ஹிஷாலீ ஹைக்கூ - 5

அசிங்கத்தின் அடிமையாய் படிக்கட்டில் 
அடைகாக்கும் மிதியடிகள் 
ஏற்றத்தாழ்வில்லா பண்பு
மண்ணிற்கு உரமாகும் மீன்விழி
மற்றொரு உயிருக்கு பூவிழியாய் 
கண் தானம்
முட்டாள் மாணவனையும் 
விருது படைக்கும் துருப்பு சீட்டு 
குருவணக்கம்
ஆர்பரிக்கும் உயிருக்கு 
அடைக்கல உயிர் ஓவியம் 
இரத்த தானம்
பல வண்ணங்கள்
சேர்ந்து பேசும் ஓவியம் 
ஒருமைப்பாடு
பகலின் முடிவாய் விழித்திருக்கும் 
நிலாவெள்ளி 
தியாகத்தின் திருப்புமுனை
பொதி சுமந்த கழுதை 
சலவை கருவியில் சங்கம் 
ஒற்றுமையிலும் வேற்றுமை
உதிரத்தின் சீற்றம் 
விதி முடிக்கா உயிரின் ஜெனனம் 
இரத்த தானம்
ஜெனிக்கும் இதயத்தில் 
கணிக்கும் மருந்தாய் 
இரத்த தானம்
விரலின் மாற்றத்தில் 
விசித்திர அழகிகளாய் 
அறுவடை நகங்கள் ......
பிறக்கிறேன் இறக்கிறேன் 
இருந்தும் புன்னகை பூவாய் 
சிரிக்கிறேன் முள்ளைகண்டு
சுரக்கும் மாதங்கள் பத்தானாலும் 
பிறக்கும் பால் ....... 
அமிர்தமாகும் அன்னை மடியில்
தொடும் வானமாய் 
தொலைகிறேன் நிழலில்லா 
கல்லறையில் நிம்மதியை தேடி
எண்ண இயந்திரத்தில் 
எழுதுகோலின்றி இயற்றும் 
நிழல் படம் கனவு
உயிராய் உரமாய் 
உலா வரும் உருவங்கள் 
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது 
ஒரு பிடி மண்ணில் 
பிச்சை போடும் உரமே 
பசியின் பாவயாத்திரை
இருளின் இருட்டறையில் 
இதயம் உறங்கா 
நித்திரையே தூக்கம் 
களிமண்ணில் கலைநயம் 
கற்கும் கைகள் தஞ்சையில் 
தலையாட்டு பொம்மை
தர்மங்கள் பல செய்தால் 
கருமங்கள் மறைந்து 
கண்ணீர் சிறக்கும் 
வளைக்க முடியவில்லை 
சுருட்ட முடியவில்லை இருந்தும் 
நிழலாகிறது வானம்பார்த்த பூமி

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145