ஹிஷாலீ ஹைக்கூ - 7

உண்ட பயிரை அழித்து 
உறங்குகிறான் வீட்டில் 
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி 
யாருக்கும் சொந்தமில்லை 
சொந்தத்தை சுற்றுகிறது 
ஊர்சுற்றும் வாலிபன் 
வானம் அழுதால் மழை 
பூமி அழுதால் பிழை 
கண்ணீரே ஏழையின் நிலை 
 தாய் பாலா கள்ளிப் பாலா 
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது 
பெண் சிசு கொலை
 சிவப்பு வண்ணத்தில் 
சிலையலங்காரமாம் செத்தும் 
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
முதுகெலும்பு 
முன்னிருவிரல்கள் நடுவில் 
முதல் சுழியே பேனா
இருவிரல் நடுவே எம்மொழி 
இதயங்களையும் இமைக்கு 
விருந்தாக்கிறது கவிதை

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்