என்னை திருத்த...!

















எத்தனையோ பேனாக்கள் 
எழுதிவிட்டன 
என்னை திருத்த!!! 

அத்தனையும் சாம்பலானது போல் 
அகிலமும் சாம்பலாகிறது 
சமுதாயக் சீர்கேட்டால் 

விற்றவனும் விழுந்துவிட்டான் 
வடித்தவனும் வதந்தியாகிறான் 
படித்தவனும் பாவியாகிறான் 

இடையில் நான் எங்கே என்றால் 
வரலாற்றில் செதுக்கியச் சுவடுகள் 
இன்றைய வழிகாட்டியாகக் கெடுகிறது 
பின் எதற்கு எழுதுகோல்

மாற்றம் தறா மானிடனே என்னை 
மறந்து பார் மரணமும் உன் முன்னாள் 
ஜெனனம் கேட்கும் அப்போது 

புதிய தலைமுறையோடு பழமைக்கு 
முற்றுப்புள்ளி வைத்துப் பார் 
யுகங்கள் இனிமையாகும் 
யோகங்கள் தனிமையாகும் 

துணிவே துணை என்று 
பணிவின் பாதையாகும் 
பார்ப்பவரெல்லாம் 
இவர் பாரைப் பார் 
பாரின் உயர்வை பார் என்று 
பாராட்டுவார்கள்...!








ஓணம் வாழ்த்துகள்


















மூன்றாம் பிறையின் முழு நிலவே 
நீ முத்தமிழ் பேசும் பைங்கிளியாய்
என் தமிழ் கொண்ட தாய் நாட்டில் 
தன் தாய்மொழி கொண்டு என் தமிழ் 
பேசிடும் மலையாள பைங்கிளியே

மஞ்சள் தாவணியில் மலர்கரம் கோர்த்து 
மகிழம்பூ மாலை சூட்டி அங்க மேனியில் 
தங்கம் சூடி தலைவாரி பூவைத்து தலைவாசல் 
மேனியிலே தகதகவென மலர்கோலம் பூட்டி
தாமரை பெண்ணாய் தகதிமி தாளத்துடன் 

கேரளா இசையில் கதக்களி நடனமாய்
பொங்கல் பொது விழாவாய் பேர் கொண்ட 
நதிக்கரையில் படகு போட்டியில் தொடக்கி 
பொன் கையில் ஏந்திய கயிறு போட்டியில் 
வென்று புலி வேசமாய் குதுகல கொண்டத்தில் 

பத்து நாள் பாடிஆடி பகவனே மாவேலி 
மன்னவனை அத்தப்பூ கோலத்தில் 
புது அரிசி மாவிளக்கில் படையால் போட்டு 
விடைகொடுக்கும் மலையாள மக்களே 
நீங்கள் மனம் கொண்ட வாழ்க்கையில் 
எல்லா வளம் கொண்டு வாழ வாழ்த்துகிறோம் !
 


















என் தலைமுறை செல்லமே இன்று
எங்கள் மார்பில் தவழும் 
மூன்றாம் பிறையே உன் 
தந்தை வாழ்த்தும் வாழ்த்துகள் 

வானைப் போல் உயர்ந்த குணமும் 
வாழை போல் தழைக்கும் மனமும் 
தாயைப் போல் சிறந்த அறிவும் 
தந்தை போல் துனிந்த கரமும் பெற்று 

எல்லாம் வல்ல இறைவன் அருளால் 
எந்நாளும் பொன்னாளாய் யாரும்  
எழுதாத காவியமாய் பேசும் ஓவியமே 
ஒரு நூறு வருடங்கள் 
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க...!















ஈருயிர் சுவைதனிலே பிறந்த மகளே - உன்னை
இதயமுடன் வாழ்த்துகிறோம் நாங்கள் 

கனியமுதும் நல் குனமமுதும் பெற்று  
கடவுள் அருளால் கல்வியமுதும் கிடைத்து   
பிழையமுது இல்லா புகழுடன் 
பேர் சொல்லும் பிள்ளையாய் - நீ 

வேண்டிய செல்வத்துடன் 
வேண்டாத துன்பம் அகற்றி 
நம் சொந்தக் கூட்டில் பந்தங்களோடு 
பாமரரும் போற்றும் வண்ணம் 
பாதங்கள் பாதிக்கும் கண்ணே 
என் பொண்ணே - நீ 

வரைமுறை தமிழோடு இவ்வையம் போற்ற 
வாழ்க பல்லாண்டு என் மகளே நீ வாழ்க பல்லாண்டு ...!


உண்ணாதே மனிதா...!









மனித! மருந்திற்காக 
ஆடு தின்றாய் 
மாடு தின்றாய் 
கோழி தின்றாய் 
மீன் தின்றாய் 












வரும் காலத்தில் 
மனிதனே மனிதனைத் தின்றால் 
மரணமில்லை யென்றொரு நிலை 
வரும் அப்போது 

விலங்கினங்கள் முதலிடத்திலும் 
மனித இனம் பூஜ்யத்தில் இருக்கும் 












இறைவா இப்போது சொல் 
இயற்கை எந்த இடத்தில் 
இருக்கும் ?

புல்லாகி புழுக்களாகி
கல்லும்  காணாமல் 
கடலும் பேணாமல் 












வான் சுரந்த மழைகள் எல்லாம் 
தான் பதித்த மண்ணில் 
நோய் சுமந்து செல்லும் போது 

சூரியன் உதிப்பது மேற்கு 
சுற்றி மறைவது கிழக்கு 
விண்மீன் கூட்டம் எதற்கென்று 
விரட்டியடிக்கும் நிலவு 

இரவு பகலாக 
துன்பம் இன்பமாக 
இருண்ட உலகம் 
எடுக்கும் புதிய ஜெனனம் 














அதில் நீ ஆண் நான் பெண்
சுழற்சி முறையில் இருந்தால் 
உலகம் எப்படி இருக்கும் என்று 
வடித்து பார்த்தேன் 

வார்த்தைகள் ஊமையானது
வரிகள் உயிர்த்தெழுந்தது  
இனியாவது உயிரை வதைத்து 
உண்ணாதே மனிதா...! 




மெழுகுவர்த்தி...!
















உருகி கருகி 
ஒளியாகி சிவப்பாகிறேன் 
இருளைப் போக்க 

எதிரி வந்ததும் 
உதறி தள்ளிவிட்டனர் 
உணர்ச்சியில்லா மெழுகானதால்
மீண்டும் 

வறட்சி கண்ட நாளில் 
உயிராவேன் 
என்னை மிதித்தால் 
உன் உயிரையும் வாங்குவேன் 

ஹிஷாலீ ஹைக்கூ





தகுதி தராதரம் 
பார்ப்பதில்லை 
மருந்துக்கள்...!












வன்முறையின் 
உறுதி மொழி 
சமயம் மொழி வட்டாரம்...! 

தமிழ் நாட்டின் தலைப்பு...!






















தமிழ் நாட்டின் தலைப்பு 
வறுமை 

வாழ்த்து 
நடிகை நடிகர் 

திருக்குறள் 
டேட்டிங் காதல் 

நீதி நெறி 
இரட்டைத் திருமணம் 

செய்யுள் 
ஏழை பணக்காரர் பாகுபாடு 

இலக்கணம் 
தாய் தந்தையை மீறிய ஜனனம் 

துணைப்பாடம் 
போட்டி போட்டு வாழ நினைப்பது 

உரைநடை 
தினப் போப்பரில் 
திருட்டு கொள்ளை கொலை 

பொதுப்பாடல்
முதியவர் விடுதி 

தனிப்பாடல் 
காதல் திருமணம் 

கூட்டுப்பாடல் 
அலுவலக சில்மிசங்கள் 

மனப்பாடம் 
நேற்றைய ஆசைகளை 
இன்றையக் கனவில் ரசிப்பது 

இப்படி புத்தகம் போட்டு 
பார்த்தால்...

புறத்தில் நானூறு கொடுமை 
அகத்தில் நானூறு வன்முறை 

சார்பெழுத்தில் 
அயல் நாடு 

சமூகவியலில் 
உள்நாடு 

கணித்துவிட்டனர் 
கணித மேதைகள் 

கெடுத்துவிட்டனர் 
அறிவியல் போதைகள் 

இறுதியில் 
ஆங்கிலத்தில் சிறைபட்டனர் 

காரணம் 
பொருளாதார 
சிக்கலை சீர் செய்ய 

என்று எழுதிய  
கவிஞரும் அகப்பட்டனர் 

காரணம் தமிழ் ஒரு 
தனிமொழியல்ல 
செம்மொழி...!





உலகம் உருண்டை...!



ஊழலை ஒழிக்க 
பேசிக் கொண்டிருந்தேன் 
ழல் வேகமாக 
ஓடிக்கொண்டே  இருந்தது 
கொஞ்ச நேரத்தில் 
அது என்னிடமே கேட்டுவிட்டது 
காரணம்
உலகம் உருண்டை...!

தமிழ் காதல் மண்ணில் விழும்...!




கண்டு கொய்து கனவு பழுத்து 
தூய காதல் மார்பில் விழும் 
தொண்டைச் சுரப்பை நாளும் தொழும்
தேகம் மட்டும் என் பேர் எழும் 

வண்டு கோர்க்கும் தேன் பழம்போல் 
வயதின் காலம் பெருகி விழும் 
என்றும் மனையை கண்டு தொழும் 
இதயம் மட்டும் உனக்காய் எழும் 

கழித்தவர் நாவில் பலவென எழும் 
காதில் கடித்து கண்ணீர் விழும் 
மண்டி இறைவனை மணக்கத் தொழும் 
மறுஜென்மம் வேண்டாமென வரம் பழும்

விதியேனும் பென்சிலின் அழித்து எழும் 
விடையாய் மார்பில் நீ விழாவிடில்
கூறிய முனையின் துன்பம் எழும் 
கொண்டிடுவார் என்னுயிர் மண்ணில் விழும் 




நிஜமான காதல்...! 


இமையின் சொற்களில்
பரிவு தந்தாய்
கனிவு தந்தாய்

இதைக் கண்டு உதவியாய்

காதல் தந்தேன்
மரியாதை தந்தேன்

இதைப் பார்த்தும்

உன் பெற்றோர் ....

நேர்மை கொண்ட

நெஞ்சங்களே நல்ல
எண்ணம் கொண்டு
வாழ்க என
வாழ்த்தியதை கண்டு - நான்

கோபத்தை மறந்தேன்

வேள்வியாய் மாறும்
வெறுப்பை மறந்தேன்

இழிவில்லா சொற்களைக் கண்டு

பொறாமையை மறந்தேன்
சுயநலம் மறந்தேன்

இப்போது என்னை

ஈன்ற வீட்டையே மறந்தேன்
மணமகளாய் மாறி உனது
குலம் தலைக்க குமரியானவள்

தாயாகி கனிந்திருக்கும்

கற்பனை பெட்டகமாய்
மாறிவிட்டேன்
என் கனவு கவிதையில்

விடிந்ததும் நிலவுமில்லை

என் காதல் நிஜமும்மில்லை
இருந்தும் நேசிக்கிறேன்
உன்னை அல்ல

நம் காதலை

மீண்டும் விடியும் என்ற
நம்பிக்கையில் ..!

சோலைவன காதல் ...!


எண்ணத்தில் கவிதையாகி என்
கண்வண்ணத்தில் காணலாகிய உயிரே...
நீ வந்ததால் இந்த பாலைவனமும்
சோலைவனமாக மாற தவம்
கிடக்கிறது! மறந்துவிடாதே....!

விரும்புகிறேன்...!


அந்த மொட்டைமாடியின்
வெளிச்சத்தில் 
குறைந்த இரவின் தனிமையில் 
நம்மை பார்த்து 

வாழ்த்திய நச்சதிரங்களும் 
என்னை பொட்டிட்டு சூடிய 
நிலவும் சாட்சியாக 
இருந்ததை நினைத்து நினைத்து 

இன்னும் வாழ்ந்து கொண்டே 
இருக்கிறேன் உன் உயிர் 
மனைவியாக மட்டுமில்லாமல் 

ஒரு தோழியாகவும்மே... 
அன்பே ...என்
காதலை தோல்வியாக்கிவிடாதே...!

காதல் வாசம்...!



கனவாய் நினைவாய் 
நீ கவிதையாய் 
நிதமும் ஒரு பூவாய் 
மளர்க்கிறாய் 
அத்தனைப் பூக்களிலும் 
மனம் வீசுகிறதோ இல்லையோ ?...
ஆனால் என் காதல் 
வீசுவது உண்மை ...!
என் சுவாசக் காற்றே ...
என் உயிர் உதிரும் முன் 
காதல் வாசம் கண்டு 
கணவனாக வருவாயா?
நான் தினமும் பூக்கும் பூவல்ல 
நீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில் 
பாவலமாய் பூக்கும் 
குறிஞ்சிபூ...!

என்னவாக இருக்கும் ...?



இரு உடல் தனித்து 
இதயம் மறைத்து 
கண்கள் பேசும் 
கற்பனை மொழி 
அமுதமாவது போல் 

ஈருடல் உற்று 
இமைகள் நான்கும் 
இணைந்து பேசும் 
காதல் மொழி 
என்னவாக இருக்கும் ...?


தாய்...!


சுகமும் வலியும் தந்தாலும் 
பல யுகமும் அகமும் 
கடந்தாலும் 
வரமும் வாழ்வும் 
தந்து வானில் மறைகிறாள் 
பெண் ...!!

தானம்...!


மனிதனே ...எத்தனையோ 
தானங்களை தந்துவிட்டாய் 
ஆனால் ...
புன்னியதானத்தை எப்போது 
தரப்போகிறாய் ...?
இந்த பூமியும் புனிதமாகட்டும்! 



இன்றைய உலகம்...!



கண்பட்ட வானம் என் 
கைப்பற்றும்  ஓவியமானது 
என்று பூரித்திருந்தேன் - இன்று 

அறிவியல் தொட்ட மாற்றத்தால் 
அதிசயமான உலகை அளந்து 
படம் பிடித்தது கருவி   

முயற்சிக்கு 
முற்றுப் புள்ளி  வைக்காததால்
கற்காலம் கணினிக் காலமானது 
பொற்காலம் பூகம்ப கோளமானது 

அலச்சியம் செய்யாதே 
சிறு எறும்பும் சீரிவிட்டால் 
சில நொடி கடுத்திடும் 
அதன் கண்ணில் நீ 
பெரும் துரும்பாய் தோன்றியதால் 

மாற்றங்கள் எல்லாம் மாயை 
மறுபடியும் பேசும் ஒரு நோயை 
எதிர்த்து போனால் வாழ்வு 
எழுதிவைத்தான் அன்றே சாவு...! 


வணக்கம்...!

துடிக்க மட்டும் தெரிந்த என் 
இதயத்திற்கு ...
கவி வடிக்கவும் கற்று 
தந்த தமிழுக்கு வணக்கம் ....
பிறரையும் என்பால் எண்ணி 
பின்பற்றும் .... நம்
பிறந்த நாட்டிற்கு வணக்க்ம் ....
ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை 
போதித்த ....
காந்திக்கு வணக்கம்.....
கண்ணீரில் மிதக்கும் 
கன்னியர்கள் மிகுந்த நாட்டில் 
கர்ப்புக்கு முக்கியம் தந்த 
கண்ணகிக்கு வணக்கம் ...!

யார் சொந்தம்...!

இரவில் உதயமாகும் 
உறவுகளே... 
உங்கள் சொந்தம் யார்?
கடலைபோல் விரிந்த மனம் 
காக்கை போல சிறந்த குணம் 
நிலவைபோல் நீண்ட பாசம் 
இவை அனைத்தும் 
உயிரில்லா உருவங்கள் இருந்தும் 
உறவுகளாய் உணரும் மனிதனுக்கு 
இந்த தாய்நாடே சொந்தம்!
தூக்கமும் ஏக்கமும் 
துரத்துகிற பந்தத்தில் 
ஆக்கமும் நோக்கமும் 
ஊட்டும் தாய்மைக்கு 
இந்த தாய்நாடே சொந்தம்!

எல்லாம் புதியது...!



எத்தனையோ அழகுமுகம் 
கண்டாலும் அன்பே உன்முகம் 
காணும்போது.... 
என்றுமே எனக்கு புதுமுகம்தான்!

அறிமுகம் உள்ள உறவுகளைவிட 
அறிமுகமில்லா உன்னுறவை
காணும்போது....
என்றுமே எனக்கு புது உறவுதான்!

தாய் தந்தை பாசம் எல்லாம் 
தலைமுறை பாசம் - அன்பே.... 
தன்னலமில்லா உன் பாசம் 
என் தலைமுறைக்கு புதுசுதான்! 

எத்தனை புதுசுகள் கண்டாலும் 
உன் கடைக்கண் பார்வை 
பட்டாலே ....
என் இமைக்கண் முதல் 
இதயம் வரை சிலிர்க்கும் 
சுகமே புதுசுதான்...!



பார்க்காத காதல்...!




இமைகள் சூடவில்லை ஆனால் 
இதயங்கள் சூடிவிட்டன....
மொழிகள் பேசவில்லை ஆனால் 
மௌனங்கள் பேசிவிட்டன.

அவன் எங்கோ ....
அவள் எங்கோ .... ஆனால் 
இதயம் மட்டும் இணையவில்லை 
இப்போதும் உதயமாகிக்கொண்டே 
இருக்கிறது இவர்கள் காதல்! 

காணும்போது கல்யாணம் -என்ற 
கட்டுப்பாட்டில் ....காலங்கள் 
கடந்தாலும் கடமைகள் மறந்தாலும் 
காதலை மறக்கவில்லை 

மோதல்கள் பலவாக வந்தாலும் 
சாதல் வரை நீயின்றி நானில்லை 
நானின்றி நீயில்லை ....இல்லையேன் 
நாம் இன்றி இந்த உலகம் இல்லை 
காதலே வாழ்க!



இதற்கு பேர் தான் காதலா?




வேஷம் கொண்ட நாட்டில்
பாசம் கொண்டேன்
பாவி மகனே

என்னை
மோசம் செய்து விட்டு
இனியும் பாசம் காட்டுகிறயே
இதற்க்கு பேர் தான் காதலா?

என்னை யாருக்கும் பங்கிடாமல்
உனக்கே சொந்தமாக்க
உறவு தந்தாயே
இதற்க்கு பேர் தான் காதலா?

என் உள்ளம் முதல் உயிர் வரை
உனக்கே உனக்கே என்ற
உளறல் தந்தயே ...
இதற்கு பேர் தான் காதலா?

உன்னைக் காணாமல் ....!



மனதில் நீ வந்த மருகணமே 
மரணமும் என்னை துறத்துகிறதே 
அன்பே... 
இதற்கு பெயர் தான் காதலா?

இதயம் இருப்பதால் தான் இந்த 
உலகமே சுழலுகிறது ....
நீ என்னுள் இருப்பதால் தான் 
என் இதயமே சுழலுகிறது ....

காதலனே 
என்னை காண உன் கண்கள் 
துடிக்கவில்லையா?

அப்படி துடித்தல் என்னை கண்டுவிடு 
இலையேன் என் இதயம் 
கல்லரையாகிவிடும் 
உன்னைக் காணாமல் ..!

அழுக்கு மூட்டை...!


ராமு : மச்சான் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிறார்களே ஏன்...?

சோமு : அதுவா அடுத்தவன் அழுக்கு மூட்டைய மோந்து பாத்தே மூக்கு செத்திருக்கும் அதான்...





ஹிஷாலீ ஹைக்கூ



வனவாசத்தில் 
வானவில்...
சீதாராமனைத்  தேடி



இன்றே தேடுகிறேன்...!



நாளை என் காதல் சாகுமானால் இன்றே 
தேடுகிறேன் வேறு காதலை ...

அழகற்ற நாயகனின்றி - நல் 
அறிவுற்ற மனிதனாய் வேண்டும் 

இதயமற்ற தருணங்களிலும்  - சற்று 
இறங்கி வரும் கண்ணீர் வேண்டும் 

கணித மேதையாகாவிட்டாலும் - நாளைய 
கனவுகளை மேதையாக்கும் கற்பனை வேண்டும் 

வசதியற்ற  வள்ளலாகாவிட்டாலும் - என்றும் 
வரைமுறை தவறா தூயவன் வேண்டும் 

ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகாவிட்டாலும் 
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும் 

என்று வலை போட்டு தேடுகிறேன் 
இன்றைய காதல் வாழ வேண்டுமானால் - நேற்றையக் 
காதல் பாடமாக வேண்டும் ...!


சென்ரியுவாய்த் திருக்குறள் - 251-255

குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.


ஹிஷாலீ சென்ரியு :

கோலியைத் தின்றவன் 
ஆடுகிறான் கோயிலில்
அருளில்லாமல் 

குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

ஹிஷாலீ சென்ரியு :

இறைச்சி விற்றப் பணம் 
புரச்சி செய்தது 
பாவத்தின் கண்ணீரில் 

குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம்.

ஹிஷாலீ சென்ரியு :

பேனாவை மறந்த கத்தி...
போட என்றது
இறக்கத்தை...

குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்.

ஹிஷாலீ சென்ரியு :

கொலையில்லா இறக்கம் 
விலையில்லா பாவம் 
போக்கும்...!

குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
அண்ணாத்தல் செய்யாது அளறு.

ஹிஷாலீ சென்ரியு :

கொன்றால் பாவம் 
தின்றால் நரகம் 
என்றது அறம்

அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!



ஒரு தனியார் நிறுவனம் அங்கே 20க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தார்கள் ஓர் நாள் அந்த நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் இருந்த பணிப்பெண் ஒரு தவறு செய்துவிட்டாள் உடனே அவள் MD நீ இங்கு வேலைக்கு சேர்ந்து எத்தனை வருடங்கள் ஆகிறது இன்று வரை நீ என்ன கற்றுகொண்டாய் என்றார் அதற்கு அவள் எந்த பதிலும் கூறாமல்  கீழே வந்தாள் தனது கோவத்தை மறைத்து கடைசியாக  அந்த MD யின் மகளை அழைத்துவரச்‌ சென்றுவிட்டாள் மறுநாள் அலுவலகம் வந்தாள் தனது ராஜினமா கடிதத்தை கொடுத்தாள் அதற்கு அவர் ஏன் இந்த முடிவு என்றார் நீங்கள் தானே சொன்னீர்கள் சார் நான் இங்கு வந்து ஒரு வேலையும் கற்றுக்கொள்ளவில்லை என்று பின் எதற்கு இங்கு நான் வேலை செய்ய வேண்டும் அதான் எனது பதவியை ராஜினமா செய்கிறேன். இதுவரை தாங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றிகள் சார் என்று சென்றுவிட்டாள்.

அவரும் ஏன் என்று கேட்காமல் அதை வாங்கி வைத்துகொண்டார் நாட்கள் நகர்ந்தது பணிகள் ஒவ்வொன்றும் தாமதமானது சில நேரம் சில பணிகள் முடிக்காமலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தார் MD இதற்கு காரணம் என்ன என்று வினாவும் போது அங்கு வரும் டாகுமென்ட்ஸ் ,மற்றும் பில்ஸ் அனைத்தையும் கவி தான் வாங்கி சரி பார்த்து அந்தந்த பையிலி போடுவாள் பின் அங்கு வரும் அனைவருக்கும் அன்பாக பதில் கூறியுள்ளார், மேலும் எவர் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து வந்துள்ளார் என்பதையும் ஒருவர் லீவு போட்டால் அவர் வேலையை அனைத்தும் கவி தான் செய்து வந்திருக்கிறாள் என்பது அப்போது தான் புரிந்தது. 

உடனே அவர்  அலுவலக மீட்டிங் ஒன்றை ஏற்படுத்தினார் அங்கு அனைவரும் கூடினர் அப்போது தான் புரிந்தது அங்குள்ள அனைத்து வேலைகளையுமே கவி தான் செய்தாள் என்று. உடனே தொலைப்பேசி மூலம் அழைத்தார் MD.கவி வந்தாள் இந்த உனது கடைசி மாத சம்பளம் என்றார் கூடவே அடுத்த கவரையும் கொடுத்தார் உனக்கு இங்கே பணி உயர்வு செய்துள்ளேன் அத்துடன் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளேன் என்றார் இதை கேட்டது கவி மிகவும் சந்தோசப்பட்டாள்.

மேலும் அந்த MD கவியிடம் மன்னிப்பும் கேட்டார் ஒரு நிர்வாகத்தை நடத்தும் நான் சில காரணங்களால் சிலவற்றை சரியாக கவனிக்கவில்லை என்றும் மே மாதம் வாங்க வேண்டிய டாகுமெண்டை ஆகஸ்ட் மாதம் வரை வாங்கவில்லை என்ற தவறு உன்னிடமில்லை என்றும், நீ எந்த வேலையும் செய்யவில்லை என்ற விஜி கூறியதை நான் விசாரிக்காமல் விட்டதையும் நீ செய்த வேலைகள் அனைத்தையும் விஜியே தானே செய்தேன் என்று ஏமாற்றியதையும் உனது ராஜினமா கடிதத்தின் கையெழுத்தில் தான் புரிந்தேன் என்றும் விவரித்தார் இதை ஏன் இப்போது கூறினேன் என்றால் இனிமேல் இந்த மாதிரி தவறு நடக்கக்கூடாது  என்றும் என் மேல் உனக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதால் தான் கூறினேன் 
என்றார் அத்துடன் ஆல் தி பெஸ்ட் கூறினார்.

நன்றி என்ற வார்த்தையுடன் உண்மையும் சகிப்பு தன்மையும் விட்டுக்கொடுத்து போவதும் ஓர் அளவுக்கு தான் அந்த அளவு மீறும் போது  அமுதமும் என்ற நீதி தலை வணங்கும் என்ற உண்மை புரிந்தது தெளிந்தது என்று புன்னகைத்தாள் கவி. 

mhishavideo - 145