என் காதல் |
சாதியால் பிரிந்த போது |
சகித்துக்கொண்டேன் |
அதே சாதி |
சாக்கடையைப் போல் இன்று |
நாறுவதால் |
நான் பிழைத்துக்கொண்டேன் ...! |
என் காதல் ...!
Labels:
காதல் கவிதைகள்

இனியாவது ஒரு விதி செய்வோம் ...!
பதவியைப் பிடிக்க |
ஜெகத்தினை அழிக்கும் |
ஈனப்பிரவிகளே |
இலங்கையில் இருப்பவரும் |
மனிதனென மறந்த |
மானங்கெட்ட மசுருகளே |
அடக்கு முறை ஆட்சியில் |
அடமானம் வைத்த |
பிணம் தின்னி கழுகுகளே |
இயேசு |
உயிர்த்தெழு முன் ஈழம் |
உயிர்ப்பரித்த ஓனாய்களே |
இனப்படுகொலைக்காக |
ஈழ இரத்தம் குடிக்கும் |
அசிங்கங்களே |
நாமும் ஒரு நாள் |
மனமதில் புழுகி |
மண் தனில் அழுகி |
மரணிப்போம் என்பதை மறந்து |
குறுக்குவழியில் காய் நகர்த்தும் |
குள்ள நரிகளே |
இனியாவது ஒரு விதி செய்வோம் |
இயற்கைக்கு மாறாக |
இனி ஒரு மரணம் இல்லையென்று ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Posts (Atom)
-
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...