ஹிஷாலீ ஹைக்கூ - 8

எடுத்தாலும் கொடுத்தாலும் 
எழுதியவன் தீர்ப்பில் 
இதயங்கள் இணைவதே காதல்
இலையுதிர் காலமாய் எரிக்கும் 
சூரியனைக் கூட இளம்வேனிற் 
காலமாய் மாற்றுகிறது மண்
விதைக்கும் வியர்வையில் 
வேரூன்றி வளர்க்கிறாள்
அன்னை
 பெட்டையும் சட்டைபோட்டாள் 
 பொன்முகில் கூண்டில்‌  
 தலைமுறை பெருக்க...
உதிராமல் உதிரும் சரீரத்தில்  
உரமாய் உயர்ந்திடும் அழகே  
கருநீல கூந்தல்...
வரையாத ஓவியத்தில்  
வரையும் நிறம் தான்  
மழை...!  
விழுந்தால் விதை 
விடிந்தால் கனவு 
காதல்...!
எண்ணங்கள் தீட்டும்  
வண்ண ஆயுதம்  
பேனா...!  

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...