இணைபிரியாமல் இருக்கும் …!

ஒருவருக்கு 

எதிர்பார்க்காமல் 

கிடைக்கும் உறவே

அவர்கள்

எதிர் காலம் வரை 

இணைபிரியாமல் இருக்கும் …!


சத்தமிடுகிறது மனம் ..!

என் அவனே

உன் 

அழைப்பு 

ஓசை கேட்டவுடன் 

வராத ரயில் 

தண்டவாளத்தில்

வந்து நிற்கும் கூட்ஸ் 

வண்டியாட்டம் 

குதுகலத்தில்

தடக் தடக் என்று 

சத்தமிடுகிறது மனம் ..!


காதல் வானில் ...!

ஒருவன்
ஒருத்தி
இதுவரை
சந்தித்ததே
இல்லை 
காதல் வானில் ...! 

ஊசி மழை ...!

வெளியே மழை 

உள்ளுக்குள் 

உன்னையும் என்னையும் 

நனைய விடாமல் 

சேர்த்து தைக்கிறது 

ஊசி மழை ...!


மனமே ... !

உன்னை திண்டாட

வைக்கும் மனமே ...

ஒரு நாள்

உன்னை

கொண்டாட

காத்து கிடக்கும் ...!


வெளுத்ததெல்லாம் பாலல்ல ...!

வெளுத்ததெல்லாம் பாலல்ல

கருத்ததெல்லாம் கடவுளல்ல

இரண்டும் கலந்த கலவையில் 

தான் ஒளிந்திருக்கு வாழ்க்கை ...!


செழிப்பாக வளர்ந்தது இல்லை ...!

படிக்காத மண்ணில் 

விதைத்த விதையும் 

பிடிக்காத பெண்ணின் 

மனதில் விதைத்த காதலும் 

செழிப்பாக வளர்ந்தது இல்லை ...!


அப்துல் கலாம் ...!

Image

விதைக்கலாம்
மரமாகலாம்
ஆனால் ...
இவர் போல்
எவரும் கலாம்
ஆக முடியாது ...!

என் காதல் போதையை ...!

கபட நாடகக் காரி அவள் கடைக்கண்ணில் ஒளித்து வைத்திருக்கிறாள் என் காதல் போதையை ...! 

கோவக்கார பெண் ...!

பூத்துக் குலுங்கும்
பூவைப் போல்
பார்த்ததும்
சிரித்து மணம்
 வீசுகிறாள்
கோவக்கார பெண் ...!

ஏங்க விடுவதே காதலோ ...!

பாதி உறக்கத்தில் நீயும்
மீதி உறக்கத்தில்
உன் கனவும்
என்னைத் தூங்க விடாமல்
ஏங்க விடுவதே காதலோ ...! 

முன்னால் காதலியே ...!

நீ
திருந்தி வந்தாலும்
திரும்ப வந்தாலும்
தீரா காதலுடன்
விரும்பி காதலிப்பேன்
என் விரும்பத்தக்க
முன்னால் காதலியே ...!

அயல் மண் ...!

அயல் மண்ணில்
சொத்து சேர்க்க
புறப்பட்டவன் எல்லாம்

நிரந்தர மண்ணில்
பிழைக்க தவறியவன் 

மின்மினி பூச்சிகள் ....!

மையிருட்டு வாசிக்க 
முடியாமல் 
திரும்புகிறது மின்மினி பூச்சிகள் ....!

அநாகரிக வார்த்தை ...!


தீ 
பற்றிக்கொள்ளத் 
துடிக்கும் கண்ணில் 
நீர்
சுரக்க கற்றுக் கொடுத்தது 
அநாகரிக வார்த்தை ...!


என்னிடமிருந்து ...!


தினமும் 
ஏதாவதொரு 
தண்டனை கொடுக்க 
வேண்டுமென்று 
கவிதை புனைகிறேன் 
புனைந்த கவிதையையே 
பணையமாக வைத்து 
தப்பித்துக்கொள்கிறாய் 
என்னிடமிருந்து ...!

எலும்புக் கூடுகள் ...!


எலும்புகள் 
வளையாவிடில் 
எல்லோரும் 
எலும்புக் கூடுகள் ...!

புத்தன் சித்தன் ...!


புத்தன் 
பாவத்திலிருந்து 
பக்குவப் பட்டவன் ...

சித்தன் 
புண்ணியத்திலிருந்து
பைத்தியமாக்கப்பட்டவன் ..!

வானில் கேட்கிறது ..!


நீ 
நனைந்த 
மழையில் 
நானும் 
நனைகிறேன் 
இருமல் 
சத்தம் 
என்னவோ 
வானில் கேட்கிறது ..!

அணிகலன்களுக்கு அப்பாற்பட்டவன் ...!


அவன் 
அணிகலன்களுக்கு 
அப்பாற்பட்டவன் 
ஆனால்
என்னை 
உடுத்திக்கொள்ள 
மட்டும் 
தயங்கியதே 
இல்லை ...!


ஆண் நூறு சதவீதம் ...!


ஆண் 
நூறு சதவீதம் 
உண்மையாக 
இருந்தால் 
பெண் 
இரண்டும் மடங்கு 
மெய்யாக 
இருப்பாள் ...!

பூனை ...!


பூனை 
பதுங்குகிறது என்றால்
அங்கே 
மாமிச வாடை 
வீசுகிறது 
என்று அர்த்தம் ...!

மன்னிக்க கற்றுக் கொடுத்த காதல் ...!

மன்னிக்க
கற்றுக் கொடுத்த காதல்
தான்
சிலருக்கு
மரணிக்கக் கற்றுக் கொடுக்கிறது
பலருக்கு
மறக்கக் கற்றுக் கொடுக்கிறது ...!!!!

மனம் ..!

அடுத்தவர் கண்ணீருக்கு
ஆறுதல் கூற முடிந்த
உன்னால்
உனது கண்ணீருக்கு
ஆறுதல் தேடும் போது
 வறண்ட குளம் போல
வற்றி விடுகிறது  
மனம் ..! 

பொது நலம் ...!

நீ எனக்கு மட்டும் வேண்டும்
என்பது சுயநலம்
நீ எனக்காவே வேண்டும்
என்பது பொது நலம் 

நினைவுக் கவிதை ...!

கனவை உடைக்கும்
கண்களுக்கும்
பரிசளிக்கிறது
நினைவுக் கவிதை ...!

வாழ்க்கை வரலாறு படைக்கும் ...!

எல்லோர் முன் ஓடும்
நிழலாக இருக்காதே  
எப்போதாவது ஓடும்
 மிதி வண்டியாக இரு
வாழ்க்கை வரலாறு படைக்கும் ...! 

மறந்து விடாதே ...!

உனக்கு 
இனி எந்த துயரமும் 
பட வாய்ப்பு இல்லை எனில்
நீ பட்ட வாய்ப்பை மறந்து விடாதே ...!

நினைவில் கொள் ...!

அடுத்தவர் துயரத்தில் 
குளிர் காயாதே 
அதற்கு அடுத்த வேளையில் 
அதே துயரம் உன்னை
எரிக்கக் காத்திருக்கும் என்பதை 
நினைவில் கொள் ...!

பாடுபடு …

அடுத்த வேளை பசிக்காக பாடுபடு
அடுத்தவரை பழி தீர்க்க பாடுபடாதே ...! 

ஜாதி மதம் ..!

நிதியை மணந்த நீதி
பெற்றெடுக்கிறது
சதியொன்று விதியொன்று
என இந்த இரண்டும் இணைந்து
மறு பரிசீலனை பண்ணுகிறது
ஜாதி மதம் ..!

கனவே விருந்து ...!

சிலருக்கு 
உணவே மருந்து 
பலருக்கு 
கனவே விருந்து

தொடர் புள்ளி ...!

காலம் மெஹந்திக்கு
முற்று புள்ளி வைக்கும்...
கோலம் விடியலுக்கு
தொடர் புள்ளி வைக்கும் ...! 

உனக்கு அமிர்தமாகும் ...!

உன் காயம் ஒருவருக்கு
மருந்தாகும் போது ... 
அந்த ஒருவரின் ஞாயம்
உனக்கு அமிர்தமாகும் ...!

கருணை கடல் ...!

இல்லாதவன் மனதில்
கருணை கடலை போல்
நிறைந்து இருக்கும் …!
இருப்பவன் மனதில் 
கருணை கடுகை போல்
 குறைந்து இருக்கும் ...!

மிஸ்மெரிசம் ...!

நீ  மெண்டல் என
கிண்டலாக அழைக்கும்
போது கூட
மனசுக்குள் மிஸ்மெரிசம்
நடக்கிறது இது
தான் புரிதலோ ...!

உன் காதலோ...!

கசப்புகளை மட்டுமே
உட்கொண்டு என் இதயத்தில்
சர்க்கரை நோய் வருவதற்குக்
காரணம் இனிப்பான
உன் காதலோ...!

கரை தாண்டுவதில்லை ...!

கடலலையை போல் என்
காதலின் கனவலையும்
கரை தாண்டுவதில்லை ...!

ஒரு காதல் கவிதை ...!

உன்னிடம் ரசனை இருக்கிறது
என்னிடம் கவிதை இருக்கிறது 
சேர்ந்து படைப்போம்
 ஒரு காதல் கவிதை ...!

நினையாதே என்று ...!

நீ
என்னை தூக்கி
எறிந்து விட்ட போதும்
அவ்வப்போது தூக்கி நிறுத்தும்
நினைவுகளுக்கு
என்ன தெரியும்
மதியார் காதலை
நினையாதே என்று ...!

அனிச்சமாக மாறிவிடும் ..!

அன்பே...
ஆரத் தழுவ வேண்டாம் ஆறுதலாக 
ஓர் ஆசை முத்தம் தந்து விடு
அத்தனை தழும்புகளும்
அனிச்சமாக மாறிவிடும் ..!

உன் காதலோ...!

கசப்புகளை மட்டுமே உட்கொண்டு  
என் இதயத்தில்  
சர்க்கரை நோய் வருவதற்குக் காரணம் இனிப்பான  
உன் காதலோ...!

நினைவுக் கவிதை ...!

கனவை உடைக்கும்
கண்களுக்கும் பரிசளிக்கிறது  
நினைவுக் கவிதை ...!

காதல் வானில் ...!



நீ இதழ் விரித்ததும்  
பூவில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி  
சிறகடித்துப் பறப்பது போல்
என் விழியில் அமர்ந்திருந்த
இமை இரண்டும் கண்ணடித்துப்
பறக்கிறது காதல் வானில் ...!

mhishavideo - 145