ஹிஷாலீ ஹைக்கூ - 2

ஐம்பது ரூபாய் குண்டு 
தோற்றது அகிம்சை
வாய்மையே வெல்லும்
ஏறுவரிசையில் வருடம் 
இறங்குவரிசையில் இதயம் 
365 1/4 முடிகிறது 
காணமுடியா இசையில் கூட 
கருணை மறைந்திருக்கிறது 
காற்றின் அசைவில் .....!
மழையில் பிரசவம் 
ஒரே செல் காளான் 
மனிதனுக்கு நல் மருந்து.
ABCD யில் இதயம் 
இந்தியாவில் நல் உதயம் 
வளராத தமிழர்கள்
அடிக்கும் இமைகள் 
இடியே இல்லாமல் 
பொழிகிறது மழை
தினமும் ஒரு முறை 
பிறக்கும் இறக்கும் 
முடிவில்லா எண்ணிக்கை.
சுற்றுவதும் தெரியவில்லை 
சுமப்பதும் புரியவில்லை 
களைப்பில்லா பூமி ..........!
ஆறில் விதைத்தது 
அறுபதில் அறுவடை 
முடியாத வரவும் செலவும்..
கட்டுமான பொருட்களுக்கு 
கட்டுக் கட்டாய் நோட்டுகள் 
விலை தராசில் கல்வி .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்