நீ - நான் ...!


நீ இலையாய் இருந்தால்
நான் காற்றாய் தொடுவேன்

நீ நிலமாய் இருந்தால்
நான் செருப்பாய் பின்வருவேன்

நீ நெருப்பாய் இருந்தால்
நான் புகையாய் அணைத்திடுவேன்

நீ உணவாய் இருந்தால்
நான் ருசியாய் வாழ்ந்திடுவேன்

நீ நிலவாய் இருந்தால்
நான் பகலாய் மாறிடுவேன்

நீ உயிராய் இருந்தால்
நான் உடையாய் சேர்ந்திடுவேன்

நீ மொழியாய் இருந்தால்
நான் விழியாய் வரைந்திடுவேன்

அன்பே இன்று !
நீ கவிதையாய் வந்ததால்
நான் கவிஞ்கனாய் உயிர்தெழுந்தேன்
காதலியே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - நவம்பர் -2017

சாயும் காலம்  தள்ளாடியபடியே  கிணற்றில் விழுந்தது நிலா  பட்டம் விட்டவன்  கையில் அறுந்துகிடக்கி...