாழ்வோம் இருயிர் ஒர்ருடலாய்
இல்லற உலாவில் நல்லறம் படைக்க ...!

அகதியானேன் அனாதையின் ஆசிரமத்தில் ...!


கட்டிலிட்டவள்
தொட்டிலிட்டதால்
பட்டியலிடுகிறேன்

பாலுட்டி தாலாட்ட
தாயும் இல்லை

பள்ளிக்கு சோறுட்ட
தந்தையும் இல்லை

துள்ளி விளையாட
தங்கையும் இல்லை

சொல்லி சண்டைபோட
அண்ணனுமில்லை

எந்த பந்தமும் இல்லாமல்
சொந்தமுள்ள தாய்மைக்கு
அங்கமுள்ள குழந்தையாய்
அகதியானேன் அனாதையின்
ஆசிரமத்தில் ...!

இன்னொரு வாய்ப்பைதேடி ...!


மனதில் பூத்த மாணிக்கங்களை
மலரும் நினைவால்
கவிதை வடிவில்
கைகோர்த்தேன் ஈகரையில்
இதயமுடன் பாராட்டும்
கவிஞ்ர்களின் மனதில்
உதயமாகும் கண்மணி
கனிகளாய் பருகிய மனதில்
இடம் பிடிக்கவில்லை எனது
கவிதையும்
வடம்பிடிக்கிறேன் இன்னொரு
வாய்ப்பைதேடி ...!

தக்கவைத்துக்கொண்டேன்...!


சொக்கவைக்கும் விழிகளில்
தக்கவைத்துக்கொண்டேன்
என் காதலை ....!

சொர்க்கமே நீ அக்கம் பக்கம்
சென்றாலும் துக்கம்மில்லா
ஏக்கத்தில் பக்கம்வந்து
போகும் சொர்க்கமே அழகு ...!

என்னை அற்பமே என்று
சொன்னாலும் முற்பமே
இல்லாமல் நீ கற்பமாய் கொண்ட
காதலே அழகு ...!


காதல் உருவமே ...!


உருவம் இல்லா உறவே
உன்னை
என்
பருவம் கண்டதால்
உருவம் கொண்ட
உன்னை காதலிக்கிறேன்
இன்னொரு உருவமாய்
உன்னைக் காணவே ...!

பேசுகிறேன்...!


என் மனதோடு மறைந்த முகமே
உன்னை என் நினைவோடு கோர்த்து
நிஜமோடு பேசுகிறேன் அன்பே
நீ என் மனதோடு பேச
வருவாயா ...!

உனதோடு பேசும் வார்த்தைகளை
என் உதட்டோடு பேசுகிறேன் அன்பே
உயிரோடு உறவாட வருவாயா ...!

இருளோடு பேசும் வார்த்தைகளை
என் விழியோடு பேசுகிறேன் அன்பே
கனவோடு கவிபாட வருவாயா ...!

நிலவோடு நிஜமாகும் நம் இரவை
நிழலோடு உறவாடி மலரோடு
மாலை சூடி விடியும் காதலுக்கு
விடைதருவோம் சொர்க்கத்தில் ...!


முடியாத கதை...!


இதய மனிதனின்
இனப்பெருக்கத்தை
கூட்டும் கூலிக்கு

பணப் பெருக்கம்
இல்லையே
பட்டினிக்கிடக்கும் ஏழைக்கு

குடிபழக்கமும்
கொலை பழக்கமும்
படிப்படியாய் முன்னேறும்

பாழ் படிந்த பூமியில்
பிணப் பெருக்கமே அதிகமடா
இதைப் பெற்றப் பின்னும்
கதை முடியலடா...!!!

காதல் கடிதம் ...!


தொட்டால் சிவக்கும்
பட்டாம்பூச்சியே உன்னை
கட்டி போட்டு காதல் செய்யும்
பட்டிக்காட்டு காளையை
எட்டிபார்க் இன்னும் ஏன்
வெக்கம் ...

பக்கம் வந்து பழகிபார்
வெக்கம் மெல்லாம்
சொர்க்கமாய் மாறும்
அக்கம் பக்கம் கேட்டுப்பார் ...!

துக்கமாய் தவிக்கிறேன்
தூங்காமல் என் தங்கமே
காதல் தாலாட்டு பாடவா ...!

கண்ணின் மணிபோல
காத்திடுவேன்
உன் கைத்தலம் பற்றி
பூத்திடுவேன் என்னில்
அடங்கிய ஆசைகளை
உன்னில் அரங்கேற்றுகிறேன் ....!

கருணையிருந்தால் காதல் செய்
ஜோடிப் பறவையாய் ஆடிப்பாடலாம்
சுதந்திர நாட்டில் ...!

ஆணவத்தை தொலைத்து பார்...!


அழுக்கை துவைக்கும் மனிதா
உன் ஆணவத்தை தொலைத்து பார்
நீ வானம் மறந்து வாழும்
வாழ்க்கையில் ஞானம் பிறக்கும்

மானம் சிறக்கும் யோகம் பிறக்கும்
பின் சோகமே இல்லாத சாபமற்ற
வாழ்க்கையை யாகமாய் பெற்றிடுவாய்
தாகம் கொண்ட தாய்மடியில் ...!

நடிகையின் புதுமுகம் அறிமுகம்....!


ஒரு முகமாய் தோன்றும்
திருமுகமே
நீ
அறிமுகம் காட்டி
பின்
புதுமுகமாய் வாழ்வது
திரைமுகத்திலா ...!


பணப்பேய் ...!


மலையாய் உயர்ந்த
மனிதா
நீ
சிலையாய் போகும்
சரீரத்திற்கு
ஏன்
விலைபோகிறாய்...!

அறுபதிலிருந்து இருபது...!


ஒரு துளி விசமாய்

பருகிய என்னை

உயிரை அறுத்து

பின் கயிராய் திரித்த

காதலியே

அறுபதிலிருந்து

இருபதாக்கிவிட்டாய்

என்னை...!

என்னை காகிதமாக்கிவிடாதே...!


கட்டி வைத்தேன்
கண்களை

பொத்திவைதேன்
மனசை

கத்திபோல் பாயிந்த
உன் விழி அம்பால்

மொழியிலந்த விழியாய்
கலையிலந்து
காதல் சொர்க்கத்தில்
கண் மூடுகிறேன்

கண்ணா உன்
கற்பனை கவிதையில்
என்னை
காகிதமாக்கி விற்றுவிடாதே ....!

அன்பே நீ என் அசையா சொத்து ...!


கற்பனையைக் கடன்வாங்கி
கவிதை வடிக்கிறேன்

காதலியே ஒப்பனையாய்
செலவு செய்வாயா
நான் உன் காதலன் என்று

அன்றே செவிசாய்க்கிறேன்
வரவாய் வந்த வாய்மொழியை
வரதட்சணை இல்லா

வாழ்க்கை துணைவியாய்
என் இல்லற வங்கியில்
விளக்கேற்றும்
அசையா சொத்தாய்...!

உறுதி செய்கிறேன்...!


பூட்டிய இதயத்தை
திறந்துப் பார்க்கிறேன்

ஒவ்வொரு முறையும்
என்னிடம் செல்லமாகச் 
சண்டை போட்டு

பின்
மெல்லமாக கொஞ்சி
பேசும் காதல் சிணுங்களை

என் கண்ணீர் துளிகளில்
எட்டி பார்க்கையில்
உன் மீது கொண்ட காதலை
உறுதி செய்கிறது ...!

இருவரி இதழ்கள்...!


உன் இருவரி இதழால்
என் இருவரி இதழில்
வாசித்து பார்

அதில்
ஒரு வரி குழந்தையாய்
நம் காதல் பிறக்கும் ...!

காதல் நிழலே ...!


என்
நினைவில் நின்றவள்
என்
நிழலில் வந்ததால்
நான்
நிஜமானேன் !!!

நிழலே
நீ நிஜமானால்
நாம்
நிழலாவோம்
நிலைகொண்ட பூமிக்கு
நிலையான
காதல் ஜோடியாய் ...!

காதல் நினைவுகள் நீந்துவதால் ...!

யாவும் அறியா பூவாக இருந்தேன் 
உன்னை கண்டபின் 
எல்லாம் அறிந்துவிட்டேன் 

பூக்கும் பூவில்கூட உன் 
புதுமுக கண்டேன் 

பார்க்கும் பறவையில் கூட 
உன் பருவராகம் கேட்டேன் 

ஈர்க்கும் புவிஈர்ப்பு விசையில் கூட
உன் காதல் ஈர்ப்பை கண்களில் கண்டேன் 

இரவுகள் கூட பகலாய் மாற 
இன்ப வரவுகள் எல்லாம் 
செலவுகளைத் தேட ....

உயிரே உறவே உன்னில் 
நன் நுழைந்ததால் 
வானம் வசபடுகிறது 
வாழ்க்கையைத் தேடி ...

நீயும் நானாகி பார் 
உன் நிழல் கூட வசப்படும் 
நீல வானத்தில் நம் 
காதல் நினைவுகள் நீந்துவதால் ...!

சொந்தம் பத்து ...!


ஒரு வழிப் பயணத்தில்
இரு விழிக் கனவுகள்
இணையும் போது

மூவிழிப் பார்வைகள்
அங்கே முத்தெடுக்கும்
போது

நான்விழிச் சொந்தங்கள்
பூவிழித் தூவிட

ஐய்விழிப் பூதங்கள்
ஆஸ்தி வழங்கிட

ஆறடி உயிரே உன்னை
ஏழடி பிறவிகள் பெற்று

எட்டடி வாழ்க்கையில்
கெட்டடிப் பட்டும்

நவரசம் படைத்து
நாளைய உலகில்

பத்தடிச் மூச்சை
பாத பூஜையாய்

நீ படுத்தூறங்கும்
பூமிக்கு சமர்ப்பணமாக்கு ...!



வருந்தியும் பயனில்லை...!


என்னும் எழுத்தும்
அறிந்த மனிதன்
கண்ணும் கருத்துமாய்
வாழ்ந்தாலும் ....

பொன்னும் பொருளும்
இல்லாமல் இந்த
பூமியில் வாழ்வது
பாவமே என்று ...

அள்ளும் பகலும் திரிந்து
ஆயீரம் ஆயீரமாய்
கண்டாலும்
நிம்மதி இல்லா
வாழ்க்கையில் .....

அமைதி யென்றும்
இல்லையே நீ
ஆயுள் முடிந்த
போதிலும் ....

தெரிந்தும் திருந்தவில்லையே
உன் திமிரும்
அடங்கவில்லையே ...!

வருந்திக்கொண்டே
வாழ்கிறாய்
வறண்டப் பூமியின் மடியிலே
வாழ்க்கை வரச்சியை
நாடியே ...!

வாழட்டும் என் காதலும்...!


எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு ஆசைகளை
கட்டி வைத்துக் காத்திருந்தேன்

தட்டிக் கொடுத்த தந்தையும்
தொட்டில் தந்த அன்னையும்
பொத்தி வைத்த பசங்களை
மீறியும் கத்தி போல்
பாயிந்த உன் காதல் அன்பு

என் இதயத்தில் இன்பமாய் பூத்த
கண்ணீர் முத்துக்கள் அலை அலையாய்
அடித்துச் சென்றாலும்
கரை சேராத காதலைக்
கற்றுக் கொண்டேன்

பற்று வைத்த வரவாய் மீதியனேன்
பாவியவன் பஞ்சணையில்
சாகும் வரம் தந்து விட்டு
சென்று விட்டான் தனிமையில்

இப்போது
மீண்டும் வருவான்
என் மீது காதல் அம்பை தொடுவான்
என்று காத்திருந்தேன்
காதலர் தினத்தை நோக்கி
வாழட்டும் என் காதலும் ....!

ஒரு வார்த்தை சொல்லடி...!


என்னைக் கேட்காமலேயே
என் கண்ணில் நுழைந்தாய்
பின் என் கனவில் எழுதாத
வண்ணக் கனவுகள் தந்தாய்

பசியின்றி ருசிக்க வைக்கும்
பார்வை தந்தாய்
பாதி ஜாமத்தில் சிரிக்க வைக்கும்
பைத்தியம் தந்தாய்

துக்கம் போக்கும் சிகிரட்டை
தூக்கி வீசும் மாற்றம் தந்தாய்
தூது சொல்லும் பார்வைக்கு
தூயவளே காதல் என்னும்
பெயர் தந்தாய்

நாசம் செய்யும் மதுவை கூட
நம் நேசம் கொண்டு மாற்றவே
தேசம் கொண்ட காதலை
தேவி நீ போற்றவே

திருந்திக் கொண்டு வாழ்கிறேன்
திருமணக் கோலத்தை காணவே
இல்லையென்று சொல்லிவிடாதே
இழந்த இதயத்தை கொன்று விடாதே

கோடைகாலமாய் மாற்றி விடாதே
மீண்டும் குடிகரானாய் ஆக்கிவிடாதே
தாடியில்லா தேவதாசிற்கு நீ
தாரமாய் மட்டும் போய்விடாதே ...!

நம் தாய் மண்ணில் ...!


நாறுக்கும் பூவுக்கும் உள்ள
சொந்தம்
மண்ணுக்கு போவது போல்
மனிதா ....?

வாசமில்லாத தலைகளுக்கு
வாடி பூக்கட்டும்
ஜாதி இல்லையென்ற விதைகளாய்
நம் தாய் மண்ணில் ...!

அப்போது காண்போம்
சமத்துவத் தோட்டத்தில்
மகத்துவம் படைக்கும் மக்களாய் ....!

ஒரு தலை காதல் - 2


உருவமில்லை
உயிர் உள்ளது

பருவமில்லை
பாசமிருந்தது

ஆனால்
நேசம்வைத்த என்னை
நாசம் செய்துவிட்டதே

ஒரு தலை காதல் ...!

கல்லாய் மாறிய காதல் சோகம்...!


காற்றில் வரும் நாணலைப் போல்
கண்ணில் வரும் நீரை
நேற்று அடித்த சோகத்தில்
கானல் நீராய் இங்கு கவிதை
வடிக்கிறது ...!

ஒரு துளி நீரில் கரையும்
கன்னம் மறுதுளி கரையும்
முன்னே என் விழி சிவந்ததால்
காதல் இமைகள் கைக்கொட்டி
சிரிக்கிறது ...!

சிரித்த இமைகள் சிந்தித்ததால்
வடித்த விரல்கள் வாரி
அனைத்த நொடியில்
பழுத்த இதயம் பாசத்தில்
நிறுத்திய நீரை கண்டு
காதல் சோகம் கல்லாய்
மாறியது ...!

வசந்த மலர் ...!


தெளிவாக பேசுகிறேன் 
தெளிந்த தமிழ் மொழியில் 
தென்னவனே என் மன்னவனே 

தேன் தமிழ் வார்த்தையோடு உன் 
தேவதைக்கு பச்சைக்கொடி காட்டி 
தேவார முத்தமிட்டால் போதும் 

வண்ண நிலவாய் வட்டமிடுவேன் உன் 
வாசல் தோறும் வந்து வந்து போகும் 
வசந்த மலராய் ...!





அழகற்ற பொக்கைகள் ...!




ஒரு சொட்டு நீரில் 
உலகத்தின் 
பாவத்தை துடைத்தேன் 
எல்லாப் புகழும் இறைவனுக்கே 
என்று !இருந்தும் 

கண்ணீர் பசியில் 
அழகற்றப் பொக்கைகள் 
சாலையில் எத்தனை
இறைவா எல்லாப் பொழுதிலும் 
உணவு தா என்று ...!

சீர்கெட்ட சமுதாயம் ...!





நிமிடங்கள் தட்டும் நொடியில்
நாடும்கெட்டு நம்வாழ்வும் கெட்டுபோகிறது

மதுவின் மரணத்தை அறிந்தும்
மறக்காத மனிதர்கள் எத்தனை

இருவிரல்  சேர்த்து  இழுக்கும்
உதட்டில்  பழுக்கும் புற்று நோயை
தேடிக்கொள்ளும் மனிதர்கள்  எத்தனை

காதல் கண்கள் கூடும்
காமக் கோயிலுக்கு மானம் இல்லாமல்
வரதட்சணை வாங்கும் மனிதர்கள் எத்தனை

கற்றும் அறிந்த கருவில் தொற்றுவியாதியாய்
உன்னையே கண்டபின்னும்
கருகலைக்கும் மனிதர்கள் எத்தனை

அரசன் முதல் ஆண்டிவரை
அழியும் உடலுக்கு பில்லி சூனியம் வைத்து
கல்வி செல்லும் கன்னியர்களின்
கற்பை பறிக்கும் மனிதர்கள் எத்தனை ...!

எல்லாம் தெரிந்தும் வருந்தும் மக்கள்
வருமைகோட்டில் நின்றதால்
பிறந்தும் திருந்தாமல் இறந்தும்
வாழ்கிறார்கள் இந்த சமுதாயத்தில் ....!
                                                                                                ---- ஹிஷாலீ

இசை...!


உயிரற்று பிறந்த என்னை
உலகில் உயிரூற்று மாறிய
மனிதா உன்னில் நான்
உயிராய் வாழ்கிறேன்
இசையின் பெயரில் ...!

எங்கும் எதிலும் தங்கு
தடையின்றி சங்கே
முழங்கும் நாதத்தில்
முதல் பங்காய் முழங்குகிறேன்
சுரிதியின் பெயரில் ...!

பொழியும் மழையிலும்
கொட்டும் அருவிலும்
அமைதியாய் பிறந்த நாதத்தில்
அழகிய யுத்தம் செய்யும்
சோகமாய் மறுக்கிறேன்
ராகத்தின் பெயரில் ....!

பாடும் பறவையிலும்
ஓடும் நதியிலும்
ஒரசும் பொரியிலும்
யார் கொண்ட பாடலை
தான் கொண்டு சேர்வதால்
தாளத்தின் பெயரில் தலை
சாய்க்கிறேன் ...!

உணர்வுகள்...!


அன்பே நெருப்பாய் இருந்த 
மனதிற்குள் நீராய் நூழைந்தாய்...!

நுழைந்த கணமே உடைந்தது 
என் மனம் 
நடுக் கடலில் கப்பலாய் ...!

ஓடைந்த துண்டுகள் 
ஒவ்வௌன்றிலும் 
உன் முகம் தெரிவாய் ...!

அதை கண்டதுமே என் முகம் 
வெக்கத்தில் சிவந்தது அழகாய் ...!

என் மனதின் உணர்வுகளை 
வெளிப்படுத்தினேன் கண்களின் வழியாய் ...!

இதை உணர்ந்து என்னை ஏற்பாயா 
உன் காதலியாய் ...!

காதல் கொடி...!


துள்ளி வரும் நினைவலையே
உன்னை அள்ளிச் செல்லும்
விழியில் பள்ளி கொள்கிறேன்
பஞ்சணையில்

காதல் வசப்பட்டதால்
கனவுகள் பூக்கும் கட்டிலில்
குழந்தையாய் உறங்கும்
இரவுகள் கூட என்னை
தட்டிபாக்கிறது ....!

நித்தம் ஒரு கனவு
அதில் சத்தமில்லா நாம் உறவு
ஜனனம் கொள்ளும்
கனவு கோட்டையில்
நினைவுகள் பாதிக்கும்
நிமிடங்கள் கூட எட்டிபாக்கிறது ...!

அய்யோ தட்டி தட்டி பாக்கிறேன்
என் தாயிமையில் பூக்கும்
காதல் மகரந்தம்

தலைமுறை கானதா என்ற
கற்பனை விதையில்
அன்பே நீரூற்றி பார்
நானும் மலருவேன்
காதல் கொடியாய்
உன் கற்பனையில் ....!

சிவந்த காதல்...!


நீ ஆயிரம் தவறுகள் செய்தாலும்
அன்பே என்
ஆறுயிர் மறக்கவில்லை

காதல் வலியால்
கடமை மறந்து
கானல் நீரில் என்
கன்னம் சிவக்கிறது

அது மட்டுமா ?
பஞ்சு மேனியில்
நஞ்சு கலந்ததுபோல்
உன் ஞாபக அலைகள்
என் எண்ணக் கனவில்
வண்ண கோலமிட்டதால்
நாணத்தில் கண்கள் சிவக்கிறது

வானம் சிவந்தால்
கானம் பாடும் குயிலைப் போல்
என் காதல் சிவந்ததால்
என் இதயமும் கனமாகி
உதயமாகும் துடிப்புகள்
இதமாய் பாடியதால்
மூச்சும் சிவக்கிறது ...!



என் சுவாசமே ..!


நீ வந்த நேரத்தில் என்
இதயமும் தூங்கவில்லை
என்னை தூங்கவைக்கும்
கண்களும் தூங்கவில்லை

நாட்களை எண்ணும்
நாளும் பொளுதும் தூங்கவில்லை
நீ நடத்தும் நாடகமும் புரியவில்லை
நாணத்தில் தவிக்கிறது மனது
அதை நாளும் கேக்கிறது உயிரு ...!

யார் வந்து சென்றாலும்
அறியாத நெஞ்சம்
நீ வந்த சுவாசம் கண்டேன்
காற்றில்

அன்றே என் சுவாசம்
இல்லையே என் நெஞ்சில்
இன்று உன் சுவாசமாய்
திரிகிறேன் காதல் நோயால் ...!

கடலின் வருத்தம்...!


நான்
அமைதியாய் தூங்குகிறேன்
என்னை
ஆர்ப்பரிக்கும் சூரியனின்
காதல் மோகத்தால்
கரை சேர்க்கிறேன் நுரையாக

அப்போதுதான் தெரிந்தது
என்னைப்போல் பல
காதலர்களும் இங்கு
பள்ளிகொள்வதால் தானோ
என்னால் கரை மீறவில்லையோ...?

ஆம்
காதலர்களே என் காதல்
தீயில் வேல்விகொள்ளும்
போலிகளே நீங்கள்
திருந்தவில்லை எனில்
நான் திரும்புகிறேன்
என் சூரியனிடமே ...!

வசந்த காலம்...!


நானும் காதலித்தேன்
கண்ணின் இமைபோல
கவிதையின் உருவம்போல

ஊமை வரிகளில்
உதடுகள் மட்டும் பேசவில்லை

காலங்கள் மாறியது
கடமைகள் கூடியது
அவன் இதயம் பேசவில்லை

இருந்தும்
அவன் மறுத்தாலும் இவள்
மாறவில்லை

ஏன்? வசந்த காலம்
வராது என்றபின்னும் அவன்
வாழும் காதல் காலம்

என் வசந்தக் காலமாய்
மாறிவிடும் அந்த
ஒரு நொடியில் அவன்
என்னை நினைக்கும் போது...!

நினைவலைகள்...!


அறிவும் ஆசையும்
கொண்ட உன்னை
இரவும் பகலும்
படித்தேன்
காதல் கல்லூரியில்

பரிச்சையில் பாசகவில்லை
இருந்தும்
பயித்தியமானேன்
அவன் காதல் வெற்றியில்
நான் வாழும்
நினைவலைகளாய் மட்டுமே ....!

நன்றி கடன்...!


முதல் முறையாக
திருடினேன்
காதலை அல்ல
நட்பை !

அந்த நட்பே உப்பாய்
மாறியதால்
நன்றி கடனாய்
மறுக்கிறேன்

காதல் கடலில்
கரை சேராத
காற்றலைகளைப்போல்
காதருந்தப் பட்டமாய்
குப்பைத் தொட்டியில் ...!

செவ்வாய் பெண்...!


தாழம் பூ கழுத்திற்கு
தங்கத்தில் பூட்டிவிட்ட
தாலி கொடியில்
மங்களக் கோலமிட்ட
மன்னவன் தோட்டத்தில்
குங்குமக் கோலமாய்
பிறந்த குழந்தை செல்வமே

இந்த செவ்வாய் பெண் !
மாதங்கள் மாலையிட
மங்கையவள் தேகம் கூட
சங்கம் வைத்த நங்கைக்கு
அங்கங்கள் சூடியத் தாவணி
கோட்டையில் மாமன்னவன்
மாலையிட மங்கையர் பாட்டுப் 
பாட மகிழ்ந்து பூக்கிறாள்
மருதாணி வெக்கத்தில்
நிலவுகள் மூடி மறையும்
போது நிஜங்களும் மறைக்கிறது

ஆம் அவள் ஆடிய
ஆட்டமும் ஓடிய ஓட்டமும்
வெள்ளி ஜலங்கையில்
பூட்டிய முத்துக்களைப் போல்
சொல்லிச் சொல்லிக் காட்டியது
வயதிற்கு வந்த நாளை ...!

நினைத்தாள்
பிறந்தது வெள்ளி
பேர்விட்டது சனி
பள்ளிக்குச் சென்றது திங்கள்
பருவம் வந்தது செவ்வாய்
அய்யோ ..?
இப்போது தான்
புதிதாய் பிறந்து விட்டேன்
செவ்வாய் பெண்ணாய்

வாழ்க்கை மேடையில்
வந்து போகும் முக்கிய
நாட்களாய் பிறந்த
வெள்ளி செவ்வாய்
என் வாழ்க்கையில் மட்டும்
ஏன் விளங்காய் மாறியது ...?

ஜாதகம் என்னும்
சங்க தழிழர்களின் அங்கத்தில்
சிங்கம் போல் சீறி
விழையாடுவதால் தானோ ..?

ஆம் மங்கை பெண்களின்
மாங்கல்ய தோசமாய்
யாகம் செய்வதால்
மணமாகாத பெண்கள்
எத்தனை எத்தனை அத்தனை
மனமும் செத்து வாழ்வது
பத்து தலைமுறையும்
பாதித்துவிடுகிறது....

அய்யோ ..? ஏன் இந்த
ஜாதகம் நிறுத்துங்கள்
நிஜங்களை வாழவிடுங்கள்
அப்படியானால் ....!
நானும் வாழ்கிறேன்
என் தலைமுறையை
பெருக்க

சுருக்கமாய் சொன்னால்
பருவம் வந்ததும்
உருவம் மாறலாம்
ஆனால் உணர்வுகள் மாறாது
அப்படி இருக்கையில்

மனம் முடிக்க மட்டும்
ஏன் மரண ஓலையை
நாடுகிறேர்கள்
வேண்டாம் விதவையை கூட
வாழவைக்கும் விந்தை
உலகத்தில்

எங்களைப்போல்
செவ்வாய் பெண்களையும்
வாழவிடுங்கள்
நாங்களும் வாழ்ந்து சாதிக்கிறோம் ...!


காதல் தேன்...!


காதல் நாயகனே உன்
கால்தடம் பட்ட
தோட்டத்தில்
வேரூன்றினேன் உன் பெயரை

தினமும் முத்தத்தால்
நீரூற்றி

நினைவின்
யுத்தத்தால் உரம்போட்டு ...

சத்தமின்றி யுத்தம்
செய்யும் இதய துடிப்பை

சொல்லும் விழியின் ஒளியில்
வளரவிட்டேன்
காதல் மலரை

அது என்றோ மலர்ந்தவுடன்
வண்டுகளாய் பறக்கிறேன்

காதல் தேனை உண்பதற்கு
சம்மதிப்பாயா ...?

கண்ணில்லா காதல்...!


துள்ளிச் செல்லும் வயதில்
பள்ளி சென்றேன்
காளையவன்
கன்னத்தில் தொட்டதால்
கண்மூடி திறக்கும்முன்
காதல் பிறந்துவிட்டது ...!

அறிந்தும் அறியாமலும்
செய்தக் காதலை
படித்தும் முடித்துவிட்டேன் ...!

ஆனால் பயன்படவில்லை
பாதி அரியரிலே தோல்வி
பட்டத்தில் வேள்வி தாண்டமல்
வீடு சேர்ந்தேன்
கண்ணில்லா கைதியாய்
கவிதை வெளிச்சத்தில் ...!

காதல் சின்னம்...!


காதல் சின்னம் தாஜ்மஹால் ..!
கலை நயமும் கற்பனை நயமும்
சேர்ந்தக் காதல் சிற்பமாய்
சிதைக்கப்பட்ட ஷாஜகானின்
கல்லறைக் கோட்டம் ...!

ஆம் அதில் உண்மைக் 
காதலை வெளிப்படுத்தினார்
உயிருடன் கலந்துவிட்ட
மும்தாஜ்க்கு மேக்ரான்
கற்களால் கட்டப்பட்டு
நிலவு வெளிச்சத்திலும்
அபார காதல் சிற்பம்போல்
மிண்ணுகிறது ...!

இதுமட்டுமா ...? பௌவுர்ணமி
நாட்களிலும் பால் போல்
அபிஷேகம் செய்யும்
பாதரசங்களும் அன்பு
காதலை உணர்த்துகிறது ...!

காதல் அழிவதில்லை - 2


எத்தனையோ
காதல்கள் பிறக்கின்றன
இறக்கின்றன ஆனால்
காதல் அழிவதில்லை ...!

காதல் செய்யும் காதலர்கள் தான்
அழிகிறார்கள் ....!

காரணம் ?
உறவாடித் திரியும் வயதில்
காதல் களவாடி பிறந்ததால்

நினைவாடித் திரிந்து பார்
நித்தம் நித்தம் நிந்தனையில்

உளவாக விடியும் உனது மஞ்சதில்
உயிர் கொண்டக் காதல் புற ...!

குடியால் கெட்டு மடியும் மனம்...!


குடியால் கெட்டு மடியும் மனம் 
தடியடிப் பட்டும் திருந்தவில்லை 

பொதியடிப் பட்ட மக்களிடம் 
மிதியடிப் பட்டும் திருந்தவில்லை 

சதியடிப் பட்டச் சாக்கடையில் 
பலஅடி பட்டும் திருந்தவில்லை 

பொழுதடிபோன சரக்கடி 
கேடுகெட்ட குடியால் 

நாடுகெட்டு போவதில்லாமல் 
தானும் கெட்டு போகிறான் 
தறுதலையாய் ...!

கனவுகள் மெய்ப்பட...!


என் மனதோடு பேசிய
வார்த்தைகளை
இரு மனதோடு பேசுகிறேன்
காதல் மொழியில்

அன்பே கலைத்துவிடாதே
கனவிலாவது உன்னுடன்
கைகோர்க்குறேன்

என்றோ ஒருநாள் நினைவாகும்
என்ற நம்பிக்கையில்
அன்றே விழித்துருப்பேன்
கனவுகள் மெய்ப்பட
கல்யாண கோணத்தில் ...!

காதல் லீலைகள்...!


இளைஞர்களே....
அன்றையக் காதல்
உண்மையை வெளிப்படுத்தியதால்
உலகில் எழாமிடத்தில் இருந்தது ...!

இன்றையக் காதல்
காமத்தை வெளிப்படுத்தியதால்
கறைபடிந்து விட்டது ...!

காகிதத் தாள்களில் விளக்குகிறேன் ...?
விடிந்து பார்த்தால்
விதவையின் மறுமணம்
வியப்பில் அண்ணனை கொன்று
தம்பி வழக்கை கொடுத்தார் ...!

இதுமட்டுமா ...?
கல்லூரி மாணவனுக்கு
கைக்குட்டை போல்
காதலும் புதுசு புதுசாய்
பூக்கிறது...!

இன்னும் சொல்லப்போனால் ...?
என் உயிரே நீதான்
என்றவன் அவளுக்கு உயிர்
கொடுத்து ஓடிவிட்டான்
தாய்மையில் கண்ணீர் தொடரும் ...!

ஜாதியில்லை மதமில்லை
இனமில்லை நாடுமில்லை
இணையத்தளத்தில் காதல்
அணைந்து போகும் போது 
ஐடியும் மறந்து போகும்
மிஞ்சியது கணிப்பொறி ...!

பட்டாம் பூச்சியாய் பறந்து
விரிந்த உலகில்
கொட்டாங்குச்சி கூட
காதலிக்கிறது ....ஆம்

பள்ளியில் தொடங்கி
பஸ்டாப் வரையிலும்
தொங்கி நிற்கும் காதல்
தங்கு தடயின்றி
தொன்று தொட்டு முடிகிறது
சந்தேகக் காதலில்
சமுத்திர பிணங்களாய் ...!



குப்பையாய் நாறும் காதல்...!


மனசைப் பரிமாறிக் கொள்ள
டேட்டிங்

மானத்தை மறைத்துக் கொள்ள
பார்ட்டிங்க்

ஞானத்தை வளர்த்துக் கொள்ள
இன்டெர்நெட்

காமத்தை முடித்துக் கொள்ள
காதல் நெட்

குப்பையாய் நாறுகிறது காதல் ...!

நானும் காதலித்தேன்...!



கருவின் மடியில் கண்ணீர் சிந்திய
அன்னையை கண்டு - பின்

கல்லறையா கணவனறையா என்று
கலங்காமல் என் திருமுகம் காண
ஏங்கி தவிக்கும் தாயின்மனவேதனையை காதலித்தேன்

பிறந்தேன் செல்லமாய் மெல்ல மெல்ல
அப்போது நான் அழுத முதல் அழுகையைகாதலித்தேன்

என் அழுகைக்கு அமிர்தமாய் அமத்திய
தாய் பாலை காதலித்தேன் ....

தாய்மாமன் மடியில் வைத்து தலைமொட்டை
போட்டு பின் தலையாட்டம் கறிபோட்டு
மலையாட்டம் சோறுபோட்டு காதுகுத்தும்
பஞ்சாங்கத்தை காதலித்தேன் ....

அடியெடுத்து முதல் படியேறிய கல்வி
சாலையின் கனவுகளை காதலித்தேன் ....

பதினாறு வயதிலே முளைத்த அரும்பு
மீசையில் குறும்புகள் பதித்த காதலை காதலித்தேன் ...

இப்படி அணுஅணுவாய் காதலித்த
அன்னையை மறந்து வேறு பெண்ணை
காதலித்தேன் அவளும் ஒருநாள்
அன்னையவால் என்று ...!

அறிந்து கொள்ளுங்கள்...!



உறவுகள் நிரந்தரமில்லை 
உயிர்கள் நிரந்தரமில்லை 
ஆனால் 
உண்மை நிரந்தரம் 

நாம் அழிந்தாலும் 
நம் நிழல் அழியாது முந்தைய 
தலைவர்களைபோல் ...

மனிதா நிழலால் உன்னை 
நிலம் சுமக்கிறது 
நீ வாழும்போது ...

நிஜத்தால் 
நிலம் சுமக்கிறது 
நீ இறந்தப்பிறகும் ...!


காதல் காகிதமில்லை...!


காதல் கடையில் வாங்கும் 
காகிதம் இல்லை நீ 
படித்ததும் கிழித்தெறிய

கண்களில் தோன்றி 
கல்லறையில் மறையும் 
கல்விக்கூடம் இதில் 
வெற்றி தோல்விக்கு இடமில்லை ....!

மிஞ்சியது வலியே விழியோடு 
மொழி பேசும் ஈரமனதின்
சோகங்களாய் ராகம்படும்
நாணல்கள் ...! 

வலிகள் ...!


மனதின் வலியை
மௌனம் சொல்லிவிடும்

பிரிவின் வலியை
காலம் சொல்லிவிடும்

ஆனால்
காதல் வலியை
நீ
இருக்கும் காலம்வரை
நெஞ்சில் வலித்திருக்கும்...!

காதலைவிட நட்பே சிறந்தது...!


ஒரு முறை பட்ட
இதயத்தில்
பலமுறை
பூத்தக் காதல்
தலைமுறை
காணாமல் போகலாம் ...!

ஆனால்
பலமுறை பட்ட
இதயத்தில்
ஒரு முறை
பூத்த நட்பு
தலைமுறை
கண்டும் தலைகாக்கும் ...!


விலை போகும் காதல்...!


என்னவளை கண்ணே கனியே
மணியே முத்தே அமுதே
என்று கவிதையால் வர்ணித்தேன் ....

அவளோ
கடையில் வாங்கித் தந்த
கள்வனைக் காதலித்தால்

விலை போகும் காதலை
எண்ணி வீழ்வதா இல்லை
விதியே என்று சாவதா ...!

எப்பொழுதும் என்னில் நீயே...!


இருவிழி மூடி ஒரு விழி
பார்வையாய்
மருவிழி கனவில்
மயங்கிய என்னை

கருவிழி மனதில்
காற்றலையாய்
காதல் பாடம் பேசியவனே

உன்னை
உண்ணும் உணவிலும்
உடுத்தும் ஆடையிலும்
என்னும் எழுத்திலும்
செய்யும் பணியிலும்
உறங்கும் உயிரிலும்
கலந்து உறவாடும் உயிரே

என்னில் நீயனாய்
ஆனால்
உன்னில் நானாகும் காலம்
எப்போது ...!


உப்பாய் மாறிய கண்ணீர் ...!


இதயமே ...!
அன்று
எனக்கு மட்டுமே
துடித்தாய் ....!

இன்று
அவனுக்காக
துடித்ததால் தவிக்கிறேன்

காதல் தாகத்தில்
உப்புத் தண்ணீராய்
மாறியது கண்ணீர்
துளிகள் ...!



காதல் வரம்...!


விதியை வென்றேன் சகியே உன்
சதியை வெள்ள முடியாமல்
சாமியாரானேன் ...!

காதல் வரம் தருவாயா
சொல் காத்திருக்கிறேன்
உன்னை காதல் செய்ய ....!

பூத்திருக்கிறேன் காதல் ரோஜாவாக
கண்மணியே உன் கருங்
கூந்தலில் சூடிக்கொள்ள ...!

உதிர்ந்ததும் மறந்துவிடாதே
உன் இதய புத்தகத்தில்
பத்திரப்படுத்து நிம்மதியாகப்
படுத்துறங்குவேன் ....!

இன்றைய சமுதாயம்...!


சிறைப் பிடித்தச் சமுதாயத்தில் எத்தனை
கறைப் பிடித்த மனிதர்கள் அத்தனையும்
மலர்வது காலை மலரிலா ...?

முதல் பக்கத்தில் முற்றும் துறந்த
முனிவரின் சல்லாபங்கள்

அடுத்த பக்கத்தில் அரசனும் ஆண்டியானன்
அடுத்தவரின் மனைவிக்கு ஆசைபட்டதால்

நடு பக்கத்தில் நாட்டை உறுத்தும் செய்திகள்
சட்டை போட்டும் சரிபாதி காட்டும்
சினிமாப் படங்கள் ....

கட்டிலறையில் மனைவியை கொன்ற
கணவனின் பட்டியலிடும் காமலீலைகள் ....!

படித்தும் திருந்தாத பள்ளி சிறுவர்களின்
வாழ்க்கை தோட்டத்தில்
அபின் கஞ்சா நூழைந்ததால் காணாமல்
போகும் இளைஞர்கள் ...!

போதை போட்டு காரை ஒட்டியதால்
ஊரைவிட்டு போன குடும்பங்கள் ...!

பசி பட்டினி கொடுமையால்
உயிரை மாய்யித்த துருவங்கள் ....!

யார் என்ன சொன்னாலும் நான் செய்வேன்
என்ற பாலியல் மன்னனின்
மனதை உறுத்தும் பக்கங்கள் ...!

கடைசி பக்கத்தில் கடலும் பொங்கும்
கற்பிணியின் வயிற்றில் அதிசிய
குழந்தை ...

இப்படி சீர் கெட்ட சமுதாயம்
பட்டும் திருந்தவில்லை உடல்
கெட்டும் திருந்தவில்லை ....!




என் காதல் தூங்குகிறது ...!


விடிந்தும் தூங்குகிறேன்
உன்னை கனவில்
கண்டதால்....

எழுந்துவிட்டேன் தூக்கத்தை
விட்டு ஆனால் உன்மீது
கொண்ட ஏக்கம் தூங்கவில்லை ...!

இருந்தும் தூங்குகிறேன்
என் மரணத்திற்கு பின்பாவது
என்னை நினைப்பாய் என்று ...!

விழியாக வீழ்கிறேன்...!


கருவறை காண ஆசைப்பட்டேன்
உன் காதல் கருவறை தொட்டதுமே
கண்ணீர்ராய் மாறிவிட்டேன் ...!

இன்னும் நுழைந்திருந்தால் நான்
கல்லறையகிருப்பேன் இந்த பூமியின்
மண்ணிற்கு இரையாய் ...!

காதல் கொடுமையல்ல
காதலில் பட்ட வலிகள் தான் ...!
அன்பே நீ வலியாக மாறியதால்
நான் விழியாக வீழ்கிறேன் ...!

கிரகப் பிரவேசம் ...!


உள்ளம் இல்லமாய் வீசியபோது
பால் காய்ச்சிய
உன் காதல் சூட்டில்
காணாமல் போன
என் இதய வாசல்

இப்போது
பூட்டிக்கிடப்பது ஏனோ...?
புரியாவில்லையே
புரிந்தால் கிரகப் பிரவேசம்
செய்துவிடு புது மணமக்கள்
திருவிழாவாக ...!

தலை சாய் தோழியே...!


பிரிவில் தெரியும் நட்பின்
சுவடுகள் என்பார்கள் ஆம்

கண்டேன் அவள் அருகில்
இருக்கும் போது ...

தொலைவில் இருந்தாலும்
பாசம் பிறக்கும் என்று

ஆனால் இப்போது தான்
புரிந்தது அத்தனையும்
வேசம் என்று

மோசம் போகும் முன்
பிரிந்து விடுகிறேன் நட்பாகவே

இன்னும் தொடருகிறேன் அவள்
திருந்துவாள் என்று

காரணம் நான் கொண்ட
காதல் நிஜமானதால்

நாள் கண்டு காத்திருக்கிறேன்
நூல் கொண்ட சேலையால்

தாலி கொண்டு வாழ்வதற்கு
நீ தலை சாய்பாயா தோழியே ...!

என்னடா வாழ்க்கை...!


மனம் என்னடா மனம்
பணம் தானடா நிதம்
குணம் என்னடா குணம்
குறை தானடா நிதம்
இனம் என்னடா இனம்
இல்லை தானடா நிதம்...!

வெக்கப்பட்டு...!


வேண்டாம் என்ற சொல்லில்
வேடிக்கை உண்டு ஆம்
உன் தோல்வி வழக்கைத் 
தொட்டுப் பார்க்கும் கிரகங்கள்

உன்னை ஆட்டி வைத்ததால்
அழிவு என்னும் ஆழ்கடலை
நோக்கி நடக்கிறாயோ...?

என்றாவது ஒரு நாள்
நினைத்துப் பார்ப்பாய் அப்போது
நீயே விலகி விடுவாய்
வெக்கப்பட்டு ...!

கனவு கோட்டை ...!


இம்சை அரசனே
நீ என்
இதயக் கோட்டையில்
ராஜாவாக மாறியதால்

இந்த ராணியின்
கனவுக் கோட்டையில்
காம லீலைகளை கவிதையாக்கி
வாழுகிறேன்

வெறும் உப்பில்லா
பாண்டமாக குப்பை தொட்டியில்
வந்து மீட்டு வீடு

பின் வீரனாய்
பூட்டி விடு பூவிலங்கை
உனக்கு பரிசாய் தருகிறேன்
புத்திர பாக்கியத்தை...!

வெற்றி தலைமுறை...!


தோல்வியில் பெற்ற ஒளியே
துளைந்து போய்விடாதே
துணிந்து நில் ...!

வெற்றி வேட்க்கை
விரைந்து வரும்
உன்னை வாழ்துவதற்கு ...!

அப்போது வாழ்ந்து காட்டு
வாலிபம்மின்றி வயது போனாலும்
உன் வாழ்க்கை பேர் சொல்லட்டும்
அடுத்தத் தலை முறைக்கும் ...!

கவிதைத் தமிழே வாழ்க...!


சோகத்தில் கக்கிய
வைர வார்த்தைகளே வாழ்க ...!

தங்களை விற்க மனமில்லை
விதைத்துவிட்டேன்
கவிதை விதைகளாய் ...!

அய்யோ அதில் எத்தனை
அதிசய மலராய் கவிஞர்கள்
வாசம் வீசுகிறார்கள் ....!

தமிழ் மழை பொழிந்ததால்
தாய் நாடே வாழ்க வாழ்க ...!

ஒலி இல்லா காதல்...!


இமை துடிக்க மறந்தாலும்
இதயம் துடித்துக் கொண்டுதான்
இருக்கிறது காரணம்

காதல் பட்டக் காயத்தால்
காயம் பட்டக் கல்லறையில்
ஈரம் பட்ட இம்சைகள்

சோகம் பட்டச் சொல்லாய்
இமை மழை பொழிந்தும்
இதயச் சாரல் நிக்கவில்லை
இளமை தீயியும் அணையவில்லை

வருந்துகிறேன் வாலிப லீலையை
கண்டு வாழ்த்துகிறேன் ஊமையாய்
ஒலி இல்லா கவிதையில் ...!

எல்லாம் நீயே...!


இலை மரக் காய்போல
நீ
என் இதயத்தின் மறைவில்
வாழ்கிறாய்

அத்தனையும்
நீ
சொல்லித் தந்த
காதல் பாடங்கள்

உணவே இல்லை
உன்னில் ஆனால்
உதயமாகும் மதிமுக

உணவை என்
இரு விழி சுவையால்
சுவைக்கும் போது
விடியவே இல்லை

என்னில்
நீ உதயமாகி வாழ்ந்த
நாள் முதலில் என்னுயிர்
மண்ணில் மறையும்
போது கூட

ஒரு கணம் நீயே
வந்துபோகும் நினைவின்
சுவையே போதும்

எல்லாம் நீயாகவே இருந்தாய்
இப்போது யாரோ என்று
ஏமாற்றிச் சென்றாயே ...!


ஏனோ...?


உயிரைத் தொட்டக் காற்றே
பின் உணர்வை தந்த சுகமே
உறவை மட்டும் தர
மறுப்பது ஏனோ...?

உயிராய் உருவமாய்
இதயத்தை அறுத்த
கயிரே
நீ உறவே இல்லாமல்
ஒதுங்கி சென்றது ஏனோ ...?

மாலைச் சூடி மங்களம்
முழங்குவாய் என்று
மடியில் மயங்கிய என்னை
நொடியில் மறந்தது ஏனோ ..?

நினைவில் நான் இருந்தும்
உறவில் உயிர் பிறந்தும்
விரைவில் வந்து விடியலாய்

வெற்றி வாகை சூடுவாய்
என்றேன் ஆனால் நீயோ
என் வாழ்க்கையை இரவாக்கி
விட்டு போனது ஏனோ ...?

காதல் பந்தம் ...!


நினைத்து நினைத்து மறக்கிறேன்
நினைவே இல்லாமல்

அசைத்து அசைத்து மொழிகிறேன்
ஊமை விழியில்

சுவைத்து சுவைத்து வாழ்கிறேன்
சுமையான கனவில்

இவை எப்போது புரியும் உனக்கு
அப்போது நான் பிறப்பேன்
உன் காதல் பந்தத்தில் ....!

காதல் பிழை...!


இந்திரனாய் இதயத்தில் 
நுழைந்தாய் 
இப்போது 

சந்திரனாய் உதித்து 
மறைந்து விடுகிறாய் 
என் இருவிழி உலகில் 

ஏனோ...?
புரியவில்லை இருந்தும் 
புலம்புகிறேன் 

கவிதை 
மொழியில் கண்ணிருந்தும் 
கண்ணில்லாப் பிழை போல ...!

அன்பே அழிந்துவிடாதே ...!


மனம் முடிந்தது காதல் 
மலராய் 
மணம் முடிந்தது மோதல் 
மலையாய் 

பிறிந்தோம் பிரிய மனமில்லாமல்
இனியாவது சேர்வோமா ...? 
இல்லை செத்துவிடுவோமா 

இருந்தும் காத்திருப்போம் 
இதயாத்தில் பூத்த காதலை 
நினைத்து நினைத்து 

வருந்தாதே வாழ்க்கை இருக்கிறது 
என்றோ வரும் வசந்தக் காலத்தை 
நினைத்து நிகழ் காலத்தை 
அழித்துவிடாதே என் அன்பே ...!


பிறவாதக் காதல்...!

மனதில் ஒரு மகுடம் சூட்டினாய் 
அந்த நாளை நினைத்தால் 
வருசங்கள் கூட நிமிடங்கள் தான்
உன்னை 
என் இதய தோட்டத்தில் 
தூவிட்ட ஊமை விழிகளின்
உதிரச் சுவடுகள் 
நீ மறைந்தாலும் மணந்தாலும்
என்னில் நீ வாழ்ந்து கொண்டே 
இருப்பாய் இன்னும் 
பிறவாத நம் காதல் கற்பதில் ....!

மஞ்சள் கயிறு...!


கன்னி பெண்ணின் 
நெஞ்சில் மஞ்சம் 
கொள்ளும் மஞ்சள் 
கயிற்றில் எத்தனை 
மாற்றங்கள் 

கோடியில் புறண்டவன்
தெருக்கோடிக்கு வந்தாலும் 
மருக்கோடி தேடமாட்டாள் 
மாணம் முல்ல மங்கை 

கொண்டவன் குடிகாரன் 
என்றாலும்  மன்றாடியும்   
மாங்கல்ய பிச்சை கேப்பாள் 
இந்த மண்ணில் பிறந்த மங்கை 

நோயிக்கொண்டுப் போனாலும்
பிற நாய் தேடிப் போகாமல் 
தான்னின்று தனிமையில் 
காலூன்றி வாள்வாள் 
தமிழ் மங்கை ...!

இன்றைய அரசியல்...!


அறிமுகம் இல்லா அரசியலில்
பல புதுமுகங்கள் குதித்ததால்
மதிமுகம் கண்ட மக்கள்
பணமுகம் தேடிப்போட்ட ஒட்டுகளில்

பயணம் செய்யும் தலைவர்களில்
வடிகட்டிய
வாக்குச் சீட்டை எண்ணி
மண்ணின் மைந்தனாய்
மாற்றிய பதவியை
உதவிக்காக பயன்படுத்தாமல்

பணவெறி பிடித்த பாருலகில்
பிண வெறியாய் மாற்றிய சாபங்கள்
தினம் தினம் எத்தனை
பத்திரிக்கையில்

எல்லாம் பொய்யா ..?
இல்லை மெய்யா ...?
புரியாமல் குழம்பும்
அப்பாவி மக்கள்

எப்பாவி பட்டாலும் வாழழாம்
இப்பிறவியிலே என்று வாழ்ந்து
சாகுகிறார்கள் ....!

உயிர்களே நிஜமாகுங்கள்...!


விண்ணில் தோன்றி 
மண்ணில் உதிர்ந்த 
மலர்களே 

உங்களில் எத்தனை 
வண்ணங்கள் 
அத்தனை வண்ணங்களும் 
மலர்வது 
குருதியென்னும் சுருதியின் 
விழியில் இருந்து

ஏன் இந்த வேற்றுமை 
மண்ணுக்கு உரமாகும் 
மானிட உடல் 
பொன்னும் பொருளும் 
சூட்டிப் போதை 

கொண்ட வாழ்க்கையில் 
அந்நியச் செலாவணிகளுக்கு 
ஆதிக்கம் தந்து 

பொன்னும் பொருளுக்கும் 
பொருத்தமில்லா ஏற்றம் தந்து 
எண்ணி எண்ணி 
வாழும் ஏழைகளுக்கு 
வறுமை தந்து கொடுமைதந்து 
வாழவைப்பது 
தமிழரின் பண்பாடா

மலர்களே யோசியுங்கள் 
நொடிப் பொழுதில் 
நூறும் போகலாம் ஏன்
கோடியும் போகலாம் எல்லாம் 
சேர்வது ஒரே மண்ணில் 

மண்ணுக்கு இறையாகும் உயிர்களே 
ஏன் ஜாதி மத வெறியால் 
சமத்துவம் இழந்து சாக்கடையாய் 
நாறுவதை நிறுத்துங்கள்

சந்தனமாய் 
நறுமணம் வீசுங்கள் 
காதல் கொழுந்தில் 
கருவறைக்குச் செல்லும் 
காதலர்களை வெறுக்காதீர்கள் 

சுற்றம் சூழ வாழ்த்தி 
வழியனுப்புங்கள் 
அப்போது உயிர்கள் ஜெனிக்கும்
சந்ததிகள் பெருகும் 

அதை விட்டு 
ஜாதி வெறியால் 
சமாதியின் தோட்டத்தில் 
கண்ணீர் துளிகளால் 
மலர்வளையம் சூடுவதால் 
என்ன பயன் 

பயன் கொண்ட உயிரை 
பால் படுத்தாமல் 
பண்புடன் வாழக்கத்துக் 
கொள்ளுங்கள் 

அப்போதாவது சுகமான 
இந்தியாவில் 
ஆண்பால் பெண்பால் 
ஒற்றுமையைத் தவிர 
வேறு எந்த வேற்றுமையின்றி 

அன்பு தோட்டத்தில் ஓளி வீசும் 
வண்ண மலர்களாய் 
வாசம் வீசுவோம் ...!



கண்ணீர் மேகம்...!


தேகத்தில் பட்டக் காதலில் 

தாகத்தைச் சுட்டெறித்தவள்

மோகத்தின் மந்திரத்தில் 

யாகத்தை வென்று விட்டாள் 

பின் சோகமாய் வீசிய 

புயலில் தாகமாய் மாறிவிட்டாள் 

காதல் தோல்வியில் 

கண்ணீர் மேகமாய் ...!

மௌன வெக்கம் ...!


குடையாக மலர்ந்த காதலில்
உடையாக இல்லாமல் 
மனகண் கோர்த்து 
கரைசேரும் காதல் நிலவே 

உன்னை எடைபோட்டு பார்க்கிறேன் 
நீ என்னில் பாதியென்று 
விடைமட்டும் தருவாயா சொல் 

அன்றே வெள்ளி நட்சத்திரத்தில் 
பள்ளி கொள்ளும் பருவ 
பெண்ணாய் மாற்றுகிறேன் 

பின் விடியும்போது தெரியும் 
என் மடியில் மயங்கிய
மௌன வெக்கதை ...! 

அகத்தை விரும்பும் காதல்...!


முகத்தைப் பார்த்து 
விரும்பாதே பெண்ணி 
அகத்தை விரும்பிபார் 

உன் கண்ணுள்ளவரை காவல் 
இருப்பாள் 
அன்பு மனைவியாய் 
ஆசை குழந்தையாய் 

துன்பத்தில் நீ சிந்தும் 
கண்ணீரில் இன்பமாய் 
நனைந்து 

உன் துன்பத்தைக் கூட 
இன்பமாய் மாற்றுவாள் 
பண்புள்ள காதலியாய் இந்த 
பாருலகில் .... !


பெண் சிசு கொலை ...!


அன்பாய் பண்பாய் 
அமைதியாய் பூத்தப் பெண்பாவைத்  
தொட்டிலைத் தொட்டதும் 
உதிர்ந்துவிட்டது 

பட்டுப் போனப் பெண்ணாய் 
கெட்டுப் போன உலகில் 
எட்டு வைக்காமல் 

கட்டிவைத்தக் கல்லறையில் 
கண்மூடி உறங்குகிறது 
நாளையக் கனவுகளை 
மறந்து ...!

ஈர ரத்தம்...!


மாடாய் பிறந்து - பின் 
ஓடாய் திரியும் ஏழைக்கு
இருக்க ஓலை இல்லை 
படுக்க பாயில்லை - ஆனால் 

பாடாய் படுத்தும் பணக்காரன் 
மெத்தையில் தூங்கி - பின் 
நித்திரையில் கூட 

நீல வானத்தை தொடுகிறான் 
ஏழையின் ஈர ரத்தத்தில் 
கசிந்தக் கோடிப் பணத்தில் ..!

சொல்ல அல்ல மெல்ல...!


சொல்லச் சொல்ல 
தவிக்குதட மெல்ல 
துடிக்கும் இதயம் 

அல்ல அல்ல 
தோணுதட கண்ணில் 
பட்ட இதயம் 

மெல்ல மெல்ல 
கேக்குதட உன்னை 
கட்டியணைத்த இதயம் ..!

கனியும் காதலும்...!


உன் உருவம் கண்டு 
என் புருவம் எழுந்ததால் 

நான் கருவம் கொண்டேன் 
பருவம் கொண்ட மேனியில் 
காதல் மிருகம் பாயிந்ததால்

அன்பே மன்னிப்பாயா சொல்
இமையால் வருடி உமையாள் 
உன்னை கனியவைப்பேன் 
காதல் மஞ்சத்தில் ....!

பெண் பால் ...!


கண்பால் கண்டக் காதலனை 
இந்த பெண்பால் 
விழிகள் சூடியதால் 
காதல் பால் உற்றேடுத்தது

நண்பால் வந்த நாயகனே 
சொல் பால் பேசியதால் 
என்பால் கண்ட இதயம் 
துன்பால் துளைந்தது

ஆண்பால் வாசத்தைப் 
பருகிய சுவசப் பால் 
நெஞ்சில் நுழைந்ததால்

குருதிப் பால் பொங்கி பின் 
இருதிப் பால் வரை நீ 
என் இதயப்பால் என்றது 

உருதிப் பால் கொண்ட 
உள்ளத்தில் 
மருகிப் பால் சேராமல் 
பூமிப் பால் தாங்கிய 
காதல் வெண்பாலை 

அந்தக் காமப் பால் 
தீண்டியதால் 
கவிதைபால் பிறந்தது ...!

கால மெல்லம்‌ காதல் வாழ்க ...!


உலகில் எத்தனை 
உறவுகள் பிறக்கலாம் 
இறக்கலாம் 

ஆனால் 
காதல் அழிவதில்லை
ஏன் தெரியுமா?

நகமும் சதையுமாய் 
நணாத்தில் பிறப்பதால் 

குணமும் மணமும்மாய் 
கோபத்தில் பிறப்பதால் 

மலரும் நினைவும்மாய் 
மாதத்தில் பிறப்பதால் 

அழகும் அறிவுமாய் 
அன்பில் பிறப்பதால் 

இப்படி நிலவும் வானுமாய் 
நீங்காத இடத்தை பிடித்ததால் 

காதல் பிறந்து பிறந்து பின் 
இறந்து இறந்து வாழ்கிறது 

காலம்‌ மெல்லாம் காதல் 
வாழ்க என்று ..!

mhishavideo - 145