சென்ரியுவாய்த் திருக்குறள்-246-250

குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்தொழுகு வார்.


ஏகபோக வாழ்க்கையில் 
போலிச் சாமியார் 
இறுதிச் சடங்கு புழல்

குறள் 247:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இல்லறம் துறவறம் 
இன்பம் பெற 
கருணைப் பொருள் தேடு 

குறள் 248:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் 
அற்றார்மற் றாதல் அரிது.

ஏழை பணக்காரன் 
வாழ்க்கை ஏணி 
அருள் இழந்தால் உயிர் தீனி  

குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம்.

புத்தக அறிவு 
போலியானது 
ஞானமில்லா அருளால் 

குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து.

வாயற்றவனை வதைத்து 
பாம்பிடம் அஞ்சியது 
தவளை...! 

சென்ரியுவாய்த் திருக்குறள்-241-246

குறள் 241:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள.


பலகோடி செல்வம் 
தெருக்கோடியில் தோற்றது 
அருளற்ற பொருளால்...! 

குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.

நல்நெறி தராசில் 
அருள் முள் 
துணை...!

குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல்.

அருள் கொண்ட 
உயிரை பார்த்து 
நரகம் பயந்தது 

குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 
தன்னுயிர் அஞ்சும் வினை.

தீவினையைக் கண்டு 
கருணை உள்ளம் 
கலங்கியதில்லை 

குறள் 245:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் 
மல்லன்மா ஞாலங் கரி.

அருளுடையார் காற்று 
அகிலத்தின் 
தேன் ஊற்று...!

பிள்ளையார் சுழி...!

















ஷில்பா ஷெட்டியா இல்லை 
சில்லறை குட்டியா 
கல்லறைக்கு போகும் முன்னே 
நம் காதலுக்கு 
பிள்ளையார் சுழி போட்டுவிடு...! 




காதல் கண்ணீரையும் தரித்திவிடும்...!














சிரித்தபடி ஹலோ என்றேன்
என்னவன் சீக்கிரம் வருகிறேன் 
என்றான்....

சொல்லாமல் சென்றவனே 
இன்று சொல்லி வருவதேன்
என்றேன்....

அன்று சொல்லிச் சென்றால் 
அழுதுவிடுவாய் என்று சொல்லாமல் 
சென்றேன் உயிரே...
 
இன்று சொல்லி வந்து நின்றால் 
இடைவிடாது சிரிப்பாய் என்றான்

புன்னகையுடன் ஆனந்தக் கண்ணீரில் 
நனைந்தாள் இந்த மாது...!

காதலே இலாபம்...!















காற்றை அடகுவைத்து 
மூச்சை வாங்கினேன் 
நேற்றைய உலகம் செலவாய்
நாளைய உலகம் வரவாய் 
இடையில் காதல் மட்டுமே 
இலாபமாய் முடிந்தது....! 

ஆயுள் கைதியானது வருடங்கள்....!














இருவர் இதயமும் 
ஒன்றை பேச 
உள்ளம் மட்டும் 
ஒன்றை யோசிப்பதால் 
ஆயுள் கைதியானது 
வருடங்கள்....!

அவனுக்கு இருபது அவளுக்கு இருபத்தி நான்கு...!


















ஹலோ நலமாடிப் பெண்ணே 
உன் திருமணம் எப்போ என்று 
கடல் தாண்டி அழைத்தவனிடம் 
காதில் சொன்னேன் 

மணமாகி மஞ்சம் கொண்டு 
குணமான பிள்ளைகள் இரண்டுடன் 
வளமான வாழ்வு வாழ ஆசை 
அதற்கேற்ற ராமன் எங்கே என்று 
காத்திருக்கிறேன்
நீ சொல் உன்  மணப்பெண் யார் என்று... 

பதில் சொன்னான்
உன்னூறு பெண் பார்த்து 
எண்ணூறு  ஆசையெல்லாம்  
கண்ணூற காதல் கொண்டு 
தொண்ணூறு வயதுவரை என் 
துணைவியுடன் வாழ ஆசை என்றான் 

உள்ளம்  ஒன்றானது காதல் ரெண்டானது
அவன் தான் நான் என்று 
நான் தான் அவள் என்று 
சொல்ல தடுத்தது வயது 
சொல்லாமலே படுத்துது மனது...! 

உண்மையானவனே...!















அதிகம் நேசித்தேன் 
அவனுள் பதிந்த என் 
நினைவுகளை அல்ல...
என் பெண்மையின் நிஜங்களை
உண்மையென உரைத்ததால் 
வழி விடுகிறேன் 
வேறொரு பெண்மைக்கு நீ 
உண்மையானவனாய் இரு என்று ...!




நாணல்...!



இன்று போய் நாளை வா 
என்றாள்...
நாணலானேன் ...!
இனி வரும் வாழ்க்கையில் 
நாணலாவள் என்று...!

ஹிஷாலீ ஹைக்கூ - 38



மாலை காற்றில் 
வெண்மேகம் ததும்ப 
விழித்தது நட்சத்திரங்கள் 







வற்றிய குளம்
ருசியானது நண்டு 
பசியாறியது ஆண்மை






மின் தடை 
மகிழ்ச்சியில் 
தொலைக்காட்சி விளம்பரம் 









இலவசங்கள் 
பெற்றெடுக்கின்றன
போலித் தரம் 










வயல் மாளிகை 
வயிறு பட்டினி 
வீட்டுக்கொரு விவசாயம் செய்வீர்









கருப்பு பணத்தில் காந்தி 
நெருப்புக்கு இரையானது 
செய்தித்தாள்

பிடிக்கவில்லை






பிடிக்கவில்லை என்ற போதும் 
பின் தொடருகிறேன்....
தோல்வியில் தான் 
வெற்றி உள்ளது என்றில்லை 
வேறொருவன் 
தொற்றிக் கொள்ளக்கூடாது என்றே 

கடவுள் நீதி என்பதா....?



இதயம் இருப்பதால் தான் 
என்னவோ ....
இளமை இடம் மாறுகிறது 
இதை காதல் தோல்வி என்பதா 
கடவுள் நீதி என்பதா....?

ஆறுதல் தருவாயோ என்று...!






யாரும் அறியா நேரத்தில் 
அவதிப் படுகிறேன் - அன்பே 
நீயும் அவதிப்படுவாயோ 
என்றில்லை... 
ஆறுதல் தருவாயோ என்று...!

தூரத்தில் சென்றதால்...!



நீ 
துளிர்விடும் நேரம் 
நான் 
துயரப்படுகிறேன் - பெண்ணே 
நம் காதல் 
தூரத்தில் சென்றதால்...!

சென்ரியுவாய்த் திருக்குறள்-236-240

குறள் 236:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.
ஹிஷாலியின் சென்ரியு 
நேர் வழிப் புகழ் 
ஓர் உயிர் 
பிறப்புக்கு பெருமை 
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை 
இகழ்வாரை நோவது எவன். ஹிஷாலியின் சென்ரியு 
புகழ் பட வாழவிட்டாலும் 
இகழ் பட பேசுவோரை 
நோகடிப்பது தவறு 
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின். ஹிஷாலியின் சென்ரியு 
எஞ்சிய புகழை
சேர்க்க தவரியவனை   
வையகம் பழித்து பேசும்  
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம். ஹிஷாலியின் சென்ரியு 
புகழற்ற உடல் 
விளையற்ற நிலம் 
மழுங்கிய உலகம் 
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர். ஹிஷாலியின் சென்ரியு 
பழியில்லா புகழ் 
விலை மதிப்பில்லா 
வாழ்க்கை

ஹிஷாலீ ஹைக்கூ - 37


சுதந்திர தலைகள் 
இயந்திர கைதி 
பின் கோடு செல் கோடு
அகம் புறம் ஆண் பெண்
பூ தலை 
இருகண்கள்   
அரிசியை தீட்டினேன் 
புத்தியை தீட்ட மறந்தேன் 
விவசாயி
காதலில் மட்டும்
ஆயுள் கைதி
இதயம் 
இலக்கணம் கவிதை 
சோறு போட்டது 
காதல் 

சென்ரியுவாய்த் திருக்குறள்-231-235

குறள் 231:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.



கொடைத் தன்மை
குன்றாத புகழ்
மனிதனின் நோக்கம் 

குறள் 232:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று 
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

உண்மையான புகழ் 
வரியவருகும் 
வாரி வழங்குதல் 

குறள் 233:
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் 
பொன்றாது நிற்பதொன் றில்.

மனிதனின் 
அழியா புகழ் 
தான தருமங்கள் 

குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தேள் உலகு.

நெடும்புகழ் ஆற்றினால் 
தேவரை விட 
தெய்வமானவன் 

குறள் 235:
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் 
வித்தகர்க் கல்லால் அரிது.

இறந்தும் இறவா
புகழுடன் வாழ்வதே 
சிறப்பு

சென்ரியுவாய்த் திருக்குறள்-226-230

குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி.


கரும்பாய் பசி தீர்த்து
  எறும்பாய் சேமிப்பது 
பிறவி கருவூலம் 

குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் 
தீப்பிணி தீண்டல் அரிது.

காக்கைபோல் 
சேர்கையோடு உண்பவன் 
பசி நோய் அணுகாது 

குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்.

கொடுக்கும் இன்பம் 
கெடுக்கும் மனம் 
அறியாது 

குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்.

பெருக்கிய பொருளை 
பகிராமல் உண்பது 
பிச்சையை விட கொடியது 

குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை.


ஈயா மன துயரத்தை
வென்றது 
சாதல்...! 



ஜோக்ஸ்



தொண்டன் 1 : தலைவர் வறட்டும் மாலை மரியாதையுடன் வரவேற்கிறேன் 
தொண்டன் 2 : அட லூசு இபோம் காலை மாலை வர இன்னும் நேரம் இருக்கு




கந்தன் : ஒரு மூலம் பூ கொடுங்க பாட்டி
பாட்டி : ஒரு மாச பாக்கிய கொடு நான் பூ கொடுக்கிறேன்
கந்தன் : அந்த வசுலதான் இந்த ஒரு முழ பூவுல கலெக்ட் பண்ணனும் பாட்டி


பையன் : அண்ணா அன்னிக்கு பூ வாங்கலையா...?
அண்ணா : மாலையாவே கொடு டா
பையன் :அண்ணா அன்னிய போட்டி தள்ளிடேங்களா...?
அண்ணா : எத்தன நாளைக்கு ஒரே பூ முகத்த பாக்குறது



நண்பன் : டே மச்சான் என் காதலி மனசு பூ மாதிரி
மச்சான் : அப்போம் உன் மச்சினிச்சி மனசு பூகம்பம் மாதிரியா...?
நண்பன் : பூவா தலையானு போட்டு பாத்து சொல்லுறேன் 

ஜோக்ஸ்


பெண்கள் விரும்பி கேட்பது செருப்பு 
விரும்பாமல் கேட்பது மன்னிப்பு







அழுது உடுத்துவாங்க எட்டுமடிப்பு 
அதுல கொஞ்சம் இறங்கின இடுப்புல பலமடிப்பு 











ஆண்களின் எதிர்ப்பு 
தாய் தந்தையின் கண்டிப்பு 
















எதிர் பார்க்காமல் ரசிப்பது 
பெண்களின் சிரிப்பு 


லூசுல விட்டா சைட்டடிக்க சுறுசுறுப்பு 
தோல்வியான அடுத்த காதலி கையில் ரோஜாபூ 

mhishavideo - 145