கொலுசு - ஜூன் 2019

பழைய புல்லாங்குழல்
இன்னும் சில கூடுதலான 
ஓட்டைகள்
ஆசை ஆசையாய்
தொட்டு பார்த்தேன்
ஆசை துறந்த புத்தரை
ஊர் திரும்பும் வியாபாரி
சுருக்குப் பை நிறைய
பட்டணத்துப் பலகாரம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 70

துப்புரவுத் தொழிலாளியை வரைந்து முடித்தேன். குப்பையான மனம்  தூய்மையானது.