கொலுசு - ஹைக்கூ Aug - 2019


மழை ஓய்ந்த சப்தம் 
வாசற் கதவைத் திறக்கையில் 
வானில் ரங்கோலி
கரையில் பூ
வழி நெடுகிலும்
உதிர்ந்து திரும்பும் காற்று

பச்சோந்தியாக மாற !

நீ 
அழகாகச் சிரிக்கிறாய் 
எனக்குத் தான் 
மனம் வரவில்லை 
பச்சோந்தியாக மாற !

வேடிக்கை ...!

முதல் முறையாக
அம்மாவின்
இடுப்பில் அமர்ந்து
வேடிக்கை பார்த்த
நிலா ....

இறுதியாகச் சாலையில்
இறந்து கிடக்கும் போது
என்னை வேடிக்கை
பார்த்தது அதே நிலா !

சாதி !

ஒண்ணா சோறு தின்று உதட்டையும் பரிமாறிக்கொண்டாய் கண்ணா பின்னாவென்று காசையும் செலவு செய்துவிட்டாய் எல்லாம் ஒன்றென்று ஈருடல் ஓருயிர் கலந்துவிட்டாய் இதற்குப் பின் என்ன இருக்கிறது என இதயம் கேட்டதற்குச் என் சாதி வேறு உன் சாதி வேறு பின் எப்படி 
எனக்கு பொஞ்சாதியவாய் என்று !

கொலுசு - ஜூலை - 2019

நீர் வளையத்தில்
மிதந்து வரும் விளக்கில்
கடவுள் தரிசனம்
மனக் கதவின் வழியாக 
தினமும் போய் வருகிறேன் 
நான் படித்த வகுப்பறைக்குள்
ரகசிய முத்தம்
அசிங்கமாய் புல் வெளி மேல் 
நுரை ததும் பனித்துளி

கொலுசு - ஜூன் 2019

பழைய புல்லாங்குழல்
இன்னும் சில கூடுதலான 
ஓட்டைகள்
ஆசை ஆசையாய்
தொட்டு பார்த்தேன்
ஆசை துறந்த புத்தரை
ஊர் திரும்பும் வியாபாரி
சுருக்குப் பை நிறைய
பட்டணத்துப் பலகாரம்

பாவத்தின் சம்பளம் மரணமென்று !

விட்டுக் கொடுத்து
விட்டுக் கொடுத்து
வீதியில் நிற்கிறேன்
சிலர் விதியென்றார்கள்
சிலர் மதியென்றார்கள்
நானோ விதி மதி கலந்த
சதியென்றேன்
சிரித்தார்கள்
சிந்தித்து கொண்டே
சிலையாக நின்றேன்
கண் கடலானது
கால் மறுத்துப் போனது
இதயம் இடைவெளி விட்டு விட்டு 
லேசாக நிற்கத் தொடங்கியது
இனி இருக்க மாட்டோம் 
என நினைக்கையில்
நினைவுக்கு வந்தது
பாவத்தின் சம்பளம் மரணமென்று !

கவிச்சூரியன் இதழ் மே -19

சுதந்திரப் பூமி
அகதிகளாக திரியும் 
வண்ணத்துப்பூச்சிகள்

குருவியின் அலகு வரைகையில் 
பென்சில் முனையில்
கீச்கீச் சத்தம்

மரம் வெட்டும் போது
வியர்வையில் துளிர்க்கிறது
மனிதனின் பிம்பம்

கல்லறைத் தோட்டம் 
புதிதாகப் பூக்கும் 
மெழுகுவர்த்தி பூ

எப்படி குடை பிடித்தாலும்
மௌனமாய் உடைகிறது 
நீர்க் குமிழிகள்

முன் ஜென்ம பகையோ
பறவையின் அலகில்
தவளையின் சத்தம்

என்றோ வந்து போன மழை
பரண் மேல்
துருப்பிடித்த குடைக் கம்பி

பண முதலை ...!

காட்டு விலங்கை
வீட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

வீட்டு விலங்கை
தெரு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

தெரு விலங்கை
ரோட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

ரோட்டு விலங்கை
நகர விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

நகர விலங்கை
ஊர் விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

ஊர் விலங்கை
மாவட்ட விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

மாவட்ட விலங்கை
நாட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

நாட்டு விலங்கை
மாநில விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

மாநில விலங்கை
மத்திய விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

இறுதியில்
மத்திய விலங்கை
பண முதலை விழுங்கியாது

கொலுசு - மே 2019

பனியுறைந்த மரக்கிளைகளில்
சிக்கியிருக்கிறது
சிவப்பு நிற பலூன்

என் காதல் ...!

என் காதல்
சாதியால் பிரிந்த போது
சகித்துக்கொண்டேன்
அதே சாதி
சாக்கடையைப் போல் இன்று
நாறுவதால்
நான் பிழைத்துக்கொண்டேன் ...!

இனியாவது ஒரு விதி செய்வோம் ...!

பதவியைப் பிடிக்க
ஜெகத்தினை அழிக்கும்
ஈனப்பிரவிகளே
இலங்கையில் இருப்பவரும்
மனிதனென மறந்த 
மானங்கெட்ட மசுருகளே 
அடக்கு முறை ஆட்சியில்
அடமானம் வைத்த 
பிணம் தின்னி கழுகுகளே
இயேசு 
உயிர்த்தெழு முன் ஈழம் 
உயிர்ப்பரித்த ஓனாய்களே 
இனப்படுகொலைக்காக
ஈழ இரத்தம் குடிக்கும்
அசிங்கங்களே
நாமும் ஒரு நாள்
மனமதில் புழுகி 
மண் தனில் அழுகி 
மரணிப்போம் என்பதை மறந்து 
குறுக்குவழியில் காய் நகர்த்தும் 
குள்ள நரிகளே 
இனியாவது ஒரு விதி செய்வோம்
இயற்கைக்கு மாறாக 
இனி ஒரு மரணம் இல்லையென்று !

மரபணு மாற்றமில்லை ...!

புத்தனின் சிரசை 
பிடிங்கி கடவுளின் 
உடலில் ஒட்டவைத்தேன்
எந்த ஒரு 
மரபணு மாற்றமும்
நிகழ்த்தப்படவில்லை 

பகல் கனவு ...!

ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும்
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார்
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார்
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார்
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் 
மது கடையை மூடியிருப்பார் 
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் 
என பகல் கனவு கண்டால் தங்கை !

வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

எந்த தீபத்தில் தெரிகிறது
வெற்றியின் சுடரொளி 
எந்த சூடத்தில் மிளிர்கிறது
திருஷ்டியின் வெகுமதி 
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது
பாவத்தின் சிறுதுளி
எந்த பணத்தில் நிறைகிறது
மரணத்தின் உயிர்வலி
பின் 
எதற்காக கல்லை கடவுளென்றும்
கருவறையை கல்லென்றும் 
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

ஓட்டு கேட்ட ஆட்டு மந்தைகள் ...!

சாக்கடை பாயிந்த 
சந்தனமரத்தில்
சகல விதமான 
பறவைகளின் ரிங்காரம்
இடையே ...
சமத்துவக் காற்று
சாதியற்ற கிளைகள்
குள்ள நரிப் பூக்கள்
கொலைகாரக் கனிகள்
பட்டு திருந்திய கட்டுமரம்
பாடாய் பாடுபடுத்தும் படர் தாமரை குளம்
எனவெல்லாம் பொய் கூறும்
ஆட்டு மந்தைகள்
ஆங்காங்கே ஓட்டு
கேட்டு வருவதைக்கண்டு 
சந்தனமரம் சிரிப்பாய் சிரித்ததாம்
முட்டால் மனிதனே
என்னில் இருப்பது
அகிம்சையின் சுவாசம்
அதை அரிந்தும்
தலையசைக்கிற நீ
எப்படி நாளைய 
தலைவனை தேர்ந்தெடுப்பாய்
பணம் பத்தும் செய்யும் 
என்பதை மறந்து
அந்த ஒரு கணம்
பைத்தியமாகிவிடாமல்
நின்று நிதானமாக 
தேர்வு செய் 
உனக்கோ எனக்கோ
ஒர்
உன்மை ஜெயிக்கலாம் !

பெண்ணினமே இல்லாமல் போகலம் ...!


காமம்
இங்கே கடலைப் போல்
விரிந்து கிடக்கிறது

கட்டி வைத்து உதைப்பதற்கும்
விட்டுக் கொடுத்து பிழைப்பதற்கும்
பட்டுவாட நடத்துகிறது அரசு

கைவசம் எல்லாம் இருந்தும்
வலை வீசி தேட தேவையில்லை
எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும்
ராணுவத்தை போல்
சுட்டுத்தள்ள ஏன் இன்னும் தயக்கம்

இனி பொம்மையில் கூட
பெண்ணினன் இல்லாமல் போகலம்
பொறுத்திருக்காதே பொங்கி எழு
சுனாமியைப் போல்

அன்று பிறக்கும்
ஆனினமே ஒன்றிருந்தால் அது
அன்பான, பண்பான ஒழுக்கமான
இனமென்று !

(வார மலர் ஏப்ரல் 7, 2019)

வார விடுமுறை ...!

வார விடுமுறை
வழக்கத்திற்கு மாறாக
குரைக்கும் நாய்
பதட்டத்துடன் எட்டிப் பார்க்கிறாள்
குடி போதையில் புலம்பும் 
எதிர் வீட்டுக்காரர்
சற்று தெளிந்த முகத்துடன்
திரும்புகையில்
விதவை கோலத்தில் தாய் !

புத்தகங்கள் !

என் 
அலைபேசி உரையாடலை
ஒட்டுக் கேட்டதால் 
விலைக்கு போடப்பட்டது
அந்த அறையில் 
அடிக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் 

சாதி ...!

சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி 
மதம் பார்த்து மூடுவதில்லை மண் 
இனம் பார்த்து வீசுவதில்லை காற்று
மொழி பார்த்து பேசுவதில்லை மழை
நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன்
மனிதா 
நீ 
மட்டும் ஏன்
இத்தனையும் பார்க்க பழகிக்கொண்டாய் !  

(பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு)

அழகிய காடே

அழகிய காடே
அகமும் புறமுமாய் 
அசையும் கிளையே
பூத்து குலுங்கும் மலரே
புத்துணர்சி தரும் அருவியே
கிளிகள் பாட மயில்கள் ஆட
வேட்டையாடும் விலங்குகளுக்கு
வெளிச்சம் கொடுக்கும் சூரியனே
பழமோ காயோ 
பசித்துண்ணும்
பகலை படமெடுக்கும் 
நீர் வீழ்ச்சியே
குரல் வளையை 
அறுக்க கிறுகிறுக்கும் 
மூங்கில் காடே
முந்தான முகிலில் 
முகம் பார்க்கும் 
வானவில்லே
வரப்புக்குள்ளே 
வாய் சவடால் 
அடிக்கும் நாரையே
நடந்து ஓடும் 
விட்டில் பூச்சியின் 
விருந்தினமே
வளைந்து நெழிந்து
வான் நோக்கா
பாம்பினமே
இலைகள் சலசலப்பில்
இயற்கையாய் நீந்தும்
மீனவளே
தூரத்து ரயிலோசையில்
சடசடவென இறகு விரிக்கும்
பச்சிகளே
வில்லும் அம்பும் 
தைக்காத ஈரத்தில்
காதல் சுவடுகள் பதித்த 
மரம் கொத்தியே
ஆகா இவ்வளவு 
அழகான உன்னை 
இன்டர்னெட் உலகத்தில் 
கண்டு கழித்த யெனக்கு
இதயம் மட்டு எப்படி 
இயற்கையானது !

கோயில் மணியோசை ...!

ஒரே அலறல் சத்தம் கேட்டு எழுகையில் எனது ஹவுஸ் ஓனர் குடும்பத்துடன் சென்ற கார் விபத்தில் நால்வரும்  மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட செய்தி கேட்டு சிறு புன்னகையுடன் கோயில் வாசலை நோக்கி விரைந்தேன் அங்கே சிலுவையில் அறைந்த கடவுளை கண்டு "பாவத்தின் சம்பளம் மரணம்" நிஜம் தான் என்பதை இன்று உணர்கிறேன்  தகப்பனே என்ன காலம் தான் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது என்று விட்டிற்கு வந்தாள் 
அங்கே அக்கம் பக்கத்தினர் அந்த விபத்தில் ஒருவர் 24 மணி நேரம் கெடுவில் இருப்பதாகவும் மற்ற இருவருக்கு தலையில் பலத்த காயம் அறுவை சிகிக்சை செய்ய இரண்டு லாசம் தேவை அடுத்து அவர்களுடன் வந்த சிறு குழந்தையும் மயக்கத்தில் இருக்கிறது எல்லாம் அவர்கள் செய்த பாவம் என பேசிக்கொண்டனர் 
இப்போது ஹவுஸ் ஓனரின் மகன் பணத்திற்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான் இறுதியில் வீட்டை விற்க முடிவு செய்து பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் அங்கு அவன் மாமா 24 மணி நேர கெடு முடிந்து இருந்துவிட்டார் கொண்டு சென்ற பணத்தில் 2.5 லட்சம் கட்டி பாடியை அடக்கம் செய்தான்
அடுத்து அவனின் அம்மா மற்றும் அக்கா இருவருக்கும் அறுவை சிகிக்சை செய்ய 2.5 லட்சம் கட்டிவிட்டு வெளியில் அமர்ந்தான் டாக்டர் வந்து ஸாரி நங்கள் முயற்சி செய்தும்  பலன் அளிக்கவில்லை இருவரும் உயிர் துறந்தனர் இந்த  பாடியை வாங்க 5 லட்சமும் அத்துடன் குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் செலவு 50 ஆயிரத்தையும் சேர்த்து காட்டுங்கள் என்றதும் பணத்தைக் கட்டி இறுதிச்சடங்கை முடித்தான் எல்லாவற்றிற்கும் காரணம் அவள் கொடுத்த சாபம் தான் இதற்குமேலுமா அவள் கடனை கொடுக்க வேண்டும்  கூடாது என யோசிக்கையில் 
வீட்டின் பேரில் கடன் கொடுத்தவர்கள் வந்து 3 மதம் அவகாசம் கொடுத்தார்கள் அவனும் சரி என்றான்
இரண்டும் மாதம் கடந்தது அந்த பணக்காரர் பேசிய தொகை போக மீதி பணத்தை கொடுத்தார் அதில் கொஞ்சம்  பணம் குறைவாக இருந்தது ஏன் என கேட்டதும் நீ வாங்கியக் கடனை கொடுத்துவிட்டேன் நீ ஏமாற்றியது போல் நானும் அவர்களை ஏமாற்ற தயாராகவில்லை இந்த வீட்டை காட்டி தானே கடன் வாங்கினாய் அதான் நானே அந்த கடனை அடைந்துவிட்டேன். ஏனா  எங்கள் தலைமுறையாவது நல்லா இருக்க வேண்டுமே அதற்கு தான். இன்னும் ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்துவிடு என பேசி திரும்புகையில் அவனது முடிவை அமோதிப்பது போல தூரத்தே கோயில் மணியோசை கேட்டது. 

எங்கள் தாய்மொழி !

செம்மொழியான தமிழ் மொழி எங்கும் 
செழித்து வளரும் முதல் மொழி 
அகரம் படைத்த அடைமொழி -எங்கள் 
அகிலம் போற்றும் ஒரே மொழி - அது எங்கள் தாய்மொழி

ஓவியனின் மொழியை உதிரத்தில் படைத்தான்  
காவியனின் மொழியை கற்பனையில் வளர்த்தான் 
வியர்வையின் மொழியை பசியில் மறைத்தான் 
விதியின் மொழியை எதனில் வைத்தானோ !

அறிவின் மொழியை ஞானத்தில் புதைத்தான் 
அன்பின் மொழியை இறக்கத்தில் அணைத்தான் 
உறவின் மொழியை ஜாதியில் திணித்தான் 
உள்ளத்தின் மொழியை எதனில் வைத்தானோ !

பிறப்பின் மொழியை அழுகையில் இணைத்தான்  
பிரிவின் மொழியை நொடியில் மறைத்தான் 
கனவின் மொழியை விடியலில் முடித்தான் 
கடலின் மொழியை எதனில் வைத்தானோ !

ஒழுக்கத்தின் மொழியை கல்வியில் விதைத்தான் 
அறத்தின் மொழியை ஆழியில் மடித்தான் 
இயற்கையின் மொழியை பசுமையில் ரசித்தான் 
ஏழ்மையின் மொழியை எதனில் வைத்தானோ 

தேவனின் மொழியை மௌனத்தில் உரைத்தான் 
தேகத்தின் மொழியை காதலில் இசைத்தான் 
யாக த்தின் மொழியை நீதியில் எரித்தான் 
யார் மொழியின் இறப்பை எதனில் வைத்தானோ ! 

மறக்கவும் மாட்டோம் !ராணுவம் எங்கள் ராணுவம் இன்று
ரணமாகிப் போனதே 
யார் மனம் இதில் யார் மனம் இன்று 
கனவாகிப் போனதே 

கிராமத்தில் பூத்த மலரெல்லாம் 
காஷ்மீரில் மணக்கிறதே என்று 
மார் தட்டிய தந்தை முகம் 
மரணத்தில் தவிக்கின்றதே 

பூவும் பொட்டும் பொன் தாலி 
சிரிப்புடன் பொழுதைக்கழிக்கும் 
மனைவியின் கூந்தலில் இன்று 
மல்லிகை சுடுகின்றதே 

ஆசை மகன் நேச மகனின் 
ஆடையை அணைத்துக்கொண்டு 
அழுது புலம்பும் அன்னையின் 
கண்ணீரில் நிதியுதவி நனைகின்றதே

அண்ணே மரணம் தான்
ஆயுசும் குறைவு தான்
ஆனாலும் அனுப்பிவைத்தோம்
வீணாப்போன தாக்குதலால் இன்று
வீர மரணம் அடைந்தாயே !

“ ''மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.'' புல்வாமா தாக்குதலில் இறந்த எங்கள் வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.அப்பா - பாடல் !


மரணித்தவர் என் தந்தை இன்று
மலர் விழி சுடுகின்றது
கைகளுக்கு ஊனமில்லை அவர்
கால்களுக்கும் ஊனமில்லை இறைவா 
இதயத்தை மட்டும் ஊனமாக்கிவிட்டு என்னை
இறுதிவரை அழுக விட்டாயோ !
காக்கைக்கும் மரணமுண்டு அதன்
கண்ணீரை ஏன் மறைத்தாய் - இறைவா 
பூக்களுக்கும் மனமுண்டு அதைப் 
புதைப்பதை ஏன் மறைத்தாய் - இறைவா 
ஈக்களுக்கும் வாழ்க்கையுண்டு அதை 
ஈன்றவரை ஏன் மறைத்தாய் - இறைவா 
பசுவுக்கும் மடியுண்டு அதன்
பால் பருகுவதை ஏன் மறைத்தாய் - இறைவா 
நாய்களுக்கும் நன்றியுண்டு அதன்  
நலமதில் தீங்கை ஏன் மறைத்தாய் - இறைவா 
எதனுடன் எதை மறைத்தாலும் 
என்னுயிர் துடிக்கின்றது இறைவா
சொல் இம்மரணம் விதியா இல்லை
நான் செய்த பிழையா 
அங்கே பிழையென்று நானறிந்தால் இறந்திருப்பேன் 
இல்லை விதியென நீயுணர்த்தினால் பிழைத்திருப்பேன்
ஏதுவெனத் தெரியாமல் இறக்கின்றேன் 
எதிலும் என் தந்தையை நினைக்கின்றேன் 

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018
படைப்பு வளம் - வசீகரன்
தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து விரிந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான், அவனது உலகம் பெரியது கவிவடிவம் சிறியதாக இருக்கலாம் தான். காட்சி வடிவம் உலக அளவில் பெரியதாகவே இருக்கிறது.நம் படைப்பாளனுக்கு படைப்பு வறுமை என்பது இல்லவே இல்லை.

காண்பது, கேட்பது, பேசுவது, அறிவது, புரிவது என எல்லாமே அவன் உள்ளத்தில் ஹைக்கூப் பூக்களாகத் துளிர்க்கின்றன, பொருள் சிக்கனம் என்பது அவனிடம் இல்லவே இல்லை. அவனது கற்பனைக்கு வானம் கூட இல்லை எல்லை எனலாம்.

இயற்கை நயம், தத்துவம், வளமை, வறுமை,சோகம், மகிழ்ச்சி, நையாடல் என எல்லாமே ஹைக்கூ. 

படைப்பாளனுக்கு கை கொடுக்கின்றன. எண்ண எண்ண இனிக்குது என்பது போல் 'அட இதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம்' என்ற உந்துதலை வாசிப்பவனுக்குள் அழுத்தமாகப் பதிக்கின்றன.

மின்மினிக் கனவுகள் என்றொரு ஹைக்கூ நூல் கைகளுக்குள் வந்தது
2017 ஆம் ஆண்டின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூலில் 4"00" ஹைக்கூக்கள் குவிந்து கிடக்க்ர்ன்றன. நாம் முன் பத்தியில் சொன்ன மாதிரி அத்தனையையும் ஹைக்கூவாகப் படம் பிடித்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியரின் பெயர் : "ஹிஷாலி"

2011 இல் இருந்து எழுதுகோலை கையில் தூக்கி இருக்கும் இந்தப் பெண்கவிக்கு இதுதான் முதல் நூல் என்பது வியப்பு, அதற்குள் "மித்ரா"   துளிப்பா விருதை எல்லாம் வாங்கி வைத்திருக்கும் புத்திசாலிப் பாவலர் என்றும் சொல்லலாம்.

இந்த நூலுக்குள் நுழைந்து சில ஹைக்கூ மின்மினிகளை பிடித்துக் கொண்டு வந்து பார்க்கலாமா?

மரித்த பின்பு
உயிர்த் தெழுகிறாள்

இது ஒரு ஹைக்கூவின் முதலிரு அடிகள் அட .... என்னவொரு முரணில் மலர்ந்திருக்கிறது வரிகள். இறந்த பின்பு உயிர்த்தெழல் என்றால் இயேசுனாதரா? என்ற கேள்வி எழுகிறதா? பெண்பாலில் அல்லவா இரண்டாம் அடி நிறைவாகி நிற்கிறது,? யார் அவள்?
விழிபிதுங்கிய ஈற்றடியைத் தேடுகிறது 

நீதி தேவதை 

இது தான் அந்த நெத்தியடியான ஈற்றடி. எத்தனை வழக்குகள் ..... வாய்தாக்களால் நீதி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது.
நீதி கிடைக்கும் போது வாதியின் ஆயூளோ பிரதிவாதியின் ஆயுளோ கூட முடிந்து போயிருக்கலாம் தானே. எனவே காலம் தாழ்த்திக் கிடைத்தாலும் அந்த நீதியும் செத்த நீதிதான் செத்தபின்பு யார்தான் வாழ்த்துவது?

சிந்தனைப் பொறியில் தீப்பற்ற வைக்கும் ஹைக்கூ இது.

கடுமையான குளிர் 
போர்த்திக் கொள்கிறது 

என்ற இரு அடிகளைப் படித்துவிட்டு, மானோ? மயிலோ? குயிலோ? என்று உங்களுக்குள் நீங்களே கேட்டுக் கொண்டால் அது தான் கவிஞரின் வெற்றி. ஆனால் அவரோ வேறு பதில் ஈற்றடியாய் சொல்ல்வார். நம் ஹிஷாலி சொல்கிறார்....

மேகம்

"மேகம் " என்பது தான் அது தரும் ஈற்றடி. என்ன நையாண்டி . மேகத்தின் வரவால்தானே வெப்ப நிலை இறங்கி குளிர் தாளாமல் போர்த்திக் கொள்கிறது என்பது தான் நம் கவிஞரின் மித நயமான மிஞ்சிய கற்பனை . மற்றொரு கவியிலும் மழையை அழகாக்க காட்சிப்படுத்துகிறார் பாருங்கள்.

கிழிந்த வானம்
தைத்துக் கொண்டிருக்கின்றன
மழைத்துளிகள்

என்ன ஓர் இயற்கை எழில் காட்சிப் பதிவு  வானம் கிழிந்தது " என்பது இடி மின்னலை எடுத்துக் காட்டும் ஒரு பழஞ்சொற் பதிவுதான். அந்தக் கிழிசலை தைப்பதாகக் கூறி , மழைத் துளிகளையே நூலாக்க கொண்டுவந்த கவிஞரின் நேர்த்தியான கற்பனைத் திறன் சுவைக்கிறது அல்லவா ? 

நிரம்பிக் கிடக்கும் கவிக்குவியல்களின் நடுவில் பல மின்மினிப் பூச்சிகள் ஒளி வெட்டிக் கொண்டே ஊடுருவிக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

மண் குதிரை / ஏறி இறங்கியது / சிறுவர் மனசு -  எனக் கூறி நம்மையும் சிறுவர் ஆக்குகிறார்.

புதுமனைப் புகுவிழா / நிரம்பி வ்ழிகிறது / வாங்கிய கடன் - எனக் கூறி சொந்த வீடு கட்டும் திண்டாட்டத்தை ஒற்றைச் சொல்லில் முன் நிறுத்துகிறார்.

அசையும் விழிகள் நடுவே / அசையாமல் நிற்கிறது / ஒரு கனவு - என்று கூறி தனி ஒரு மனிதனின் கனவுத் தேடல்களில் நுழையும் கனவுகளை காட்சிப்படுத்துகிறார்.

அன்னதானம் / பசியோடு நிற்கிறது / கோவில்மாடு - என்று கூறி உயிர் நேயத்தைப் பதிக்கிறார்.
ஹிஷாலி பலசாலியாக வருவார் என்றே தோன்றுகிறது. பெயரில் நுழைத்திருக்கும் வட உச்சரிப்பு எழுத்துக்கள் தான் அந்நியப்படுத்துகின்றன. 

கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019

கலாச்சர மோகம் 
முதல் பலி
பூப்படையாதப் பெண்
யாருமற்ற ஏரியில்
இலவசமாக படகோட்டும்
வாத்துக்கூட்டம்
கொழுந்து வெற்றிலை
சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது
புது பெண் முகம்
பறவையின் புலம்பல்
அருகே முனுமுனுக்கும் 
தொட்டால் சிணுங்கி
சீமந்த விழா
முதிர் கன்னியின் கையில்
கல்யாண வளையல்

நான் நீ இந்த உலகம் !

உன் பார்வையின் சரித்திரம்
புரிந்திருந்தால் விலகிருப்பேன் 
நான் நீ இந்த உலகம்
இவற்றில் இருந்து !

அம்மா !

சவமும் சாமியும்
ஒன்றெனக் கருதி
கலங்கி நிக்கிறேன்
கண்ணெதிரில் அம்மா !

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...