ஒரு ஊமையின் அழுகுரல் ....!


மனத்தால் நான் ஒரு அநாதை
நினைவால் நான் தூரத்து தேசம்
உயிரால் நான் ஒரு பிணம்
இருந்தும் வாழ்கிறேன்

என் பெண்மையை நிலைநிறுத்த
இந்த மண்ணில் என்றுமே
கண்ணீர் பூக்களாய் கரையும்
கானல் நீரில்

துடைக்க கரங்கள் இருந்தும்
துக்கத்தில் கண்கள் கலைந்து
சொல்லி மறக்க யாரும்மில்லை என்
சொந்த சுமையை இறக்க யாருமில்லை

வந்து சுமையும் வாழ்வில் நிலைப்பதில்லை
வருமுன் நடப்பதை நிறுத்த நேரமும்மில்லை
கர்ப்பிண் அரசியாய் காலத்தை கடக்கிறேன்
காற்றின் சுவாசத்தில் காதறுந்த பட்டமாய்
காலத்தை நோக்கி ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு