இளைய மாது ...!


ஆசைகள் ஆயிரம்
அவஸ்தைகள் ஓராயிரம்
இருந்தும் விழுந்தேன் அவன்
இதயக் கருவறையில்

மாதங்கள் கடந்தாலும்
மரணங்கள் கடக்கவில்லை
நினைவால் வாடுகிறேன் என்
நிஜத்தால் தேடுகிறேன் அன்பே

உனதால் பட்ட நினைவுகளை
உயிரால் சுமக்கிறேன் உறவே
நொடியால் வாழ்ந்த வாழ்க்கை
நோயால் சாகும் முன்

தீயாய் வந்து அணைப்பாயா இல்லை
தீரா வலியால் என்னை
நினைப்பாயா சொல் மனமே

நோவால் காத்திருக்கிறேன் என்
நேசத்தால் உன் சுவாசக்
காற்றில் கலக்க உயிரே
காதல் சொல்லும்
கன்னி மலராய் இதோ

கடல் தாண்டி வாருகிறேன்
தென்றல் மலராய்
உன் தேகத்தில் புகுந்து
உயிர் தாகத்தில் நீங்க

இதயமாய் சற்று இளைப்பாற
இதயமே இசைப்பாயா
உன் இறுதி வரவை எதிர்
நோக்கி ஏங்கும் இளைய மாது ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)