என் காதல் ...!

என் காதல்
சாதியால் பிரிந்த போது
சகித்துக்கொண்டேன்
அதே சாதி
சாக்கடையைப் போல் இன்று
நாறுவதால்
நான் பிழைத்துக்கொண்டேன் ...!

இனியாவது ஒரு விதி செய்வோம் ...!

பதவியைப் பிடிக்க
ஜெகத்தினை அழிக்கும்
ஈனப்பிரவிகளே
இலங்கையில் இருப்பவரும்
மனிதனென மறந்த 
மானங்கெட்ட மசுருகளே 
அடக்கு முறை ஆட்சியில்
அடமானம் வைத்த 
பிணம் தின்னி கழுகுகளே
இயேசு 
உயிர்த்தெழு முன் ஈழம் 
உயிர்ப்பரித்த ஓனாய்களே 
இனப்படுகொலைக்காக
ஈழ இரத்தம் குடிக்கும்
அசிங்கங்களே
நாமும் ஒரு நாள்
மனமதில் புழுகி 
மண் தனில் அழுகி 
மரணிப்போம் என்பதை மறந்து 
குறுக்குவழியில் காய் நகர்த்தும் 
குள்ள நரிகளே 
இனியாவது ஒரு விதி செய்வோம்
இயற்கைக்கு மாறாக 
இனி ஒரு மரணம் இல்லையென்று !

மரபணு மாற்றமில்லை ...!

புத்தனின் சிரசை 
பிடிங்கி கடவுளின் 
உடலில் ஒட்டவைத்தேன்
எந்த ஒரு 
மரபணு மாற்றமும்
நிகழ்த்தப்படவில்லை 

பகல் கனவு ...!

ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும்
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார்
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார்
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார்
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் 
மது கடையை மூடியிருப்பார் 
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் 
என பகல் கனவு கண்டால் தங்கை !

வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

எந்த தீபத்தில் தெரிகிறது
வெற்றியின் சுடரொளி 
எந்த சூடத்தில் மிளிர்கிறது
திருஷ்டியின் வெகுமதி 
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது
பாவத்தின் சிறுதுளி
எந்த பணத்தில் நிறைகிறது
மரணத்தின் உயிர்வலி
பின் 
எதற்காக கல்லை கடவுளென்றும்
கருவறையை கல்லென்றும் 
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

ஓட்டு கேட்ட ஆட்டு மந்தைகள் ...!

சாக்கடை பாயிந்த 
சந்தனமரத்தில்
சகல விதமான 
பறவைகளின் ரிங்காரம்
இடையே ...
சமத்துவக் காற்று
சாதியற்ற கிளைகள்
குள்ள நரிப் பூக்கள்
கொலைகாரக் கனிகள்
பட்டு திருந்திய கட்டுமரம்
பாடாய் பாடுபடுத்தும் படர் தாமரை குளம்
எனவெல்லாம் பொய் கூறும்
ஆட்டு மந்தைகள்
ஆங்காங்கே ஓட்டு
கேட்டு வருவதைக்கண்டு 
சந்தனமரம் சிரிப்பாய் சிரித்ததாம்
முட்டால் மனிதனே
என்னில் இருப்பது
அகிம்சையின் சுவாசம்
அதை அரிந்தும்
தலையசைக்கிற நீ
எப்படி நாளைய 
தலைவனை தேர்ந்தெடுப்பாய்
பணம் பத்தும் செய்யும் 
என்பதை மறந்து
அந்த ஒரு கணம்
பைத்தியமாகிவிடாமல்
நின்று நிதானமாக 
தேர்வு செய் 
உனக்கோ எனக்கோ
ஒர்
உன்மை ஜெயிக்கலாம் !

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...