காதல் அழுக்கு...!


எங்கோ இருந்து
என்னை ஆர்பரிக்கும்
அன்பிற்கு

இங்கே இருந்து
இசைக்கிறேன்
என் இதயமே

உனக்கும் எனக்கும்
இடைவெளிகள் இல்லை
இதயம் இருக்கும் வரை

பார்வைகள் இல்லை
பழையவை புதியனவாய்
பூக்கும் கனவுகள் உள்ளவரை

நேர் அலைகள் இல்லை
தொலை தொடர்புகள்
தொடரும் வரை
காதலைகள் காதலிக்கும்

சிறு சிறு சண்டைகள்
சிலிர்க்க வைக்கும்
முத்தங்கள்

இனம் புரியா துன்பங்கள்
இனிக்கும்
கவி சுவைகள்

பலரறியா பாசங்கள்
பருவத்தின்
ஊடல்கள்

நிலவும் மலராகும்
உன் நிழலும்
உயிராகும் உன்
புகைப்பட தேடலில்

நிலையென நீ என்
நெஞ்சில் இருந்தால்
உணவும் உனதாகும்
உடையும் ஒழுக்கமாகும்

அழுக்காகி போனாலும்
பழுக்காத நம் காதல்
துடிப்பாக வாழ்ந்திருக்கும்
உன் துணையாக நான்
வரும் வரை

அன்பே நீ எண்ணில்
உள்ளதை உள்ளபடி
சொல்லிவிட்டேன்

ஓர்இரு ஆண்டுக்குள்
என் உள்ளத்தை
கொள்ளையிட வா

பஞ்சணையும் பசித்திருக்கு
பால்பழமும் ருசித்திருக்க
வஞ்சனை கொள்ளும்
வாழ்க்கையை தந்து நம்
மஞ்சனையில் பள்ளி
கொள்வோம்

பருவத்தின் உருவங்கள்
பாதை மாற்றும்
ஹர்மொங்களுக்கு
தலைமுறை என்று
பெயரிடுவோம்

நாளைய மண்ணில்
நடமாடும்
காதலின் எடுத்துக்காட்டாய்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...