ஹிஷாலீ ஹைக்கூ - 6

பிரியாத உடலை 
பிரித்துக்காட்டும் கலை 
மருத்துவம் ...!
நிர்வாணமாய் 
நீல வண்ணப் பாடத்தில்
உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள்
நெய் சோறு
வேலைக்காரிக்கு 
நாயின் மிச்சம்
ஜாதிமதம் 
ஒழிப்பு
ரத்த தானம்
எண்ணற்ற உயிர்கள்
பூமியில் இளைப்பாறுகிறது 
சுமைதாங்கிகள்
கடந்த நாட்கள் 
இன்றும் 
கவிதை...
முகப்புகள் கிழிந்தது 
குப்பைதொட்டியில்
புத்தகம்
கல்லறை தொடா மானிடர்கள் 
தஞ்சம் காற்றின் சுவாசத்தில் 
கைம்மாறு கருதாதவர்கள்
அகிம்சையின் சுதந்திரம் 
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில் 
தியாகியின் அடையாளம்
அடுக்குமாடி
அழகு பொருள்
திறவா காப்பியங்கள்
சுடும் வெந்நீரில் 
சுவையான நினைவுகள் 
மன்னிப்பு.
வரி வாங்க விற்க
வாழ்க்கை வயதில் நிற்க 
ஏலம் போகிறது பணம் 
வஞ்சத்தில் பஞ்சத்தை தேடுகிறான் 
பசிக்கும் ருசிக்கும் 
திருடியவன் 
காயிச்சி வடித்தாலும் .
வெகு தூரமில்லை ...
மரணம் !
சட்டத்தில் ஓட்டை 
இருகரம் இணைகிறது 
சாக்கடையுடன் சந்தனம்
வெட்கத்தை மறந்து 
துக்கத்தில் பசியாற்றுகிறாள் 
விலை மாது
விலைக்கு குழந்தையானவள் 
விரும்பாத தேகத்தில் 
விதைக்கிறாள் HIV 
தமிழில் விதைத்த கல்வி 
அறுவடையாகிறது 
ஆங்கிலத்தில்
சிகரட்டில் இதயம் இறக்கும் 
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும் 
இருவிரல் துணையுடன் ....
மொழியுமில்லை 
இசையுமில்லை 
மழலையின் சிரிப்பழுகையில் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145