ஹிஷாலீ ஹைக்கூ - 1


கடலோர சிலைகளுக்கு  
கைதட்டும் மாலைகள்  
விளம்பரப்படமாய் குப்பைதொட்டியில்   
பாயும் வாகனத்தில்  
தூய காற்றும் துயரப்படுகிறது  
கண்ணுள்ள மனிதனால்   
சிலைக்கு ஒளிகாட்டும் மனிதன் 
மனச்சிறைக்கு வழிகாட்ட  
லஞ்சம் வாங்குகிறான்   
 பல கோடி கண்களுக்கு  
 பகலாய் மின்னும் 
 ஓரு கோடி வெண்ணிலா .
எண்ணங்கள் ஆயிரம் 
வண்ணங்கள் நூறாயிரம் 
முடிவில்லா ஆசை ....! 
ஆவிகளின் கண்ணீர் 
தேநீராக பிறக்கிறது 
மழை துளி...!
நெடுநாள் பொறுமை 
கெடு நாள் ஆத்திரம் 
ஒரே நொடியில் கெட்ட பேர். 
கழிப்பிடமும் இருப்பிடமும் காசு 
அறிவை சுத்தம் செய்தது 
தனியார் பள்ளி ...!
முதுமை 
வழுக்கையில் தெரிகிறது 
செழுமை ....!
மனதை விட அதிகமாய் 
வலித்தது மானம் 
இதயமற்ற பெண்களால் .....!

4 comments:

  1. அன்பின் ஹிஷாலீ - குறும் கவிதைகள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. பின் பதிவாக இருந்தாலும் முன் நின்று வாழ்த்தியமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்

      Delete
  2. பிரசுரத்திற்கு அல்ல :

    அன்பின் ஹிஷாலீ

    வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம்
    http://blogintamil.blogspot.com

    18 மாதங்களீல் 1233 பதிவுகள் இட்டது இமாலயச் சாதனை தான். பதிவுலகில் பல பதிவர்களீன் மறுமொழிகள் பார்த்திருப்பீர்கள்

    வருகிற ஜூலை 8ம் நாள் திங்கள் கிழமை முதல் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க அன்புடன் அழைக்கிறேன்.

    இணக்கம் தெரிவித்த பின்னர் மேல் விபரம் அனுப்புகிறேன்.

    தங்களின் அனுபவத்தில் தாங்கள் பல பதிவர்களை அறிந்திருப்பிர்கள் - அதன் அடிப்படையில் ஆசிரியப் பொறுப்பு எளிதாக இருக்கும்.

    நாட்கள் நெருங்குவதனால் உடன் இணக்கம் தெரிவித்து மடல் எழுதுக.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பெரிய பொறுப்பு என்னை தேடி வரும் என்று நினைக்கவே இல்லை உங்கள் மடல் கண்டு நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தேன் இருந்தும் எனக்கு கொஞ்சம் பயம் இதற்கு நான் தகுதியனவாளா இல்லையா என்று . நானே நேரப் போக்கிற்காக அவ்வபோது எழுதுகிறேன் அதுவே ஒரு வியாதியாக தொற்றி விட்டதால் தினமும் ஒரு பதிவாவது இடவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராதா அதற்காகவே தினமு எப்படியாது ஒரு பதிவிட்டு விடுவேன் இதுதான் என் சுருக்க சுய பதிவு விவரம் .

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145